Tuesday, 27 December 2011 | By: Menaga Sathia

கொள்ளு பொடி / Horsegram (Kollu) Podi


இந்த கொள்ளு பொடி கொங்குநாட்டு ஸ்பெஷல்.நன்றி தெய்வசுகந்தி!!

தே.பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
சின்ன வெங்காயம் - 6 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டுப்பல் - 1
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தனியா - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
*கொள்ளை சுத்தம் செய்து 4 கப் நீர் விட்டு குக்கரில் 5 விசில் வரை வேகவிடவும்.

*பின் நீரை வடிகட்டி (அந்த நீரை கொள்ளு ரசத்திற்கு பயன்படுத்தலாம் )கொள்ளை நன்கு உலரவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தனியா+சீரகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தில் பாதியையும்+மிளகாய்+கறிவேப்பிலை+பூண்டுப்பல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

*வதக்கிய பொருளுடன் உலர வைத்த கொள்ளு+மீதியுள்ள சின்ன வெங்காயம்+உப்பு சேர்த்து சின்ன இடிப்பானில் இடித்து எடுக்கவும்.

*இடிப்பான் இல்லையெனில் இவற்றை மிக்ஸியில் நீர்விடாமல் அரைத்தெடுக்கவும்.

*சாததுடன் நெய் விட்டு இந்த பொடி சாப்பிட அருமை....

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha M said...

Sounds interesting n very nice recipe...kandippa try panren!

ராஜி said...

பொடியை அரைச்சு சாப்பிட்டு பார்த்து ருசி எப்படின்னு சொல்றேனே

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா மீ ஆல்சோ கொங்கு

MANO நாஞ்சில் மனோ said...

ருசியான பதார்த்தங்களை படமா போட்டு கடுப்பெத்துருன்களே....!!!

அருமை அருமை...!!!

ராமலக்ஷ்மி said...

சத்தான குறிப்பு. நன்றி மேனகா.

பிலஹரி:) ) அதிரா said...

வித்தியாசமாக இருக்கே அருமையான குறிப்பு.

Priya said...

மிக சுலபமாக தெரிகிறது... செய்து பார்த்துவிட்டு சொல்றேன் மேனகா, பகிர்வுக்கு நன்றி!!!

Aarthi said...

yummy dish..healthy one..Should try it sometime..

Aarthi
http://yummytummy-aarthi.blogspot.com/

Priya dharshini said...

healthy podi...happy new year to you

Kanchana Radhakrishnan said...

சத்தான குறிப்பு.

Asiya Omar said...

வித்தியாசமாக இருக்கு,சம்பல்மாதிரி.

மனோ சாமிநாதன் said...

மிகவும் வித்தியாசமான குறிப்பு மேனகா!

Priya Suresh said...

Quite a different and very healthy podi.

பித்தனின் வாக்கு said...

mudai pathivai thavira ellla pathivil irukkum ayittangalum oru plate parcel please menaga.

kutti ponnu eppadi irukka?.

Sangeetha M said...

Today I made Kollu rasam n this Kollu podi, for the past few days due to cold I couldn't able to eat,but today I enjoyed eating this Kollu podi with hot rice was so yummy n I loved it a lot...thank you Menaga for sharing this recipe,sure will try this again n again :))

மகேஷ் ராஜ் said...

super samayal

இந்த web ல் register பன்னுங்க http://tamilstar.com/contest/share.php?contest_id=2011122806140812217479192 பல சினிமா செய்திகள் உள்ளன
மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்

Menaga Sathia said...

@சங்கீதா

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!! உங்களுக்கும் ரொம்ப பிடித்ததில் சந்தோஷம்...

Anonymous said...

this is my favorite food.......

01 09 10