இந்த சிப்ஸ் செய்ய நன்கு காயாக இருப்பதையே பயன்படுத்தவும்.தோலினை தூக்கி எறியாமல் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.அடுத்த ரெசிபியில் எப்படி பொரியல் செய்வது என் பார்ப்போம்.
இப்போழுது சிப்ஸ் செய்வதை பார்க்கலாம்..
தே.பொருட்கள்
நேந்திரங்காய் -3
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் + 3/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்க
செய்முறை
*சிறிது நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்+1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
*நேந்திரங்காயில் கத்தியால் ஆங்காங்கே கீறி தோலினை எடுக்கவும்.
*3/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்+ நீர் கலந்து தோல் சீவிய காயினை நீரில் 15 நிமிடம் வைக்கவும்.காய் மூழ்குமளவு நீர் இருக்க வேண்டும்.
*பின் காயினை ஈரம் போக நன்கு துடைத்து வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
*தீயினை குறைந்த அளவு வைத்து,சிப்ஸ் கட்டையால் நேரடியாக காயும் எண்ணெயில் சீவவும்.பின் தீயினை அதிகபடுத்தி வேகவைக்கவும்.
*கரண்டியால் ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு கிளறி விடவும்.
*சிப்ஸ் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கும் போது 1 டீஸ்பூன் உப்பு கலந்து நீரினை ஊற்றவும்.
*மீண்டும் எண்ணெயின் சத்தம் அடங்கியதும் சிப்ஸினை எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.
பி.கு
*சிப்ஸ்க்கு எண்ணெய் நன்றாகவே காய்ந்திருக்க வேண்டும்.
*உப்பு கலந்த நீரினை சூடான எண்ணெயில் ஊற்றும் எண்ணெய் பொங்கும்,கவனமாக செய்யவேண்டும்.
நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:
இதுவரை செய்ததில்லை. படங்கள் அழகு.
@ஸ்ரீராம்
மிக்க நன்றிங்க...
படங்களுடன் விளக்கம் நன்று சகோதரி...
கேரளா நண்பர்கள் கொண்டு வந்தால் சாப்பிடுவதுண்டு....
ஊரிலும் கடைகள் வந்தாச்சு... வீட்டில் செய்ததில்லை...
மிக்க நன்றி சகோ!!
Post a Comment