Sunday, 9 May 2010 | By: Menaga Sathia

ரவை+கினோவா(Quinoa)கேக்

ரவா கிச்சடி செய்யலாம்னு இருந்தபோது திடீர்னு ஒரு யோசனை வந்தது.அதை அப்படியே சில மாறுதலுடன் கேக் மாதிரி சாப்பிட்டால் என்னன்னு நினைத்து செய்தேன்.சூப்பர் டேஸ்ட்+வேலையும் மிச்சமாச்சு...
 
தே.பொருட்கள்:
ரவை - 1 கப்
வேகவைத்த கினோவா - 1/2 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
ப்ரோசன் பட்டாணி - 1 கப்பிடி
தயிர் - 125 கிராம்
மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வறுத்த முந்திரிபருப்பு - தேவைக்கு
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
எள் - மேலே தூவ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*ஒரு பவுலில் ரவை+கினோவா+உப்பு+மஞ்சள்தூள்+பெ.தூள்+1 1/2 கப் நீர்+தயிர்+முந்திரிபருப்பு கலந்து வைக்கவும்.

*கடாயில் சிறிது பட்டர்+எண்ணெய் சேர்த்து வெங்காயம்+பச்சை மிளகாய்+கேரட்+பட்டாணி+கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கவும்.

*வதங்கிய பொருட்களை ஆறவைத்து ரவை கலவையில் கலந்து ப்ரெட் செய்யும் பாத்திரத்தில் பட்டர் தடவி ஊற்றி அதன் மேல் எள் தூவி அலங்கரிக்கவும்.

*அவனை 190°C டிகிரிக்கு முற்சூடு செய்து 35 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*சட்னியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்...
Friday, 7 May 2010 | By: Menaga Sathia

அவல் புளி உப்புமா /Tamarind Aval Upma

தே.பொருட்கள்:
அவல் - 2 கப்
புளி - 1 எலுமிச்சை பழளவு
பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*புளியை கெட்டியாக 1 கப் அளவில் கரைத்து அதில் மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள் கலந்து அவலை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து உப்பு+வேர்க்கடலையை வறுக்கவும்.

*பின் ஊறிய அவலைக்கொட்டி நன்கு பொலபொலவென வரும்வரை கிளறி இறக்கவும்.

Sending this recipe Niloufer's 20-20 cooking event.
Thursday, 6 May 2010 | By: Menaga Sathia

வேர்க்கடலை நிப்பட்

தே.பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
ஊறவைத்த கடலைப்பருப்பு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சுடு படுத்திய எண்ணெய் அல்லது உருக்கிய பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :
*பொரிக்க கொடுத்துள்ள எண்ணெய் தவிர அனைத்தையும் உப்பு சேர்த்து ஒன்றாக கல்ந்து நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்க்கு கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவில் சிறு உருண்டையை எடுத்து தட்டையாக தட்டி முள்கரண்டியால் இருபக்கமும் குத்தி சிறிது நேரம் உலரவிட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
 
பி.கு:
தட்டைக்கு தட்டுவது போல் தட்டி முள் கரண்டியால் குத்தவும்.எண்ணெயில் பொரிக்கும் போது உப்பாமல் இருப்பதற்க்காக தான் முள் கரண்டியால் குத்துகிறோம்.
Wednesday, 5 May 2010 | By: Menaga Sathia

ப்ரெட் வடை

தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 5
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி தண்ணீரில் நனைத்து நன்கு நீரை பிழிந்துக் கொள்ளவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.மாவு பதம் தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது அரிசி மாவு சேர்க்கவும்.

*பின் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி பொரித்தெடுக்கவும்.
Tuesday, 4 May 2010 | By: Menaga Sathia

முட்டையில்லா சுகினி+வாழைப்பழ ப்ரெட்

இந்த ரெசிபியை மதுரம் குறிப்பில் பார்த்து செய்தது.ஒரிஜினல் ரெசிபியில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்திருப்பாங்க,நான் அதற்கு பதில் காய்ந்த திராட்சை சேர்த்து செய்திருக்கேன்.இதில் முட்டை,வெண்ணெய் எதுவும் சேர்க்காத ப்ரெட் ரெசிபி.ப்ரெட் ஆறியபிறகு துண்டு போட்டிருந்தால் கட் செய்ய ஈஸியாக இருக்கும்.நான் பேக்கிங் செய்து முடித்ததும் என் பொண்ணின் அழுகையால் சூடாக கட் செய்ய வேண்டியதாகிவிட்டது.ஷேப்தான் சரியாக வரலை.ஆனால் டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பர்ர்ர்!!
 
தே.பொருட்கள்:
பார்ட் -1
ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
பட்டைத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

பார்ட் - 2
தோல் சீவி துருவிய சுகினி - 1 கப்
காய்ந்த திராட்சை - 1/4 கப்
 
பார்ட் - 3
வெஜிடேபிள் எண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
மசித்த வாழைப்பழம் - 1 பெரியது
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
 
செய்முறை :

*பார்ட் -1 கூறிய பொருட்களை ஒன்றாக கலக்கவும்.

*இதனுடன் பார்ட் - 2 கூறிய பொருட்களைக் கலக்கவும்.

*பார்ட் -3 கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பீட்டரில் நன்கு அடிக்கவும்.இதனுடன் பார்ட் 1,2 கலவையை ஒன்றாக கலந்து ப்ரெட் செய்யும் பாத்திரத்தில் ஊற்றவும்.

*அவனை 180°C முற்சூடு செய்து 30 நிமிடம் இந்த கலவையை பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியதும் துண்டுகள் போடவும்.
Monday, 3 May 2010 | By: Menaga Sathia

காலிபிளவர் பனீர் பொடிமாஸ்

தே.பொருட்கள்:
காலிபிளவர் - 1 சிறிய பூ
துருவிய பனீர் - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*காலிபிளவரை பெரிய பூக்களாக நறுக்கி,உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு அலசி வைக்கவும்.

*பின் கேரட் துருவியில் காலிபிளவரை துருவி ஆவியில் 5 - 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+ப.மிளகாய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் காலிபிளவர்+பனீர் சேர்த்து கிளறி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
Sunday, 2 May 2010 | By: Menaga Sathia

வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ்

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டேபிள்ஸ்பூன்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 /2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
 
செய்முறை :
*சிறிது வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை+ஈஸ்ட் கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

*வெந்தயக்கீரையை சிறிது வெந்நீரில் உப்பு சேர்த்து நன்கு அலசி பிழிந்து வைக்கவும்.

*ஒரு பவுலில் மாவு+உப்பு+சீரகப்பொடி+ஆலிவ் எண்ணெய்+வெந்தயக்கீரை கலந்து ஈஸ்ட் கலவையை ஊற்றி கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1--2 மணிநேரம் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து மாவு உப்பியிருக்கும்,மறுபடியும் பிசைந்து 1 மணிநேரம் வைக்கவும்.

*மீண்டும் 1 மணிநேரம் கழித்து மாவை நன்கு பிழைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

*உருட்டிய ஒரு உருண்டையை எடுத்து மெலிதாக கைகளால் நீளவாக்கில் உருட்டி அவன் டிரேயில் வைக்கவும்.

*அனைத்து உருண்டைகளும் இப்படியே செய்து மறுபடியும் உப்பி வருவதற்காக 20 நிமிடம் வைக்கவும்.

*பின் 220°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு
வெந்தயக்கீரைக்கு பதில் ப்ரெஷ் பேசில் இலைகள் சேர்க்கலாம்.

01 09 10