Monday, 1 November 2010 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு பர்பி / Moongdal Burfi

தே.பொருட்கள்:
வறுத்த பாசிப்பருப்பு மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3/4 கப்
 
செய்முறை :
*சர்க்கரை முழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும்.

*இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும்.

*கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும்.

*ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி நன்கு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

*உடனே ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.
 
பி.கு:
*கடையில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பு மாவுதான் உபயோகித்துள்ளேன்.மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த பர்பி...

*ஒற்றை கம்பி பதம் என்பது 2 விரல்களுக்கிடையே ஒற்றை இழைபோல வரும்.அதுதான் பர்பி செய்ய சரியான பதம்.

* தூளாக வந்த பர்பியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி லட்டுகளாக பிடித்துவிட்டேன்...


கதம்ப சாதம் / Kathamba Rice

DK's Chef in you வெப்சைட்டில் பார்த்து செய்தது.
தே.பொருட்கள்:அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
புளிகரைசல் - 1 1/2 கப்
விருப்பமான காய்கறிகள் - 3 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை+கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:*அரிசியை 3 கப் நீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.2 பருப்புகளையும் வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் காய்களை போட்டு முழ்குமளவு நீர் விட்டு 15நிமிடம் வேகவைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் புளிகரைசல்+உப்பு+சாம்பார் பொடி+கறிவேப்பிலை+பாதி வேக்காடு வேகவைத்த காய்கறிகள் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.

*காய்கள் வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைத்து வேகவைத்த சாதம்+கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறவும்.

*கடைசியாக நெய் சேர்க்கவும்.ஊறுகாய்,அப்பளமுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Sending this recipe to T&T Event by Priya started by Lakshmi.
Thursday, 28 October 2010 | By: Menaga Sathia

டிரை ஜாமூன்(Dry Jamun)


தே.பொருட்கள்:பால் பவுடர் - 1 கப்
மைதா - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
ரவை - 1 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையான அளவு
சர்க்கரை - 1/2 கப் + 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:* ஒரு பவுலில் ரவையை சிறிது பால் விட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பின் அதனுடன் பால் பவுடர்+மைதா+நெய்+பேக்கிங் சோடா அனைத்தையும் ஒன்றாக கலந்து பால் விட்டு கெட்டியாக பிசையவும்.
*மாவு பதம் மிகவும் மிருதுவாக இருக்கவேண்டும்,கைகளில் ஒட்டக்கூடாது.
*சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை+தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.

*பொரித்த உருண்டைகளை சூடான சர்க்கரை பாகில் 1-2 மணிநேரங்கள் ஊறவிடவும்.
*ஒரு தட்டில் 1/4 கப் சர்க்கரையை கொட்டி ஊறிய ஜாமூன்களை ஒவ்வொன்றாக அதில் புரட்டி எடுக்கவும்.
*ப்ரிட்ஜில் சிறிதுநேரம் வைத்திருந்து பரிமாறவும்.சுவையான டிரை ஜாமூன் ரெடி!!
Wednesday, 27 October 2010 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சித் தொக்கு/ Mango Ginger Thokku

தே.பொருட்கள்:
மாங்காய் இஞ்சி - 100 கிராம்
புளி - 1நெல்லிகாயளவு
காய்ந்த மிளகாய் - 6
வெல்லம் - 1 சிறுதுண்டு
வெந்தயத்தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
செய்முறை:
*கடாயில் தோல் சீவி நறுக்கிய மாங்காய் இஞ்சி+காய்ந்த மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி ஆறவைக்கவும்.

*அதனுடன் புளி+உப்பு தேவையானளவு நீர் சேர்த்து மைய அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி வெந்தயத்தூள்+வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
Tuesday, 26 October 2010 | By: Menaga Sathia

கோவைக்காய் பச்சடி/ Ivy Gourd Pachadi

தே.பொருட்கள்:
துருவிய கோவைக்காய் - 2 கப்
தயிர் - 250 கிராம்
தேங்காய்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சாட் மசாலா - மேலே தூவ
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*தேங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய் தயிர் சேர்த்து மைய அரைக்கவும்.

*ஒரு பவுலில் கோவைக்காய்+உப்பு++அரைத்த விழுது சேர்த்து ஒன்றாக கலந்து சாட் மசாலாவை மேலே தூவி விடவும்.

*புலாவ்,பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Monday, 25 October 2010 | By: Menaga Sathia

பருப்பு உருண்டை ரசம்/ Paruppu Urundai Rasam

சாதரணமாக பருப்பு உருண்டைக்குழம்பு தான் செய்வோம்.அதுபோல் உருண்டைகளை ரச்த்தில் போட்டு செய்தால் இன்னும் சூப்பராகயிருக்கும்...
தே.பொருட்கள்:புளி கரைசல் - 1 1/2 கப்
தக்காளி - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூண்டுப்பல் - 2
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
ரசப்பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

உருண்டைக்கு:கடலைப்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+சோம்பு+காய்ந்த மிளகாய்+பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+கொத்தமல்லித்தழையை இதனுடன் கலந்து உருண்டைகளாக ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.பூண்டு+பச்சை மிளகாயை நசுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தக்காளி+மஞ்சள்தூள்+உப்புநசுக்கிய பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*பின் ரசப்பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த உருண்டைகளைப்போட்டு 5 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.
Sunday, 24 October 2010 | By: Menaga Sathia

பச்சை ஆப்பிள் ஊறுகாய்/ Green Apple Pickle

தே.பொருட்கள்:பச்சை ஆப்பிள் - 2
கடுகு+வெந்தயம் - தலா 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
 
செய்முறை:*ஆப்பிளை சிறுதுண்டுகளாக நறுக்கி(நான் தோல் சீவி நறுக்கியுள்ளேன்)எலுமிச்சை சாறு(நிறம் மாறாமல் இருக்க)+உப்பு+வரமிளகாய்த்தூள் கலக்கவும்.

*வெறும் கடாயில் கடுகு+வெந்தயம் வறுத்து பொடித்து ஆப்பிளில் கலக்கவும்.

*பின் நல்லெண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.

*வெந்தய மாங்காய் ஊறுகாய் போல இருக்கும்.தயிர் சாதத்திற்க்கு சூப்பர் ஜோடி.அப்படியே கூட சாப்பிடலாம்.

பி.கு:
1 நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்,அதற்க்குமேல் நன்றாகயிருக்காது..
01 09 10