Friday 9 July 2010 | By: Menaga Sathia

ஆம்பூர் சிக்கன் பிரியாணி /Ambur Chicken Biryaniஎனக்கு பிடித்த சமையல் குறிப்புகளை என் டைரியில் எழுதி வைப்பது வழக்கம்.இந்த குறிப்பினை நான் எப்போழுதோ டி.வியில் பார்த்து எழுதி வைத்தேன்.அந்த டைரியும் தொலைந்து போய் ஏதோ ஒரு பொருள் தேடுகையில் அந்த டைரி கிடைத்தது.அதில் நான் எழுதிய குறிப்பை பார்த்து செய்தது....
ஆம்பூர் பிரியாணி எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.காரணம் அதில் நெய்(அ) டால்டா சேர்ப்பதில்லை.மேலும் நாம் மசாலா சேர்த்து வதக்கும் பக்குவத்தில் இருக்கு.இதில் சாதாரணமாக குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து செய்வது.பச்சை மிளகாய்,கரம் மசாலா,தேங்காய்ப்பால் இதெல்லாம் சேர்க்க வேண்டியதில்லை.

நான் பிரியாணியை எப்போழுதும் அவனில் தான் தம் போடுவேன்.190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் தம் போட்டால் சரியாக இருக்கும்.
தே.பொருட்கள்:சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
அரிந்த வெங்காயம் - 1 பெரியது
அரிந்த தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்,சிகப்பு புட்கலர் - தலா 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கிராம்பு - 5
ஏலக்காய் - 6
செய்முறை :
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்த பின் அரிசியை போட்டு 10 நிமிடத்தில் வடித்துவிடவும்.தம் போட சரியாக இருக்கும்.

*வெங்காயம் வதங்கியதும் பூண்டு விழுது+புதினா கொத்தமல்லி+இஞ்சி விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+தயிர் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கனைப் போட்டு 15 நிமிடம் வதக்கவும்.1 கப் நீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

*கிரேவி நன்கு கொதித்து சிக்கன் வெந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து பின் வடித்த அரிசியை கொட்டி சமன்படுத்தி 2 புட்கலர்களையும் மேலே ஊற்றி தம் போடவும்.

*அவன் இல்லாதவர்கள் தோசை கல்லை காயவைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து பாத்திரத்தை சுற்றிலும் அலுமினியம் பேப்பரால் நன்கு இறுக மூடி போடவும்.

*15 நிமிடம் கழித்து சாதத்தை உடையாமல் நன்கு கிளறி விட்டால் சுவையான ஆம்பூர் பிரியாணி ரெடி!!

Sending this recipe to '' I Love My Dad'' Event by Jay.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

சாருஸ்ரீராஜ் said...

very nice biriyani

'பரிவை' சே.குமார் said...

ஆம்பூர் பிரியாணி அடுத்த வாரம் போட்டுப் பார்த்துறணும். அப்புறம் சொல்லுறோம்.

எல் கே said...

nalla irukkum polaa

Kousalya Raj said...

பார்க்கும் போதே பசிக்கிறதே....!

ஜெட்லி... said...

நாளைக்கு மதியம் போய் அடையாரில் இருக்கிற ஆம்பூர் பிரியாணி
கடையில் போய் சாப்பிடனும்....படத்தை பார்த்தாலே நாக்கு ஊருது...

மனோ சாமிநாதன் said...

ஆம்பூர் பிரியாணி ரொம்பவும் நன்றாக இருக்கிறது மேனகா! செய்முறையும் சுலபமாக இருக்கிறது!

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டிய குறிப்பு...நன்றி மேனகா...

பனித்துளி சங்கர் said...

அமீரகத்திலும் எல்லா வெள்ளிக் கிழமையும் பிரியாணிதான் . உங்களின் சமையல் குறிப்புகள் இனி ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் அரங்கேற்றப்படும் . அருமை . பகிர்வுக்கு நன்றிங்க !

Jayanthy Kumaran said...

hey u made my tummy trembling...yummy recipe...

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி சகோ!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி எல்கே!! ஆமாங்க ரொம்ப நல்லாயிருக்கும்..

நன்றி கௌசல்யா!!

நன்றி ஜெட்லி!!

Menaga Sathia said...

நன்றி மனோ அம்மா!!

நன்றி கீதா!!

நன்றி சங்கர்!!

நன்றி ஜெய்!!

Unknown said...

Super super biryani. Havent tried making biryani in oven. Will try next time.

Krishnaveni said...

superb biriyani looks beautiful

Thenammai Lakshmanan said...

சீக்கிரம் அனுப்பி வைடா மேனகா..:))

Menaga Sathia said...

நன்றி திவ்யா!!அவனில் தம் போடுவது ரொம்ப ஈசி,அடியும் பிடிக்காது..

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி தேனக்கா!! உங்களுக்கு பார்சலில் அனுப்பியாச்சு அக்கா....

Jayanthy Kumaran said...

Hy dear,
Thanx for sending this delicious biryani to " I Love my Dad " event...!
Have a nice day...:)

RV said...

Superr... Ambur Biriyani ennoda favorite among Biriyani. I thought of getting the recipe from TH's aunt during our India visit, but now I don't have to.... Writing Tamil in English is not my kind.. so please excuse me... I don't know how I missed your blog all these days. I love your recipe collection. following you and will stop by often. Biriyani Piramadham :)

ஜெய்லானி said...

ஆ..இவ்ளோ லேட்டா வந்துட்டேனே பிரியாணி மிச்சம் இருக்கா இல்லையா..!!

ஜெய்லானி said...

இந்த டைப் பிரியாணி பாம்பேயில இருக்கும் போது ஆம்பூர் ஹோட்டலில் சாப்பிட்டது...நல்ல டேஸ்ட்..

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்ரி ஆர்வி!!


உங்களுக்கு இல்லாததா,பார்சல் அனுப்புகிறேன்..நன்றி ஜெய்லானி!!

Priya Suresh said...

Very tempting briynai, paathathume samaichi saapdinam pola irruku, looks very easy and delicious..

Anonymous said...

tried and came with fantastic taste. nice receipy

keep it up

m.vijayan(forced bachelor!!!)

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சியும் நன்றியும் விஜயன் சார்!!

01 09 10