Sunday, 25 September 2011 | By: Menaga Sathia

களகோஸ் பொரியல்/Brussels Sprouts Poriyal

களகோஸ்,இது கேபேஜ் வகையை சார்ந்தது.இதில் அதிகளவு விட்டமின் K&C  இருக்கிறது.மற்றும் விட்டமின் A,B6,B1,B2, ப்ரோட்டின்,Omega3 Fattyacids,கால்சியம்,இரும்புச்சத்தும் இருக்கு.அதிகளவு நார்ச்சத்தும் இருக்கு..கர்ப்பிணிகள் சேர்த்துக் கொள்ளவேண்டிய காய்களில் இதுவும் ஒன்று...

குறைந்தளவு கலோரிஸ் இருப்பதால் உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகிறது.100 கிராமில் 40 கிராம் கலோரிஸ் தான் இருக்கு..

நல்ல பச்சைநிறமுள்ள காயாக பார்த்து வாங்கவேண்டும்.வெதுவெதுப்பான உப்புக் கலந்த நீரில் கழுவி வெட்டவேண்டும்.

குறைந்தளவு நீர் ஊற்றி சமைத்தால் போதுமானது,இது சீக்கிரம் வெந்துவிடும்.

ஆவியில் வேகவைத்து சாலட் போல செய்து சாப்பிட நன்றாகயிருக்கும்...


தே.பொருட்கள்
களகோஸ் - 12
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
தேங்காய்த்துறுவல்  - 1/2 கப்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*களகோஸை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*பின் நறுக்கிய களகோஸ்+பாசிப்பருப்பு+உப்பு+தேவையானளவு நீர் விட்டு வேகவைக்கவும்.

*வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

Thursday, 22 September 2011 | By: Menaga Sathia

தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி/ Thalappakattu Mutton Biryani


திண்டுக்கல் என்றாலே பூட்டு ஞாபகம் வருவது போல பிரியாணியும் புகழ் பெற்றது.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சிறிது தூரத்தில் வேணு பிரியாணி ஹோட்டல் இருக்கு.திண்டுக்கல் போனால் யாரும் மிஸ்பண்ணிடாதீங்க அந்த ஹோட்டலில் பிரியானி சாப்பிட....சிறிய ஹோட்டல்தான் என்றாலும் அங்கு பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும்.

விதவிதமா பிரியாணி சமைப்பது ரொம்ப பிடிக்கும்.ஒருமுறை டி.வியில் பார்த்து செய்த குறிப்பு இது...

இந்த பிரியாணி செய்ய சில டிப்ஸ்

*பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம்.உப்புத்தண்ணீர் சுவையை மாற்றி விடும்.

*தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

*சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.

*மட்டன் இளங்கறியாக இருந்தால் சுவை சூப்பர்.

*பூண்டைவிட இஞ்சி அதிகளவில் சேர்க்கவேண்டும்.

நான் பாஸ்மதி அரிசியைதான் உபயோகித்துள்ளேன்.

தே.பொருட்கள்
மட்டன்  1/2 கிலோ
அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டுப்பல் - 6
நெய் - 100 கிராம்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
பச்சை மிளகாய் - 10
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
கசகசா - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
பட்டை - சிறுதுண்டு
பிரியானி இலை -3
கிராம்பு - 5

செய்முறை

*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*கறியை சிறிது உப்பு+மஞ்சள்தூள்+தயிர் சேர்த்து பிரட்டி குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து தண்ணிரை அளந்து வைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி அரியவும்.பச்சை மிளகாயை கிறவும்.இஞ்சி பூண்டை அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் பொடித்த பொடி சேர்த்து கிளறவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.இல்லையெனில் அடி பிடிக்கும்.

*பின் கறிவேக வைத்த நீரை அளந்து அதற்க்கு தேவையானளவு நீர் 2ம் 3 கப் வருமாறு அளந்து ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிவந்ததும் அரிசி+உப்பு சேர்க்கவும்.தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய்ப்பால்+வேகவைத்த கறி சேர்க்கவும்.

*நீர் சுண்டி வரும் போது புதினா கொத்தமல்லி+நெய் சேர்த்து தம்மில் 15 நிமிடம்  போடவும். அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.


*சுவையான பிரியாணி ரெடி!!
Wednesday, 21 September 2011 | By: Menaga Sathia

ஷிவானியின் 3வது பிறந்தநாள்....../My Little Angel 3rd Birthday..

இன்று 3 வது பிறந்தநாள்  காணும் என் செல்லக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
Birthday Graphics
Sunday, 18 September 2011 | By: Menaga Sathia

காராமணி புடலங்காய் பொரியல்/ Snake gourd &Cow Peas Poriyal


தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப்
உப்பு சேர்த்து வேகவைத்த காராமணி - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து புடலங்காய் + உப்பு சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*புடலங்காய் பாதியளவு வெந்ததும் காராமணி சேர்த்து வேகவிடவும்.

*பின் புடலங்காய் வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
Friday, 16 September 2011 | By: Menaga Sathia

பீட்ரூட் அல்வா /Beetroot Halwa


தே.பொருட்கள்
துருவிய பீட்ருட் - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு

செய்முறை

*கடாயில் சிறிது நெய் விட்டு பீட்ரூட்டை பச்சை வாசனை போக வதக்கவும்.

*பின் பால் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் சர்க்கரை+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

*சுண்டி வரும் போது நெய்+முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

Tuesday, 16 August 2011 | By: Menaga Sathia

கடப்பா /Kadappa | Side Dish For Idli & Dosa


தே.பொருட்கள்

வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய வெங்காயம் -  1
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
பட்டை- சிறுதுண்டு
பிரியாணி இலை- 2
கறிவெப்பிலை -1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 *பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
 *நன்கு வதங்கியதும் மசித்த உருளை+பாசிப்பருப்பு+தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
 *பின் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
*இட்லி,தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன்.....
Friday, 12 August 2011 | By: Menaga Sathia

அம்மினி கொழுக்கட்டை/Ammini Kozhukattai

 தே.பொருட்கள்

தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்+1 டீஸ்பூன்
உப்பு = தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து


செய்முறை

*ஒரு பாத்திரத்தில் தண்ணீர்+உப்பு+1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

 *ஆறியதும் சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் 5 நிமிடம் வேகவிடவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெந்த உருண்டைகள்+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.





*சூடாக சாப்பிட நன்றாகயிருக்கும்.


பி.கு

இதில் நான் மீதமான உளுந்து பூரணத்தை தூவி செய்துள்ளேன்,அதற்கு பதில் தேங்காய்த்துறுவல் அல்லது இட்லி மிளகாய்ப்பொடி உபயோகிக்கலாம்.
01 09 10