Wednesday, 24 June 2009 | By: Menaga Sathia

நெய் சாதம்

தே.பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3 கப்
வெங்காயம் - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 3
பட்டர் அ நெய் - 5 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125கிராம்

தாளிக்க:

ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -3
பட்டை - 1 சிறு துண்டு

செய்முறை:

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் பட்டர் போட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+புதினா+தயிர் சேர்த்து வதக்கவும்.

*1 கப் அரிசிக்கு = 11/2 கப் தண்ணீர் விகிதம் 3 கப் அரிசிக்கு 41/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு+அரிசி போட்டு மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை உடையாமல் கிளறவும்.

*சிக்கன் குருமா குறிப்பினை பார்க்க இங்கே சொடுக்கவும்.

பி.கு:
விருப்பப்பட்டால் பாதி தண்ணீர்+பாதி தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.நெய் சாதத்துடன் மட்டன்,சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.



Monday, 22 June 2009 | By: Menaga Sathia

செட்டிநாட்டு சிக்கன் குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கெட்டி தேங்காய்ப் பால் - 1 கப்
கறிவேப்பில்லை - சிறிது

எண்ணெயில் வதக்கி அரைக்க:
சின்ன வெங்காயம் - 20
வறுத்து பொடிக்க:

தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிரிது
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 5

செய்முறை:
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.சின்ன வெங்காயத்தை வதக்கி அரைக்கவும்.

*வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.

*குக்கரில் சுத்தம் செய்த சிக்கனை 1 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+கரிவேப்பில்லை+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் சின்ன வெங்காய விழுது+வறுத்தரைத்த பொடி +உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

*கொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:
இந்த சுவையான செட்டிநாட்டு சிக்கன் குறிப்பை டி.வியில் பார்த்து செய்தேன்.நன்றாக இருந்தது.



Friday, 19 June 2009 | By: Menaga Sathia

முட்டைத் தொக்கு

தே.பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 5
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலாபொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.

*முட்டையை 2 ஆக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளியைப் போட்டு நன்கு மசிய வதக்கவும்.

*வதங்கியதும் மிள்காய்த்தூள்+பிரியாணி மசாலா போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

*தண்ணீர் சுண்டி வரும் போது முட்டையைப் போட்டு மஞ்சள் கரு உடையாமல் கிளறி இறக்கவும்.
Wednesday, 17 June 2009 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 3 கப்
கத்திரிக்காய் - 1 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
ஊறவைத்த கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:

ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
*கத்திரிக்காயை பொடிப் பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது +தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+ஊற வைத்த கடலைப் பருப்பு சேர்க்கவும்.

*பின் கத்திரிக்காயை போட்டு சிறு தீயில் தண்ணீர் விடாமல் வதக்கவும்.

*தேவைக்கேற்ப அப்பப்போ எண்ணெய் ஊற்றவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்ததும் உப்பு+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*கிரேவி ஆறியதும் சாதத்தை போட்டு உடையாமல் கிளறி பரிமாறவும்.

பி.கு:
பெரிய கத்திரிக்காயில் விதைகள் இருக்காது,அதில் செய்தால் நன்றாக இருக்கும்.


Monday, 15 June 2009 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு மோர்குழம்பு

தே.பொருட்கள்:

புளிக்காத தயிர் - 125 கிராம்(அ) 1 கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1 சிறியது
பச்சை நெல்லிக்காய் - 2
வறுத்த வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்
வறுத்த உளுந்து பொடி - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்=தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தாளிக்க:
கடுகு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை -சிறிது
மோர் மிளகாய் - 4
சுண்டைக்காய் வற்றல் - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.நெல்லிக்காயை கொட்டை எடுத்து நறுக்கவும்.

*தேங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய்+சீரகம்+பாசிப்பருப்பு+தக்காளி+நறுக்கிய நெல்லிக்காய் உவை அனைத்தும் விழுதாக அரைக்கவும்.

*கடைந்த தயிரில் உப்பு+மஞ்சள்தூள்+அரைத்த விழுது+வெந்தயப் பொடி+உளுந்துப் பொடி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

*நுரை வரும் போது இறக்கி,தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்துக் கொட்டவும்.

பி.கு:
நெல்லிக்காய் சேர்ப்பதால் ரொம்ப நல்லாயிருக்கும்.மோர்மிளகாய்+சுண்டைக்காய் வற்றல் சேர்த்து தாளிப்பதால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.

Friday, 12 June 2009 | By: Menaga Sathia

நெத்திலி கருவாடு வறுவல்

தே.பொருட்கள்:

நெத்திலி கருவாடு -100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி -2
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
இஞ்சிபூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*கருவாட்டை சுத்தம் செய்துக் கொள்ளவும்.வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெயில் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்,நன்கு வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கி வரும் போது மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

*1/2 கப் தன்ணீர்+கருவாடு போட்டு நன்கு வேகவிட்டு நீர் சுண்டும் வரை நன்கு சுருள கிளறி இறக்கவும்.

*ஈஸி நெத்திலி கருவாடு வறுவல் ரெடி.
Thursday, 11 June 2009 | By: Menaga Sathia

ஸ்பானீஷ் ஆம்லெட்/Spanish Omlette

தே.பொருட்கள்:

முட்டை - 3
உருளைக்கிழங்கு - 1
கொத்தமல்லித்தழை -சிறிது
நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
நறிக்கிய வெங்காயத்தாள் - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1 சிறியது
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
நறுக்கிய வெங்காயம் - 1டேபிள்ஸ்பூன்
செய்முறை:

*முட்டையை உடைத்து நன்கு அடித்து அதில் மிளகுத்தூள்+சோம்புத்தூள்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

*உருளை+ கேரட் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+உருளை+கேரட் லேசாக வதக்கவும்.இறக்கும் போது கொத்தமல்லித்தழை+வெங்காயத்தாள்+குடமிளகாய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.

*ஆறியபின் அதனை முட்டை கலவையில் கொட்டி ஆம்லெட்டாக சுட்டெடுக்கவும்.

பி.கு:
காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் செய்து குடுக்கலாம்.



01 09 10