Friday 28 May 2010 | By: Menaga Sathia

ரவை வெண்பொங்கல்

தே.பொருட்கள்:

ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
முந்திரி - தேவைக்கு
துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 3/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்
கொதி நீர் - 2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
* பாசிப்பருப்பை மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் நெய்+எண்ணெய் விட்டு மிளகு+இஞ்சி+கறிவேப்பிலை+முந்திரி+பெருங்காயத்தூள்+சீரகம் நைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.

*பின் ரவையையும் சேர்த்து நன்கு வறுக்கவும்.ரவை வறுபட்டதும் பால்+கொதிநீர் சேர்த்து வேகவிடவும்.

*ரவை வெந்ததும் வேகவைத்த பாசிப்பருப்பு+உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.

Sending this recipe to CWS - cumin seeds event by SARA started PRIYA

விருதுகள்
ஜெய் அவர்கள் கொடுத்த விருது.மிக்க நன்றி ஜெய்!!






அஹமது கொடுத்த விருது.மிக்க நன்றி சகோ!!


34 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jayanthy Kumaran said...

mouthwatery pongal with rawa...nicely presented Menaga...!

SathyaSridhar said...

Menaga,, viruthhugalukku Vazhthukkal paa rava pongal nalla seithurukeenga dear nalla kachithama vanthurukku.

ராமலக்ஷ்மி said...

ரவையிலே பொங்கலா. செய்து பார்த்து விடலாம். நன்றி மேனகா.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...சக்கரை பொங்கலினை மட்டும் தான் பால் சேர்த்து செய்வோம்...வித்தியசமாக இருக்கின்றது...சூப்பர்ப்...

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சத்யா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!! அரிசியில் செய்வதை ரவையில் செய்வது நல்லாயிருக்கும்,ஈஸியும் கூட..ஒரு முறை செய்து பாருங்கள்...

நன்றி கீதா!! பால் சேர்த்து செய்வது டேஸ்ட் இன்னும் நல்லாயிருக்கும்,பாசிபருப்பில் மஞ்சள்தூள் சேர்க்காமல் செய்தால் கலரும் வெள்ளையாக இருக்கும்...

எல் கே said...

different dish.. let us try this.. congrats on awards

Pavithra Elangovan said...

This is another quick tiffin anytime right.. I love it too.. rawa pongal with chutney and sambar..OMG heaven

மின்மினி RS said...

நல்லாருக்கே ரவையில் பொங்கல் இப்படியும் வைக்கலாமோ செய்து பார்த்திடவேண்டியதுதான்.

Cool Lassi(e) said...

Lovely pongal. I will have this tonight with peanut chutney and gojju. Happy weekend dear!

Chitra said...

Best wishes!


Congratulations!!!

:-)

Anonymous said...

It is new for me. I am going to make it for breakfast. Will let you know the outcome.

Congrats acca.

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனகா.பெருங்காயம் செர்ப்பது புதிதாய் இருக்கு.

Nithu Bala said...

supern pongal..appadiye eduthu sapdalam nu thonuthu..

PS said...

tried this dish one time, but didn,t turn out well. yours looks perfect. will try it out soon..

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி பவித்ரா!!

நன்றி மின்மினி!!

நன்றி கூல்!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கு நன்றி சித்ரா!!

நன்றி அனாமிகா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி ஆசியாக்கா!! பெருங்காயம் சேர்ப்பது நல்லா வாசனையாக இருக்கும்...

நன்றி நிது!!

நன்றி பிஎஸ்!! அடுத்தமுறை செய்து பாருங்கள்,நல்லா வரும்....

vanathy said...

looking very mouth watering. congrats for your awards. Did Jailani make that cake?

Anonymous said...

ரவை வெண்பொங்கல் பார்க்கவே இவ்ளோ நல்லா இருக்கே அப்போ சாப்பிட அருமையா தான் இருக்கும் செய்து சாப்பிட வேண்டியது தான் ...நன்றி மேனகா

r.v.saravanan said...

ரவை பொங்கல் நன்றாக இருக்கிறது நன்றி

விருதுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

ஓக்கே. பெரிய பிஸ்தா கணக்கில் நானே உங்க கிட்ட கேட்காமல் சிலதை செய்தேன். ருசியாகத் தான் இருந்தது. பட் இதில் இருக்கிற மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்கவில்லை. அதைவிட பாசிப்பருப்பு அதிகம் ஆனாது போல் ஒரு ஃபீலிங்க்ஸ்.

1 ) பாசிப்பருப்புன்னா, வறுத்து உடைத்த பயறு தானே?
2 ) அதை சாப்பாட்டில் போட்டால் எனக்குப் பிடிக்காது. முழிச்சுட்டு இருக்கிற மாதிரி இருக்கும். அதனாலேயே பாசிப்பயற்றை முதல் நாள் இரவே ஊற வைத்து அவித்தேன். நன்கு குழைந்து வந்தது.
3 ) பால்ன்னா பசும்பாலா தேங்காய்ப் பாலா? ஏன்னா இரண்டையுமே நாங்கள் பொங்கலுக்கு போடுவோம். நான் பாவித்தது தேங்காய்ப்பால் மட்டுமே, ஏனெனில் இனிப்பு பொங்கலுக்குத் தான் பசும்பால் நன்றாக இருக்கும்.

