Thursday 19 May 2011 | By: Menaga Sathia

ஓமம் பிஸ்கட்/Sweet & Salt Ajwain(Omam) Biscuits


மம்( Ajwain, Carom seeds) இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

*ஓமத்தில் கால்சியம் , பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின்(Carotin), தையாமின்(Thiamin), ரிபோபுளேவின்(Rhiboflavin) மற்றும் நியாசின்(Niacin) போன்றவை அடங்கியுள்ளன.

*சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

*ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.

*ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

இதில் பிஸ்கட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தே.பொருட்கள்
மைதா மாவு - 2கப்
வெண்ணெய் - 50 கிராம் அறை வெப்பநிலையில்
ஓமம் -2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையானளவு
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்(அ)பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்

செய்முறை

*ஒரு பவுலில் பால் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*தேவையானளவு பால் தெளித்து சப்பாத்திமாவு பதத்தில் கெட்டியாக பிசையவும்.
 *2 பங்காக மாவை பிரித்து மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் உருட்டவும்.

*குக்கீ கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டவும். (என் பொண்ணுதான் குக்கீ கட்டரால் கட் செய்து கொடுத்தாங்க). 

*பிஸ்கட் உப்பாமல் இருக்க அங்கங்கே முள் கரண்டியால் குத்தி விடவும்.
*அவன் டிரேயில் அடுக்கி 180°C டிகிரியில் 15 - 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு
பிஸ்கட் சூடாக இருக்கும் போது மெத்தென்று இருக்கும்.ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

ரொம்ப சூப்பராக இருக்கு மேனகா...பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

Chitra said...

great!

vanathy said...

good one.

Sangeetha M said...

I remember abt my childhood days...everytime when I was hapen to see any bakery I will asky mom to get these biscuits for me....romba adampidippen:) biscuits r perfectly done n tats your sweet gal who helped u a lot :) pet her on behalf of me:)

Radhika said...

utterly awesome flavor. come out very well too.

Unknown said...

ரொம்ப நல்ல வந்திருக்கே

Angel said...

எனக்கு எப்பவும் சீரகம் /ஓமம் போட்ட உப்பு பிஸ்கட் ரொம்ப பிடிக்கும்.
அருமையான ரெசிபிக்கு நன்றி .அழகா வெட்டி தந்த சின்ன குட்டிக்கு வாழ்த்துக்கள் .

Priya Suresh said...

Wow feel like munching some crunchy biscuits, looks super delicious..

Kalyani said...

looks nice snack ....

Prema said...

This is so perfect menaga,luv the shape...kids luv it...

Shanavi said...

Enaku romba romba pidicha biscuits..Romba nalla vandhu irukku

Shylaja said...

Omam biscuits romba nalla iruku. Stars paarka romba azhaga iruku
South Indian Recipes

இமா க்றிஸ் said...

super

Vardhini said...

I have to make this .. healthy and delicious.

Vardhini
VardhinisKitchen

சசிகுமார் said...

ரொம்ப தேங்க்ஸ் அக்கா

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

Sarah Naveen said...

so cute n yumm!!

Malini's Signature said...

பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு.....குட்டியும் அம்மாவுக்கு உதவ ஆரம்பிச்சாசா அப்ப இன்னும் நிரைய குட்டிஸ் ரெசிபி கிடைக்கும் :-)

Sangeetha M said...

hi menaga..some awards r waiting for u in my blog...please come n collect them..

http://sangeethaskitchen.blogspot.com/2011/05/almond-cookies-n-awards.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice and easy recipe...thanks

Kanchana Radhakrishnan said...

super.

ஸாதிகா said...

வாவ்..கை தேர்ந்த பேக்கரியில் செய்ததைப்போல் அழகு அருமை.எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.

Jayanthy Kumaran said...

omy goodness...super cute and scrumptious...

Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

Jaleela Kamal said...

ஷிவானி குட்டி செய்ததால் இன்னும் அழகா இருக்கு

ராமலக்ஷ்மி said...

ஓமத்தின் மணமே தனி. மருத்துவ குணம் நிறைந்ததும். அருமையான குறிப்புக்கு நன்றி மேனகா.

Unknown said...

very crunchy, delicious biscuits! Another ASATHAL recipe :)

Mahi said...

ஓம பிஸ்கட் நான் சாப்பிட்டதே இல்ல மேனகா! சூப்பரா இருக்கு.

சின்னவயதில் ஓமத்திராவகம்-னு ஒரு மருந்தைப் பார்த்து ஓமம் பிடிக்காமப்போனது,இன்னும் தொடருது! ;)

01 09 10