Sunday 6 March 2011 | By: Menaga Sathia

சுட்ட கத்திரிக்காய் சட்னி /Smoked Brinjal Chutney

இதற்க்கு விதையில்லாத பெரிய கத்திரிக்காய்தான் நன்றாகயிருக்கும்.

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க

தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
தேங்காய்த்துறுவல்+உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

 செய்முறை

*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி அடுப்பில் சுடவும்.ஒவ்வொரு பக்கமும் நன்கு திருப்பிவிட்டு சுடவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்திருந்தால்தான் தோல் எடுக்க வரும்.

*தோல் எடுத்து சிறுதுண்டுகளாக வெட்டவும்.

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*இதனுடன் புளி+கத்திரிக்காய் +உப்பு சேர்த்து நைசாக அரைத்து தாளித்துக் கொட்டவும்.

*இட்லி,தோசை,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.


18 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

எனக்கு மிக மிக பிடித்த ஒன்று இது
ஹதை காரர்களோடு தங்கி இருக்கையில் இவற்றை சமைத்து கொடுத்தனர்

ரொம்ப பிடிக்கும்

Lifewithspices said...

I have only made pachadi with this will sure try this chutney..shld be apt for dosa..

athira said...

சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த ரெசிப்பி. நாங்கள் வழமையாக தேசிக்காய்புளிதான் சேர்ப்போம், இனி பழப்புள் சேர்த்துப் பார்க்கிறேன்..

ஆ எனக்குத்தான் சட்னி, வடையோடு வேண்டும்..... பருப்பு வடை.

Akila said...

wow lovely kathirikai chatni...
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

ஸாதிகா said...

அசத்தல் சட்னி மேனகா.அவசியம் இந்த சட்னியை செய்து பார்த்து விடவேண்டும்.

Unknown said...

i am drooling here,lovely chutney.

Priya Suresh said...

Attakasama irruku chutney, rendu idli athigama saapidalam intha chutneyoda..

Asiya Omar said...

கத்திரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும்,அதுவும் சுட்டு சட்னி என்றால் கேட்கவே வேண்டாம்.சூப்பர்.

ஹுஸைனம்மா said...

கத்தரிக்காவை மைக்ரோ ஓவனில் சுட முடியாதா மேனகா? கேஸ் ஸ்டவ்வில் சுட ரொம்ப நேரம் ஆகிறது.

பித்தனின் வாக்கு said...

good menaka. but this is not called sadni. Its called as masiyal. enga amma chinna vayasula kummudi aduppil suttu seyvaanga.

பித்தனின் வாக்கு said...

good menaqka. but this is called as masiyal

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி கல்பனா!!

நன்றி அதிரா!!புளி சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.இந்த தடவை சட்னி,வடை மிஸ் பண்ணிட்டீங்க..

நன்றி அகிலா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி சவீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

ஹூசைனம்மா,அவனிலும் சுடலாம் ஆனா அடுப்பில் சுட்டு செய்யும் டேஸ்ட் கிடைக்காது..கொஞ்சம் பொறுமையா செய்தால் சுவை கிடைக்கும் தானே...

நன்றி சுதா அண்ணா!! நான் பார்த்து செய்த குறிப்பில் சட்னின்னு தான் குறிப்பிட்டிருந்தாங்க..மசியல்ன்னு இனி சொல்லுவோம்...

Vijiskitchencreations said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சட்னி. இதையே நான் கத்தரிக்காய் தயிர் பச்சடியாகவும் செய்வேன்.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கு மேனகா...பகிர்வுக்கு நன்றி...

vanathy said...

good one!

Mahi said...

நன்றாக இருக்கிறது. ஊரிலே விறகடுப்பிலே கத்திரிக்காயை சுட்டு,அம்மா செய்வாங்க. வெறும் புளித்தண்ணி சேர்த்து கொதிக்கவைப்பது,தயிர் மட்டும் சேர்த்து தாளிப்பதுன்னு செய்வாங்க.

நல்லா இருக்கு மேனகா!

01 09 10