Friday 7 May 2010 | By: Menaga Sathia

அவல் புளி உப்புமா /Tamarind Aval Upma

தே.பொருட்கள்:
அவல் - 2 கப்
புளி - 1 எலுமிச்சை பழளவு
பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*புளியை கெட்டியாக 1 கப் அளவில் கரைத்து அதில் மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள் கலந்து அவலை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து உப்பு+வேர்க்கடலையை வறுக்கவும்.

*பின் ஊறிய அவலைக்கொட்டி நன்கு பொலபொலவென வரும்வரை கிளறி இறக்கவும்.

Sending this recipe Niloufer's 20-20 cooking event.

30 பேர் ருசி பார்த்தவர்கள்:

vanathy said...

I never heard about Aval uppma. Looking yummy.

Priya said...

இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை... அதுவும் புளி சேர்த்து!
எப்படி எப்பவுமே இப்படி வித்தியாசமா செய்து கலக்குறிங்க!?!

Chitra said...

I make the plain aval uppuma. புளியில் ஊற வைப்பது புதுசு. Thank you for the tip.

ஜெய்லானி said...

வாழ்கையில முதல் தடவையா இந்த ரெஸிபிய பாக்குறேன். இதுக்காக கின்னஸ் அவார்டே தரலாம். ( எனக்கு அந்த அவார்ட் கிடச்சா அது உங்களுக்குதான் இப்பவே சொல்லிடுறேன்)

சூப்பர் :-))

Anonymous said...

ரொம்ப சூப்பர்.எனக்கு மிகவும் பிடித்த டிபன்.

SathyaSridhar said...

Menaga,,aval uppuma irukkarathiliye rombhavum easy aana tiffin item paa puli uppuma super ah irukku naan kandippa try seiren dear...enakku inippu kaaram rendume pidikkum aval item la..

Anonymous said...

Wow. amazingly easy recipe acca.

Anonymous said...

அக்கா, நீங்கள் எல்லோரும் பதிவு போடும் போது, (இது காய்ச்சல் போன்ற நேரத்தில் கொடுக்கக்கூடிய உணவு என்ற மாதிரி) சில டக் போடுங்கக்கா. அதுவும், எங்கள மாதிரி படிக்கிற பசங்களுக்கு எங்கள் கை தான் உதவி. Thanks in advance.

koini said...

ம்ம்ம் அவல் உப்புமா கேள்விப்பட்டிருக்கோம்....ஆனால் அவல் புளி உப்புமா இப்பொதான் பார்க்கிரேன்.....சூப்பருங்க ..நன்றி மேனகா.

Nithu Bala said...

Hmm..en favourite recipe..superb ba irukku..konja naala pannala..nengha neyaba paduthitengha..pannanum..

GEETHA ACHAL said...

நானும் வீட்டில் அவல் உப்புமா, லெமன் அவல் எல்லாம் செய்து இருக்கின்றேன்...அவல் புளி உப்புமா இப்பொழுது தான் வேள்விபடுகிறேன்...மிகவும் அருமை....சூப்பர்ப் உப்புமா..நிறைய அவல் வாங்கியது அப்படியே இருக்கு...கண்டிப்பாக செய்து பார்கிறேன்...சூப்பர்ப்...

பனித்துளி சங்கர் said...

அருமையாக இருக்கிறது . நாளைக்கு பண்ணிட வேண்டியதுதான் . .
பல சிறப்பான உணவு வகைகள் பற்றி மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் பதிவிடுகிறீர்கள். மிகவும் நன்றி !

Jayanthy Kumaran said...

Hey, this is my fav and yur recipe sounds perfect n yummy...!

Asiya Omar said...

அவல் உப்புமா செய்ததுண்டு,புளி சேர்த்து இப்ப தான் கேள்விபடுறேன்.பார்க்க நல்ல இருக்கு.

Gita Jaishankar said...

This is a new upma to me...sounds very interesting...looks delicious :)

Thenammai Lakshmanan said...

அவல் புளியோதரை போல இருக்கும்னு நினைக்கிறேன் மேனகா..அருமைடா...

Anonymous said...

அனைத்து
சகபதிவர்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்



வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

சசிகுமார் said...

பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சாமக்கோடங்கி said...

புளியன் பிரியாணி மாறியே இருக்கு..

சும்மா சொன்னேன்..

நன்றி..

'பரிவை' சே.குமார் said...

இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை... அதுவும் புளி சேர்த்து!
எப்படி எப்பவுமே இப்படி வித்தியாசமா செய்து கலக்குறிங்க!?!

Great...!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ப்ரியா!! இந்த குறிப்பு நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பிராமணத்தோழியிடம் கற்றுக்கொண்டது...

நன்றி சித்ரா!! புளியில் செய்து பாருங்க,அசத்தலா இருக்கும்..

நன்றி ஜெய்லானி!! அப்போ வாக்கு மாறாம உங்களுக்கு கின்னஸ் அவார்ட் கிடைத்தால் எனக்கு கொடுத்துடுவீங்கதானே...

நன்றி அம்மு!!

Menaga Sathia said...

நன்றி சத்யா!! செய்து பாருங்கள்,நீங்கள் சொல்றமாதிரி ரொம்ப ஈஸிதான்...

நன்றி அனாமிகா!! நீங்கள் சொல்றமாதிரியே போடுகிறேன்...

நன்றி கொயினி!!

நன்றி நிது!! மறந்துபோன உணவை ஞாபகபடுத்திட்டேனா,சீக்கிரம் செய்து சாப்பிடுங்க..

நன்றி கீதா!! செய்து பாருங்கள்...

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

நன்றி ஜெய்!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கீதா!!

நன்றி தேனக்கா!! அவல் புளியோதரை மாதிரிதான் இருக்கும் அக்கா...

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி சூர்யா!!

நன்றி சசி!!

நன்றி பிரகாஷ்!!

நன்றி சகோ!!

Ms.Chitchat said...

I love aval upma. Exactly the same version as urs :):)

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு, செய்து பார்க்கிறேன்.

Priya Suresh said...

Delicious upma...yennaku romba pidichathu..

Menaga Sathia said...

நன்றி சிட்சாட்!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ப்ரியா!!

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு மேனகா.மாலை நேர அருமையான டிபன்

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

01 09 10