Friday 9 April 2010 | By: Menaga Sathia

வாழைக்காய் புட்டு

தே.பொருட்கள்:

வாழைக்காய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நசுக்கிய பூண்டுப்பல் - 4
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஊப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*வாழைக்காயை தோலோடு வேகவைக்கவும்.வெந்ததும் தோல் தனியாக வந்துவிடும்.

*வாழைக்காயினை துருவிக்கொள்ளவும்.அதனுடன் உப்பு+மஞ்சள்தூள்+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+நசுக்கிய பூண்டுப்பல்+பச்சை மிளகாயினை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் வாழைக்காயினை போட்டு நன்கு கிளறவும்.

*பொலபொலவென வரும்போது தேங்காய்த்துறுவலை சேர்த்து இறக்கவும்.

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

விக்னேஷ்வரி said...

இதை எங்க அம்மா வெங்காயம், தேங்காய் இல்லாம செய்வாங்க. நான் உங்க ரெசிபி முயற்சிக்கிறேன்.

மன்னார்குடி said...

nice.

'பரிவை' சே.குமார் said...

சுலபமான முறையில் அருமையான பதார்த்தம். நன்று

Pavithra Ramasamy said...

yeah my MIL has done this once when we had a small gathering at home . trust me nobody were able to make it out that it waas vazhakkai ...

great recipe ..

Priya said...

ரொம்ப சுலபமாவே இருக்கு, செய்து பார்த்திட்டு சொல்றேன்!

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையான சமாயல் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

வாழைக்காயால் வாய்வு தொந்திரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அத தவிர்க்க நான் இஞ்சியைத் துருவி சேர்த்து விடுவேன்.

சாருஸ்ரீராஜ் said...

மேனகா இதை நாங்க பொடிமாஸ்னு சொல்லுவோம் , புளிக்குழம்புடன் சாப்பிட ருசியாக இருக்கும்

karthik said...

சூப்பர இருக்கு

Asiya Omar said...

வாழைக்காய் புட்டு சூப்பர்,நான் வெள்ளையாகத்தான் செய்வதுண்டு.

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...நாங்களும் இதே மாதிரி தான் செய்வோம்...மிளகு தூள் + தேங்காய் துறுவலினை சேர்த்தது இல்லை...தேங்காய் துறுவல் சேர்த்தால் இன்னும் சுவையாக கண்டிப்பாக இருக்கும்...நேற்று தான் வாழைக்காய் புட்டு செய்தேன்...கண்டிப்பாக அடுத்தமுறை தேங்காய் சேர்த்து செய்து பார்க்கிறேன்...நன்றி...

Menaga Sathia said...

வெங்காயம்+தேங்காய் சேர்த்து செய்து பாருங்கள்,இன்னும் நல்லாயிருக்கும்.நன்றி விக்னேஷ்வரி!!

நன்றி சகோ!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பவித்ரா !!

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி ப்ரியா!!

நன்றி சங்கர்!!

நன்றி காஞ்சனா!! நானும டுத்தமுறை செய்யும்போது இஞ்சி சேர்க்கிறேன்..

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா.ஆமாம் இதனை காரகுழம்புடன் சாப்பிட செம ஜோராயிருக்கும்..

நன்றி கார்த்திக்!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

தேங்காய் சேர்த்து செய்து பாருங்கள்.இன்னும் நல்லாயிருக்கும்.நன்றி கீதா!!

vanathy said...

Menaga, looking yummy.

Cool Lassi(e) said...

Puttu looks splendid!Would love to have this with Rasam Saatham!

ஸாதிகா said...

அருமையான புட்டு

Nithu Bala said...

Wow! this is yummy...we call this podimas..but in our home we won't use sombu, pepper powder and garlic..just green chillies and coconut..think I'v to try your version..thanks for sharing this Dear..

Shama Nagarajan said...

nice yummy ...love this

Chitra said...

மஞ்சள் தூள் போட்டு செய்து பார்த்ததில்லை. மஞ்சள் போட்டால், பார்க்க நல்லா இருக்கு.

Gita Jaishankar said...

Puttu looks superb dear...my favorite combo for this is with rice and rasam :)

மனோ சாமிநாதன் said...

மேனகா!

வாழைக்காய் புட்டு அருமையாக இருக்கிறது. நாங்கள் இதை வாழைக்காய் பொடிமாஸ் என்று சொல்லுவோம்.

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி கூல் லஸ்ஸி!!

நன்றி ஸாதிகா அக்கா!!

இந்த முறையில் செய்து பாருங்கள்,நன்றாகயிருக்கும்.நன்றி நிது!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி சித்ரா!!

நன்றி கீதா!!

நன்றி மனோ அம்மா!!

Priya Suresh said...

Yennaku romba pidicha dish..looks awesome..

Padma said...

Love this kind of puttu... simple and delicious... perfect side dish with rice.

smiley said...

Bonjour Menu,

J'espère que vous allez bien, je vous ai envoyé un email sur le compte yahoo.

Est ce que vous pouvez aller le vérifier?

Bonne journée.

Ranjani

Thenammai Lakshmanan said...

அருமைடா மேனகா பார்த்தவுடனே பசிக்குது

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி பத்மா!!

உங்களுக்கு ஜிமெயில் அனுப்பியுள்ளேன் ரஞ்சனி பாருங்கள்..வருகைக்கு நன்றி!!

நன்றி தேனக்கா!!

சாமக்கோடங்கி said...

சமைக்க இப்போது முடியாது.. வீட்டில் சொல்லிப் பார்க்கிறேன்.. .யாராவது செய்து தந்தால் சாப்பிடுகிறேன்..

நன்றி..

R.Gopi said...

வாழைக்காய் புட்டு - இதில் சோம்புக்கு என்ன வேலை??

சோம்பு இல்லாமல் இருந்தால் ஒரு தனி சுவையாக இருக்கும்...

geetha said...

நாங்களும் இதனை வாழைக்காய் பொடிமாஸ்னுதான் சொல்வோம்.
சோம்புத்தூள்,மிளகுத்தூள் போட்டதில்லை.
மிளகாய்தூள்,தனியாத்தூள்,கரம்மாசாலா மட்டுமே சேர்ப்போம்.
இந்த முறையிலும் ட்ரை பண்ணி பார்க்கனும்.

Menaga Sathia said...

முடியும் போது செய்து பாருங்கள்.நன்றி பிரகாஷ்!!

ஸாதிகா அக்கா தங்கள் அன்பான விருதுக்கு மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்...

Menaga Sathia said...

சோம்பு சேர்ப்பதால் வாசனையாக இருக்கும்.நன்றி கோபி!!

இந்த முறையிலும் செய்து பாருங்கள்,நல்லாயிருக்கும்.நன்றி கீதா!!

ஹுஸைனம்மா said...

சாரி ஃபார் த லேட் கமிங்!!

//வாழைக்காயை தோலோடு வேகவைக்கவும்.வெந்ததும் தோல் தனியாக வந்துவிடும்.//

இந்த ஸ்டெப்தான் சிலசமயம் எனக்குப் பிரச்னை!! வேகலைன்னு விட்டு வச்சா, கொழகொழன்னு ஆகிடுது; வெந்துடுச்சோன்னு எடுத்தா, வரவரன்னு இருக்கும்!!

Menaga Sathia said...

வாழைக்காயை தோலோடு வேகவைக்கும் போது வெந்துவிட்டால் தோல் வெடிப்பு விடும்.அஹுவே சரியான பதம்.நன்றி ஹூசைனம்மா!!

01 09 10