Thursday 11 October 2018 | By: Menaga Sathia

ஊட்டி வர்க்கி /Ooty Varkey | Tea Time Snacks

 வர்க்கி செய்வதற்கு ப்ரெஷ் ஈஸ்ட் முக்கியம் .வர்க்கியில் பாரம்,இனிப்பு,மசாலா,சதுர வடிவம் என பல வகைகள் உண்டு,இதில் நான் இனிப்பு வர்க்கி செய்து உள்ளேன்.எப்படி செய்றதுனு இந்த வீடியோவை பார்த்து செய்தேன்.

தே.பொருட்கள்
மைதா - 1 கப்+1/4 கப்
ப்ரெஷ் ஈஸ்ட் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன் +1/4 கப்

ப்ரெஷ் ஈஸ்ட் செய்ய
மைதா -1/4 கப்
தயிர் -1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
நீர் -1/3 கப்

செய்முறை

*முதலில் ஈஸ்ட் செய்ய கொடுக்கபட்ட பொருட்களை கலந்து ,காற்றுபுகாத டப்பாவில் வெப்பமான இடத்தில் ,2 நாட்கள் வரை வைக்கவும்.

*பின் மாவு பொங்கி ப்ரெஷ் ஈஸ்ட் தயார்.

*ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா,உப்பு,சர்க்கரை,எண்ணெய்,ப்ரெஷ் ஈஸ்ட் 2 டேபிள்ஸ்பூன்,வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் இவற்றை ஒன்றாக கலக்கவும்.
 *பின் தேவைக்கு நீர் கலந்து மாவினை கொஞ்சம் இளக்கமாக பிசைந்து ,ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
 *பின் மாவினை மிக மெல்லியதா உருட்டவோ அல்லது பரோட்டாவுக்கு செய்வது போல் அடிக்கவும்.அதன் மீது சிறிது வெண்ணெய் தடவி,கொஞ்சம் மாவினை தூவி தடவவும்.
 *வலது,இடது ஒரங்களை மடத்து அதன்மீது மீண்டும் வெண்ணெய்,மைதா தடவவும்.
 *இதேபோல் 4 முறை செய்யவும்.நாம் எத்தனை முறை மடிக்கிறோமோ அத்தனை லேயர் வரும்.
 *அதன் பின் 1 இஞ்ச் தடிமன் அளவுக்கு தேய்த்து நீளவாக்கில் வெட்டவும்.வெட்டிய ஒரு நீளதுண்டை எடுத்து சிறிது சிறிதாக பிய்த்து வைக்கலாம் அல்லது சதுர துண்டுகளாக வெட்டி வைக்கலாம்.

*அவனை 180 டிகிரி செல்சியஸில் முற்சூடு செய்யவும்.

*பேகிங் டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து  வர்க்கிகளை அடுக்கி,25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*பார்க்கும் போது வேகாத மாதிரி இருக்கும்,ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்.

*நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

wow...interesting!! looks yummy!

01 09 10