Wednesday, 19 May 2010 | By: Menaga Sathia

ஸ்டப்டு காளான் - 1 / Stuffed Mushroom - 1

தே.பொருட்கள்:

பட்டன் காளான் - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீஸ் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

* காளானை கழுவி அதன் தண்டுப்பகுதியை பொறுமையாக கத்தியால் கீறி எடுக்கவும்.அனைத்து தண்டுப்பகுதிகளையும் எடுத்து பொடியாக கட் செய்யவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+நறுக்கிய தண்டுப்பகுதி காளான்+குடமிளகாய்+உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

*காளானில் இந்த ஸ்டப்பிங் வைத்து அதன் மேல் சீஸ்துறுவல் வைத்து முற்சூடு செய்த அவனில் 190 டிகிரிக்கு 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*இதை அப்படியே ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

Tuesday, 18 May 2010 | By: Menaga Sathia

கோதுமைரவை ஸ்டப்டு பன்

தே.பொருட்கள்:

கோதுமைரவை - 1/2 கப்
கோதுமைமாவு - 3 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த கலர் குடமிளகாய் - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*கோதுமைரவையில் 1 கப் கொதிக்கும் நீரைவிட்டு ஊறவிடவும்.சிறிது நேரத்தில் ஊறியிருக்கும்.

*வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

*கோதுமை மாவையும் ரவையும் தேவையான உப்பு சேர்த்து கலந்து ஈஸ்ட் கலந்த நீரை ஊற்றி கெட்டியாக பிசைந்து ஈரமான துணியால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*1 மணிநேரத்தில் மாவு 2மடங்காக உப்பியிருக்கும்,மறுபடியும் நன்கு பிசைந்து 1மணிநேரம் வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூளை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கி இறக்கினால் ஸ்டப்பிங் ரெடி.

*மாவை நன்கு மிருதுவாக பிசைந்து தேவையானளவில் உருண்டைகள் போடவும்.

*ஒவ்வொரு உருண்டையிலும் ஸ்டப்பிங் கலவையை வைத்து நன்கு மூடி அவன் டிரேயில் வைத்து 1/2 மணிநேரம் வைக்கவும்.மறுபடியும் உருண்டை நன்கு உப்பி வருவதற்காகதான் 1/2 மணிநேரம் வெளியில் வைக்கிறோம்.

*அவனை 230 முற்சூடு செய்து 20 - 30 பேக் செய்து எடுக்கவும்.
  
பி.கு:

*ஸ்டப்பிங் அவரவர் விருப்பத்துக்கேற்ப வைக்கலாம்.இந்த அளவிற்க்கு நார்மலாக 6 உருண்டைகள் வரும்.
Sunday, 16 May 2010 | By: Menaga Sathia

கோஃப்தா பிரியாணி

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளாகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லிதழை - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

கோஃப்தா செய்ய:
புடலங்காய் - 1 நடுத்தரசைஸ்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
 
செய்முறை :
*புடலங்காயை நறுக்கி உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்.

*பின் நன்கு அலசி நீரை நன்கு பிழிந்து,அதனுடன் கா.மிளகாய்+உப்பு+சோம்பு+சின்ன வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*அரைத்த விழுதுடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து கெட்டியாக பிசையவும்.பதம் தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து வைக்கவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+புதினா கொத்தமல்லி+உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி+தேங்காய்ப்பால்+1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கோஃப்தாக்களைப் போட்டு உடையாமல் கிளறி 5 நிமிடம் மூடி பின் பரிமாறவும்.
 
பி.கு:
புடலங்காய்க்கு பதில் கோஸ்,இறால் சேர்த்தும் செய்யலாம்.
Friday, 14 May 2010 | By: Menaga Sathia

இறால் ஒட்ஸ் ப்ரை

தே.பொருட்கள்:

பெரிய இறால் - 25
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
முட்டை - 1
ஒட்ஸ் - 1/4 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*இறாலின் தோலை முழுவதும் உரிக்காமல் வால்பகுதியை மட்டும் உரிக்காமல் விடவும்.

*சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்தூள்+உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். முட்டையை நன்கு கலக்கிக் கொள்ளவும்.

*பின் ஒவ்வொரு இறாலையும் முட்டையில் நனைத்து பின் ஒட்ஸில் பிரட்டி ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Wednesday, 12 May 2010 | By: Menaga Sathia

பனீர் கோஃப்தா

தே.பொருட்கள்:

கோஃப்தா செய்ய:துருவிய பனீர் - 100 கிராம்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

க்ரேவிக்கு:
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :

*கோஃப்தா செய்ய கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து உருண்டைகளாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*கடாயில் சிறிது பட்டர் விட்டு வெங்காயம்+தக்காளி+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்ரன் பின் ஒன்றாக போட்டு வதக்கி ஆறவைத்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் மீதமுள்ள பட்டரை விட்டு சீரகத்தைப் போட்டு தாளித்து அரைத்த மசாலா + தேவையான நீர்+உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

*பரிமாறும் போது க்ரேவியை சூடு செய்து கோப்தாக்களைப்போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

பி.கு:
தேவையானால் சிறிது ப்ரெஷ் கீரிம் சேர்த்தும் பரிமாறலாம்.பரிமாறும் போது கோப்தாக்களை போடவும்.
Tuesday, 11 May 2010 | By: Menaga Sathia

சின்ன வெங்காய சட்னி/Small Onion Chutney



எங்க அம்மா செய்யும் இந்த சட்னி எனக்கு ரொம்ப பிடித்தமானது.அவரசத்துக்கு உடனே செய்துவிடலாம்.சூடான இட்லியுடன் இந்த சட்னியை தொட்டு சாப்பிட இன்னும் நிறைய சாப்பிட தோனும்.

தே.பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 15
புளி - 1 நெல்லிகாயளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
* மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்தையும் பச்சையாக மிக்ஸியில் மைய அரைக்கவும்.

*பின் நல்லெண்ணெயை நிறைய ஊற்றி கலந்து 1/2 மணிநேரம் கழித்து சாப்பிட நன்றாகயிருக்கும்.
 
பி.கு:
எண்ணெய் நிறைய ஊற்றினால்தான் காரம் தெரியாது.உடனே சாப்பிடுவதைவிட எண்ணெயில் ஊறிய பிறகு சாப்பிட நன்றாகயிருக்கும்.

Monday, 10 May 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) சாலட்

தே.பொருட்கள்:

வேக வைத்த கினோவா - 1/2 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி,வெள்ளரிக்காய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
அவகோடா - 1
எலுமிச்சை சாறு - புளிப்பிற்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*அவகோடாவை கொட்டி நீக்கி பொடியாக அரிந்து எலுமிச்சை சாறு சிறிது கலந்து வைக்கவும்.

*ஒரு பவுலில் அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

*வேகவைத்த கினோவாவில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் உப்பு கவனமாக சேர்க்கவும்.

Sending this recipe Niloufer's 20-20 cooking event
01 09 10