Wednesday 20 October 2010 | By: Menaga Sathia

இட்லி சாம்பார்/Idli Sambhar

தே.பொருட்கள்:
துவரம்பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 15
தக்காளி - 1 பெரியது
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 2 சிறியது
வெல்லம் - 1 சிறுகட்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 3/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

*பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*காய்களை தேவையானளவு நறுக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பாதி சாம்பார் வெங்காயம்+நறுக்கிய தக்காளி+காய்கள் அனைத்தையும் நன்றாக வதக்கி வேகவைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*அதே கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மீதமுள்ள வெங்காயம்+அரைத்த விழுது சேர்த்து வதக்கி காயுடன் வேகவைத்த பருப்பை ஊற்றி கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை+வெல்லம் சேர்த்து இறக்கவும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

புதிய மனிதா. said...

அசத்தல் இட்லி சாம்பார் nice tips..

Unknown said...

Hi,

Idlium sambarum arumai...hmm...

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

சசிகுமார் said...

இட்லி சாம்பார்ன்னு சொல்லிட்டு வெறும் சாம்பார் மட்டும் கொடுத்தா எப்படிக்கா

Padhu Sankar said...

Delicious sambar

Gayathri Kumar said...

Hi! Lovely Dish.You have received an award. Please visit my site and collect it. Best Wishes.

சாருஸ்ரீராஜ் said...

super menaga

Daisy Roshan said...

yummy sambar.....

Asiya Omar said...

சாம்பார் நல்ல திக்காக இருக்கே.வறுத்துப்பொடிப்பதில் தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து நல்ல மணமாக இருக்கும்.

Chitra said...

கம கமக்கும் சாம்பார்.... சூப்பர்!

Krishnaveni said...

delicious sambar, my husband's fav looks yummy

தெய்வசுகந்தி said...

எங்கே மேனகா இட்லியக்காணோம் :-)!! சூப்பர் சாம்பார்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

சாம்பார் சூப்பர்.

Menaga Sathia said...

நன்றி புதிய மனிதா!!

நன்றி ஷமினா!!

நன்றி சசி!! இட்லி தானே கொடுத்துட்டா போச்சு...

நன்றி பது!!

Menaga Sathia said...

நன்றி காயத்ரி!! விருது கொடுத்தமைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும்..

நன்றி சாரு அக்கா!!

நன்றி ரோஷன்!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி தெய்வசுகந்தி!!இட்லியுடன் சேர்த்து படம் எடுக்க மறந்துட்டேன்பா...

நன்றி புவனேஸ்வரி!!

vanathy said...

super sambar!

'பரிவை' சே.குமார் said...

Idlyum sambarummunnu vantha idlykku sambara...

nalla kurippu...

Pushpa said...

Idliku poruthamana sambar super o super.

Pushpa @ simplehomefood.com

Gayathri said...

அருமையான சாம்பார் கண்டிப்பா செஞ்சு பாக்றேன்

ஸாதிகா said...

கமகம சாம்பார் சூப்பர்.

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி சகோ!!

நன்றி புஷ்பா!!

நன்றி காயத்ரி!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி ஸாதிகாக்கா!!

Priya Suresh said...

Idli sambar vasanai inga varaikum varuthu..yummmm!!

Revathyrkrishnan said...

புளி ஊற்ற வேண்டாமா மேனகா இதற்கு?

Menaga Sathia said...

ரீனா,இட்லி சாம்பாருக்கு நான் பெரும்பாலும் புளி ஊற்றமாட்டேன்,அதற்குப் பதில் தக்காளி கூடுதலாக போடுவேன்.புளி ஊற்றமால் செய்து பாருங்கள் இட்லி,தோசைக்கு சப்பாத்திக்கு பொருத்தமா இருக்கும்...

Revathyrkrishnan said...

சரிங்க மேனகா

01 09 10