Sunday 16 May 2010 | By: Menaga Sathia

கோஃப்தா பிரியாணி

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளாகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லிதழை - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

கோஃப்தா செய்ய:
புடலங்காய் - 1 நடுத்தரசைஸ்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
 
செய்முறை :
*புடலங்காயை நறுக்கி உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்.

*பின் நன்கு அலசி நீரை நன்கு பிழிந்து,அதனுடன் கா.மிளகாய்+உப்பு+சோம்பு+சின்ன வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*அரைத்த விழுதுடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து கெட்டியாக பிசையவும்.பதம் தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து வைக்கவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+புதினா கொத்தமல்லி+உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி+தேங்காய்ப்பால்+1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கோஃப்தாக்களைப் போட்டு உடையாமல் கிளறி 5 நிமிடம் மூடி பின் பரிமாறவும்.
 
பி.கு:
புடலங்காய்க்கு பதில் கோஸ்,இறால் சேர்த்தும் செய்யலாம்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

what an unique idea of making koftas with snake gourd..they should definitely taste yummy..healthy dish too..

நட்புடன் ஜமால் said...

இறால் போட்டும் செய்யலாமா

ஆஹா! அருமை அருமை.

Padhu Sankar said...

Nice and innovative recipe.Can't wait to try this dish.

Mahi said...

Different recipe menaga! super-a irukku..enge irunthu ippadi innovative ideas kidaikkuthu ungalukku? :)

Mahi said...

Different recipe menaga! enge irunthu ippadi innovative idea ellaam kidaikkuthu ungalukku?
super-aa irukku.

Jayanthy Kumaran said...

Wow...fantastic recipe...very intriguing..thanks for sharing dear.

Pavithra Srihari said...

Pudalangai kofta .. very different .Looks too good menaga ...missed a lot of ur recipes .. will catch it up

Asiya Omar said...

புதுசாக நிறைய ட்ரை பண்றீங்க மேனகா.நல்லா இருக்கு.

Prema said...

Kofta briyani yummy! Mouthwatering...Very innovative recipe.Gud Idea.

மனோ சாமிநாதன் said...

புகைப்படமும் செய்முறையும் ரொம்பவே நன்றாக இருக்கிறது, மேனகா! அதுவும் புடலங்காயை வைத்து கோஃதா செய்யும் முறை அருமை!

Sarah Naveen said...

Looks so yummy!!

Gita Jaishankar said...

Very nice vegetarian kofta briyani....looks very delicious...I am definitely going to try it this weekend :)

Menaga Sathia said...

நன்றி நிது!!

ஆமாம் சகோ இறால் போட்டும் செய்யலாம்.நன்றி தங்கள் கருத்துக்கு...

நன்றி பது!!

நன்றி மகி!! புதுசா ஏதாவது செய்யலாம்னு யோசிக்கும்போது வரும் ஐடியா இதெல்லாம்...

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி பவித்ரா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி மனோ அம்மா!!

நன்றி சாரா!!

shriya said...

Every time when I came across your site. I feel like am home. Beautiful recipe. Very creative.

பித்தனின் வாக்கு said...

ahaa ahaa romba naal kaliththu unga blog pakkam vanthaal piriyaani virunhtha? romba thanks.

Menaga Sathia said...

நன்றி ஸ்ரியா!!

நன்றி சகோ!!

01 09 10