இப்ப சொல்லுங்க. நான் செஞ்சது ரவை வெண்பொங்கலா இல்லை வேற எதுவுமா? ருசி நன்றாக இருந்துச்சுக்க்கா. கலர் தான் வரல. இவனுங்க அனாமிகாவின் ரவை பழுப்புப் பொங்கலுக்கு ஒரு ஓ போடுன்னு கலாய்க்கிறாங்க. ஒழுங்கா உங்க கிட்ட முதலே கேட்டிருக்கணும். =((

Ahamed irshad said...

சூப்பர் டிஷ்.. விருதுக்கு வாழ்த்துக்கள்...

geetha said...

ரொம்ப நாளைக்கு அப்பறம் வர்றேன். படபடன்னு ஏகப்பட்ட ரெஸிப்பீஸ் போட்டுட்டீங்க மேனு!
ரவை பொங்கல் நானும் செய்வதுதான் ஆனா பால் கலந்து செய்ததில்லை.
இந்தமுறை பால் கலந்து செய்து பார்த்திட்றேன்.

Padhu Sankar said...

I am drooling Dear and congrats on your awards

Menaga Sathia said...

நன்றி வானதி!! ஜெய்லானிக்கு கேக் செய்யதெரியுமான்னு எனக்கு தெரியுது,ஆனா ஜூஸ் நல்லா போடுவாங்க அது தெரியும்...

விருதுக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்!!

Menaga Sathia said...

அனாமிகா உங்க கமெண்ட் படித்து சிரித்தேன்..

1.முதல்முறையாக செய்து நன்றாக வந்ததில் பாராட்டுக்கள்...

2.//அதைவிட பாசிப்பருப்பு அதிகம் ஆனாது போல் ஒரு ஃபீலிங்க்ஸ். // நான் கொடுத்திருக்கும் அளவுதானே போட்டீங்க??

3.//பாசிப்பருப்புன்னா, வறுத்து உடைத்த பயறு தானே? // பாசிப்பருப்பில் 2 விதம் இருக்கு வறுத்தது மற்றும் வறுக்காதது.பொங்கலுக்கு வருக்காமல்தான் வேகவைக்கனும்...

4.//அதை சாப்பாட்டில் போட்டால் எனக்குப் பிடிக்காது. முழிச்சுட்டு இருக்கிற மாதிரி இருக்கும். அதனாலேயே பாசிப்பயற்றை முதல் நாள் இரவே ஊற வைத்து அவித்தேன். நன்கு குழைந்து வந்தது.// பாசிப்பருப்பில் 2விதம் இருக்கு ஒன்னு நல்லா பெருசு பெருசா இருக்கும் அது டேஸ்ட் நல்லாவே இருக்காது மர்றும் வேக நேரம் எடுக்கும்.இன்னொன்னு குட்டிகுட்டியாக இருக்கும் அது சூப்பரா,சீக்கிரம் வேகும்...

5.//பால்ன்னா பசும்பாலா தேங்காய்ப் பாலா? ஏன்னா இரண்டையுமே நாங்கள் பொங்கலுக்கு போடுவோம். நான் பாவித்தது தேங்காய்ப்பால் மட்டுமே, ஏனெனில் இனிப்பு பொங்கலுக்குத் தான் பசும்பால் நன்றாக இருக்கும்.
//பசும்பால்தான் உபயோகித்தேன்.டேஸ்ட் நல்லாயிருக்கும்...அடுத்தமுறை பசும்பால் சேர்த்து செய்து பாருங்கள்..

//இப்ப சொல்லுங்க. நான் செஞ்சது ரவை வெண்பொங்கலா இல்லை வேற எதுவுமா? ருசி நன்றாக இருந்துச்சுக்க்கா. கலர் தான் வரல. இவனுங்க அனாமிகாவின் ரவை பழுப்புப் பொங்கலுக்கு ஒரு ஓ போடுன்னு கலாய்க்கிறாங்க. ஒழுங்கா உங்க கிட்ட முதலே கேட்டிருக்கணும். =((//அடுத்தமுறை இதேமுறையில் செய்து பாருங்க,அப்புறம் அவங்களை நீங்க கலாய்க்கலாம்.எப்படி இருந்ததுன்னு சொல்லனும்.செய்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்...

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி அஹமது!!

நன்றி கீதா!!பாலு சேர்த்து செய்தால் நல்லா டேஸ்டாக இருக்கும்...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி பது!!

Mahi said...

நானும் இதே மெதட்லதான் செய்வேன் மேனகா..எங்க வீட்டுல இவருக்கு பொங்கல் பிடிக்காது,அதனால நான் செய்வதும் ரொம்ப குறைஞ்சு போச்சு!

