Sunday 30 May 2010 | By: Menaga Sathia

தக்காளி பச்சைமிளகாய் தொக்கு/Tomato Greenchilly Thokku

தக்காளிசட்னியில் மிளகாய்த்தூளுக்கு பதில் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து செய்து பாருங்கள்.சுவையும்,வாசனையும் தூக்கலாக இருக்கும்.
 
தே.பொருட்கள்:
துண்டுகளாக நறுக்கிய தக்காளி - 7
கெட்டி புளிசாறு - 3 டேபிள்ஸ்பூன்
சிறுதுண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய் - 15 -20(அவரவர் காரத்திற்கேற்ப)
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து தக்காளியைபோட்டு நன்கு வதக்கவும்.

*பின் புளிசாறு+உப்பு+பச்சை மிளகாய் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி எடுக்கவும்.

*இட்லி,தோசை,தயிர் சாதத்திற்க்கு பொருத்தமாக இருக்கும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Menaga this is so spicy..loved the color of the chutney..

geetha said...

தக்காளி சட்னி பார்க்கவே சூப்பராய் இருக்கு. நான் எப்பவும் தக்காளிச்சட்னியில் வெங்காயமும் கொஞ்சம் சேர்த்துதான் செய்வது வழக்கம்.
இந்தமுறை இதுவரை செய்ததில்லை. அதுவுமில்லாமல் புளியும் அதிகம் சேர்க்கமாட்டேன்.
எங்காவது வெளியூர் போகும் சமயங்களில் செய்து எடுத்துக்க நல்ல ரெசிப்பி.நன்றி மேனு!

Priya said...

ஆமா மேனகா... மிளகாய் தூளுக்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்தாலே தனி ருசிதான்.இந்த தொக்கை கண்டிப்பா செய்யனும்.Tks!

Pavithra Elangovan said...

Nice recipe dear...as geetha told its really good one to take for trips.. looks mouthwatering..

Asiya Omar said...

அருமையாக இருக்கு,மேனகா.

Anonymous said...

போட்டோ பார்த்தாலே சாபிடணம் போல் இருக்கு .பச்சை மிளகாய் போட்டு பண்ணி இருக்கேன் ஆனா புளி சேர்த்து செய்யலே .செய்ஞ்சு பார்க்கறேன் நன்றி

எல் கே said...

பார்க்க நல்லா இருக்கு

Nithya said...

aaha arumayaana thokku :)

ஜெய்லானி said...

எங்க வீட்டிலயும் இப்பிடிதான் செய்வாங்க..வெங்காயத்தை வதக்கி மிக்ஸியில அரைச்சு
மலரும் நினைவுகள்....
:-))

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி கீதா!! புளி சேர்த்து செய்து பாருங்கள்.இன்னும் நல்லாயிருக்கும்..

நன்றி ப்ரியா!!

நன்றி பவித்ரா!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சந்தியா!! செய்து பாருங்கள்..

நன்றி எல்கே!!

நன்றி நித்யா!!

நன்றி ஜெய்லானி!!

Jayanthy Kumaran said...

fabulous n colorful click...simply tasty dish.

பனித்துளி சங்கர் said...

அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது . இந்த சமையலைப்பார்க்கும்பொழுது மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

vanathy said...

மேனகா, சூப்பர். எப்படி இவ்வளவு வேகமாக புது புது ரெசிப்பிகள் போடுகிறீர்கள்.

மனோ சாமிநாதன் said...

சிகப்பு மிளகாய்க்குப்பதில் பச்சை மிளகாய் என்பது வித்தியாசமாய் இருக்கிறது மேனகா! பார்த்தால் சுவையும் நன்றாக இருக்குமென்று தெரிகிறது!

ஸாதிகா said...

பார்க்கவே நன்றாக இருக்கிறது மேனகா.உடனே செய்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.

SathyaSridhar said...

Menaga,,oorugai pakum poedhe echil ooruthu apdiye sapdanum poela irukku paa..nalla seithurukeenga..

SathyaSridhar said...

Menaga,,oorugai pakum poedhe echil ooruthu apdiye sapdanum poela irukku paa..nalla seithurukeenga..

Priya Suresh said...

Spicy tomato thokku looks tooo fabulous..

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி சங்கர்!!

நன்றி வானதி!!

நன்றி அம்மா!!நிச்சயம் சுவையாக இருக்கும்...

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சத்யா!!

நன்றி ப்ரியா!!

hamaragana said...

நன்றி சகோதரி கொஞ்சம் வித்தியாசமான சட்னி வழக்கமாக வெங்காயம் சேர்த்து செய்வதால் அதிகம் உபயோகிபதில்லை இதில் வெங்காயம் சேர்பதில்லை எனது உய்ர் தோழி (என மனைவி என் தாய்க்குப்பின் என்னை கனிவாக பார்ப்பவள் )இன்று தயார் செய்து கொடுததால் சுவையாக இருக்கிறது"""நன்றி"""(இந்த நன்றி அவள் சொல்லியது )..

Anu said...

wow yummy and spicy thokku... My all time fav..

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கும்,வருகைக்கும் நன்றி+மகிழ்ச்சி சகோதரரே!!.

நன்றி அனு!!

01 09 10