Friday 16 April 2010 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சாதம் -2

தே.பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பெரிய கத்திரிக்காய் - 1
உதிராக வடித்த சாதம் - 3 கப்
நீள வாக்கில் அரிந்த வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
முந்திரி -தேவைக்கு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எள் -1/2 டீஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கிராம்பு - 3
பிரியாணி இலை - 3
முளைக்கட்டிய வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து வைக்கவும்.அதே கடாயில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+பச்சை மிளகாய்+கத்திரிக்காய்+உப்பு அனைத்தையும் நன்கு எண்ணெயிலேயே வதக்கவும்.தண்ணீர் ஊற்றக்கூடாது.

*அனைத்தும் நன்கு வதங்கியதும் பொடித்து பொடியைத் தூவி நன்கு வதக்கி ஆறவைக்கவும்.

*ஆறியதும் சாதம் சேர்த்து நன்கு கிளறி முந்திரி சேர்த்து பரிமாறவும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

மன்னார்குடி said...

எப்படி டெய்லி விதவிதமா செஞ்சி கலக்குறீங்க?! சூப்பர்.

சசிகுமார் said...

நல்லா சாப்பாட்டு வேலையில பதிவு போட்டு இருக்கீங்க இன்னும் பசிய கிளப்புகிறது பதிவு .
நல்ல பதிவு அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Pavithra Srihari said...

athu thaane mannarkudi avunga ketta maathiri eppadi puthusu puthusa daily seireenga... Superaa irukku simple aavum irukku

Priya said...

முளைக்கட்டிய வெந்தயத்தில் கூட தாளிக்கலாமா?
நான் நெட்ல பார்த்து இதே மாதிரி ஒரு ரெசிபி செய்து இருக்கேன். ஆனா உங்க ரெசிபி டோட்டலி டிஃப்ரென்டா இருக்கு. கண்டிப்பா இதை செய்து பார்க்கணும்.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...சூப்பர்ப்...

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா .

Priya dharshini said...

eppave seithu sappidanum pola eruku sashiga akka..

Menaga Sathia said...

சமையலில் ஒரு ஆர்வம் அவ்வளவுதான்.நன்றி சகோ!!

பசியை கிளப்பிட்டேனா அப்போ உடனே செய்து சாப்பிடுங்க.நன்றி சசி!!

இதெல்லாம் பழைய குறிப்புகள்,இப்போதான் போஸ்ட் செய்கிறேன்.நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

முளைக்கட்டிய வெந்தயத்தில் தாளிக்கலாம்,கசப்பு தெரியாது.செய்து பாருங்கள்,நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி ப்ரியா!!

Nithu Bala said...

superb ba irukku..nanum kathira sadam pannanum nenichukittu iruken...pannavey illa..pesama unga picture la irundhu konjam eduthu saptukaren:-)

Nithu Bala said...

Waiting for your leftover idly recipe..I too made something other than upma with idly.will be posting real soon..

Cool Lassi(e) said...

Thinamum oru variety! This variety rice is splendid. Enakku piditha saatham kathirikaai saatham!

Chitra said...

Thank you for the recipe.

ஸாதிகா said...

லஞ்ச் பாக்சுக்கு ஏற்ற சாதம்.கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட பிடித்துப்போகும்

karthik said...

தகவல் அருமை

எல் கே said...

hmm super.. ithe mathiri carrot satham kooda pannalam

Jaleela Kamal said...

கத்தரிக்க்காய் சாதமா பொடிதூவி செய்வதால் மணமாக இருக்கும், ஸாதிகா அக்கா சொல்வது போல் லன்ச் பாக்ஸ் க்கு ஏற்றது.

Menaga Sathia said...

தாராளமா எடுத்துக்குங்க,விரைவில் இட்லி ரெசிபி போடுகிறேன்.நன்றி நிது!!

நன்றி கூல்!!

நன்றி சித்ரா!!

நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி கார்த்திக்!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கார்த்திக்!!

நன்றி ஜலிலாக்கா!!

Priya Suresh said...

Super delicious brinjal sadham Menaga, neegha thaliga use pannina ingredientsla sprouted fenugreek seeds sounds truly unique...thanks for sharing..

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

vanathy said...

I will try this recipe very soon. Nice recipe.

Menaga Sathia said...

செய்து பாருங்கள்,நன்றி வானதி!!

Mahi said...

மேனகா,கத்தரிக்காய் சாதம் காரசாரமா நல்லா இருந்தது! நன்றி! :)

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி+நன்றி மகி!!

01 09 10