Friday 27 May 2011 | By: Menaga Sathia

நவரத்ன சுண்டல் / Navaratna Sundal

தே.பொருட்கள்:
சென்னா,கறுப்புக்கடலை,காராமணி,ராஜ்மா,மொச்சை - தலா 1/4 கப்

வெள்ளைப்பட்டாணி,பச்சை பட்டாணி,கொள்ளு,தோல் பாசிப்பருப்பு - தலா 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:

* சென்னா+கறுப்புக்கடலை+காராமணி+ராஜ்மா+மொச்சை இவைகளை முதல்நாள் இரவே ஒன்றாக ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவிடவும்.

*வெள்ளைப்பட்டாணி+பச்சைப்பட்டாணி+கொள்ளு+பாசிப்பருப்பு இவைகளை ஊறவைத்து,தோல் பாசிப்பருப்பை மட்டும் தனியாக உப்பு சேர்த்தும் மற்றவைகளை ஒன்றாக போட்டு உப்பு சேர்த்தும் பாத்திரத்தில் வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.

*பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து தேங்காய்த்துறுவல் சேர்த்துக் கலக்கவும்.

பி.கு:சோயா பீன்ஸ்,டபுள் பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

Angel said...

இந்த சுண்டல் மிகவும் சத்துள்ளது இல்லையா மேனகா .
பகிர்வுக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவைத்தேன்..

MANO நாஞ்சில் மனோ said...

ருசித்தேன் சுவைத்தேன்...!!!

Priya Suresh said...

Sundal superaa irruku,oru cup kedaikuma??..

Vimitha Durai said...

Healthy snack...

vanathy said...

super recipe. Nice photo!

Vardhini said...

Looks so yummy .. healthy and colorful.

Vardhini
VardhinisKitchen

சசிகுமார் said...

அக்கா எப்பவும் போல உங்களின் தனி ஸ்டைலில் ஒரு டிப்ஸ் நன்றி உங்களை போன்ற சில தளங்களின் உதவியோடு தான் நாங்கள் சுவையாக சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் மிக்க நன்றி.

Aruna Manikandan said...

looks very healthy dear :)
Thx. for sharing.

சி.பி.செந்தில்குமார் said...

raittu ரைட்டு

ஸாதிகா said...

வாவ்..கலர்ஃபுல் சுண்டல்.

Krishnaveni said...

healthy option menaga, superb

Kanchana Radhakrishnan said...

healthu sundal.

01 09 10