போட்டோ சூப்பரா இருக்கு..பொங்கலை ஞாபகப் படுத்தி விட்டுட்டீங்களே! :P:P
விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

நீங்க கூட சிரிக்கிறீங்களா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

படம் போடுறீங்களாக்கா? ஏன்னா எங்க ஊருக்கும் உங்க ஊருக்கும் 32 கிலோமீற்றர் தான் வித்தியாசம். ஆனால் பெயரில எக்கச்சக்க வித்தியாசங்கள். =((

எனக்குத் தெரிஞ்ச ஒரே பாசிப்பயறுன்னா சாதாரண பயறை வறுத்து உடைத்து பொங்கல், கொழுக்கட்டை போன்றவற்றிற்குப் போட பயன்படுத்துவது (எங்கள் ஊரில்).

அப்புறம் தேங்காய்ப்பால், பசும்பால் என்று போட்டீங்கன்னா எந்த பால்னு தெரிய உதவியா இருக்கும்.

இதை மாதிரித் தான் அரிசி மான்னு ஒன்னு இருக்கு. அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க. ஒரு வாட்டி அரிசிமான்னு மட்டும் போட்டிருந்தாங்க. எங்க ஊரில் அரிசியை திரித்து, வறுத்து வைப்பார்கள். பலகாரம் (முறுக்கு போன்றவையை பலகாரம் என்று சொல்லுவோம்) சுடுவதுன்னா அரிசி ஊறவைத்து அரைப்பார்கள். அதனை வறுப்பதில்லை. சரி அரிசி மான்னா வறுத்த மா தான் என்று நினைத்து சமைத்து அப்படியே குப்பையில் போட வேண்டி வந்தது. அதற்குப் பிறகு அரிசிமான்னு இருந்தாலே அந்த ரெசிப்பியைப் பார்ப்பதில்லை. வறுத்த அரிசிமாவா இல்லை சாதாரண மாவான்னு ஒரே குழப்பமாக இருக்கும்.

எல்லா மசாலாப் பொருட்களையும் பெயருடன் படமாகப் போட்டீங்கன்னா, எங்களுக்குத் தெரியாவிட்டாலும் தட்டிப் பார்க்கலாம். சொல்றது ஈசின்னு தெரியும். ஆனால் குழப்பங்கள் குறையுமேன்னு ஒரு ரிக்குவெஸ்ட்.

(எங்க ஊரில் Cumin Seeds - சின்ன சீரகம் என்றும், Fennel seeds - பெருஞ்சீரகம் என்றும் கூறுவோம். ஆஷ் வேற ஏதோ பெயர் சொல்லுவான். அப்புறம் அவற்றிற்கு ஆங்கிலப் பெயர்கள் தேடி தேடி படித்த பின்னர் இப்போ கொஞ்சம் ஈசியாக இருக்கு.) அவற்றை படங்களுடன் போட்டால் ஈசிக்கா. தாங்க்ஸ் இன் அட்வான்ஸ்.

பொங்கல், உப்புமா இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது தான் உடனேயே செய்தே. இந்த பயறு படம் போட்டீங்கன்னா திருப்ப செய்து பார்க்கலாம். டேஸ்ட் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க சொன்ன அளவு பாசிப்பயறு தான் போட்டேன்.

நாளைக்கு ஸ்டப்ட்டு மஸ்ரூம் பண்ணப்போறேன். கண்டிப்பாக சொதப்புவேன்னு தெரியும். பாக்கலாம். எவ்ளோ கவனமாக வெட்டினாலும் மஸ்ரூமை உடைச்சுடுவேன். அப்புறம் மஸ்ரூம் கறி பண்ண வேண்டியது தான்.

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள் மேனகா!!!

ஹுஸைனம்மா said...

ரொம்ப ஈஸி மெத்தடா இருக்கு; நிச்சயம் செய்துடுவேன்!!

Kanchana Radhakrishnan said...

ரவையிலே பொங்கலா. அருமையாக இருக்கிறது.

Menaga Sathia said...

உங்களுக்கு பாசிபருப்பு படம் உங்க கமெண்டில் போட்டுள்ளேன்.மறுபடியும் செய்து பாருங்கள்..நன்றி அனாமிகா!!

வாழ்த்துக்கு நன்றி சுகந்தி!!

நன்றி ஹூசைனம்மா!!

நன்றி காஞ்சனா!!

Priya Suresh said...

Rawa pongal supera irruku Menaga, naan rawa pongal oru thadava than samachi irruken..

Menaga Sathia said...

இங்கயும் அவருக்கு பொங்கல் பிடிக்காதுப்பா.அதற்க்காக எனக்கு மட்டும் செய்து சாப்பிடுவேன்.விருதுக்கும்,கருத்துக்கும் நன்றி மகி!!

இப்பலாம் அரிசியை ரவைதான் அதிகம் பொங்கல் செய்ய உபயோகபடுத்துறேன்.நன்றி ப்ரியா!!

01 09 10