Thursday 27 May 2010 | By: Menaga Sathia

தயிர் கேக்

என் அக்காவிடம் சுட்ட குறிப்பு...
 
தே.பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
தயிர் - 125 கிராம்
வெனிலா சர்க்கரை - 1 பாக்கெட்
முட்டை - 3
பட்டர் - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை :
*முட்டை+சர்க்கரை+பட்டர் நன்கு கரையும் வரை அடிக்கவும்.மைதாமாவில் பேக்கிங் பவுடரை கலந்து வைக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் மாவு+தயிர்+வெனிலா சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலந்து கேக் செய்யும் பாத்திரத்தில் பட்டர் தடவி கலவையை ஊற்றவும்.

*அவனை 180°C முற்சூடு செய்து 25 - 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
 
பி.கு:
தயிரை எந்த கப்பில் அளக்கிறமோ அந்த கப்பில் தான் மாவு+சர்க்கரை அளக்க வேண்டும்.நான் தயிர் இருக்கும் கப்பிலயே அளந்து போட்டுள்ளேன்.உதாரணமாக தயிர் 1 கப் என்றால் மாவு = சர்க்கரை = 2 கப் போடவேண்டும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

how to do without egg??

SathyaSridhar said...

Dear,,thayir cake rombha perfect ah vanthirukku naanum intha recipe try panni paakaren..

மின்மினி RS said...

ரொம்ப நல்லாருக்கு மேனகா அக்கா..

Asiya Omar said...

பார்க்கவே சாஃப்டாக இருக்கு,எந்த அக்கான்னு சொல்லைலையே.சூப்பர்.

Priya said...

நானும் இந்த மைதா கேக் செய்து இருக்கேன். ஆனா வெண்ணெய்க்கு பதிலா சமையல் எண்ணெய் சேர்த்து. கூடவே ஆப்பிள் துண்டுகள் சேர்த்து செய்து பாருங்கள் மேனகா... இன்னும் சுவையாக இருக்கும்.

GEETHA ACHAL said...

ஆஹா..வித்தியசமாக இருக்கின்றது...தயிர் கேக் அருமை...

Pavithra Srihari said...

finally this cake is out on blog .. habba ... looks super perfect menaga

Jaleela Kamal said...

சூப்பரா பஞ்சு போல் இருக்கு.

Chitra said...

very nice recipe...... yummy cake!

Menaga Sathia said...

முட்டையில்லாமல் நான் இந்த கேக் செய்ததில்லை.சாதரணமாக முட்டையில்லாமல் செய்ய அந்தளவுக்கு வெஜ் எண்ணெய் சேர்த்து செய்வாங்க.அந்தமாதிரி செய்து பாருங்கள்.நன்றி எல்கே!!

Menaga Sathia said...

நன்றி சத்யா!! செய்து பாருங்கள்...

நன்றி மின்மினி!!

//எந்த அக்கான்னு சொல்லைலையே//என் உடன்பிறந்த சகோதரி அக்கா.நன்றி ஆசியாக்கா!!

நன்றி ப்ரியா!! நீங்க சொன்ன மாதிரி அடுத்தமுறை செய்து பார்க்கிறேன்..

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி பவித்ரா!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சித்ரா!!

Kousalya Raj said...

தயிர் புளிப்பா இருக்கனுமா, சாதாரணமா இருந்தால் போதுமா? புளித்த தயிர் அதிகமா வீட்டில இருக்கு அதுதான் இதை ட்ரை பண்ணுவோமா என்று பார்கிறேன்.

Menaga Sathia said...

புளிப்பில்லாத தயிரில் தான் செய்யனும்.அதில் தான் நன்றாக இருக்கும்.புளித்த தயிரில் மோர் குழன்பு,ரசம் செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.என்னுடைய லேபிளில் குழம்பு,ரசம் க்ளிக் செய்து பாருங்கள்.இருக்கும்.நன்றி கௌசல்யா!!

Mahi said...

வித்யாசமான கேக் மேனகா! நல்லா இருக்கு.

ஜெய்லானி said...

ஆ..கேக்கில தயிரா..?!!
பாக்கும் போதே சாஃப்ட் தெரியுது..

:-))

Priya Suresh said...

Naan yogurt cake flour and sugar 3:2 ratio than panni irruken, love this cake much.

Nithu Bala said...

Hmm..kalakarengha menaga..egg illama nan try panni pakkaren seikirama..

vanathy said...

mm..yummy! Very nice photos.

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி ஜெய்லானி!! ஆமாம் இந்த கேக் ரொம்ப சாப்டாக இருக்கும்...

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

முட்டையில்லாமல் செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி நிது!!

நன்றி வானதி!!

athira said...

மேனகா தயிர்கேக் சூப்பர். முதன்முதலாக கேள்விப்படுகிறேன் தயிர் சேர்த்துக் கேக்.

மனோ சாமிநாதன் said...

தயிர் பார்க்கவே மிருதுவாய் இருக்கிறது, மேனகா!
புகைப்படம் அழகு!

ஜெயந்தி said...

இந்த கேக்கை மைக்ரோ வேவ் இல்லாதவர்கள் எப்படி பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

SathyaSridhar said...

Dear Menaga, Ungaludaya vazhthukalukku en manamaarntha nandri paa. Naanga nethu enga thirumana naalai nalla enjoy panninoem, en hubby enakku niraya surprise gifts ellam koduthaaru naanum avarukku surprise ah avarukku pidicha choc cake seithu koduthen. Naanga dinner ku restaurant kku poenoem candle light dinner paa.

ஸாதிகா said...

புளிப்பு சுவையுடன் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி அம்மா!!

நன்றி ஜெயந்தி!! அவன் இல்லாமல் எப்படி செய்வதுன்னு எனக்கு தெரியலைங்க..மணல் கொட்டி செய்வாங்க.சரியாக விபரம் தெரியவில்லை.தெரிந்தவர்கள் யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்கள்...

மிக்க மகிழ்ச்சி சத்யா!!

நன்றி ஸாதிகாக்கா!!

தெய்வசுகந்தி said...

மேனகா கலக்கறீங்க!!!!!!

01 09 10