Thursday, 28 April 2011 | By: Menaga Sathia

தக்காளி கொத்சு /Tomato Kotsu

தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இட்லி மாவு - 1 குழிக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கி 2 கப் நீர்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் இட்லிமாவு சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*அவசரத்திற்க்கு உடனடியாக செய்துவிடலாம்.இட்லி,தோசைக்கு நன்றாகயிருக்கும்.
Wednesday, 27 April 2011 | By: Menaga Sathia

புளிசாதம் - 2 / Tamarind Rice -2

மீதமான சாதத்தை இரவு புளி ஊற்றி வைத்து மறுநாள் தாளித்து சாப்பிடும் சுவையோ சுவைதான்.எனக்கு இந்த முறையில் செய்த புளிசாதம் என்றால் உயிர்.

தே.பொருட்கள்:
மீதமான சாதம் - 2 கப்
புளி - 1 எலுமிச்சை பழளவு
உப்பு +எண்ணெய் =தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*மீதமான சாதத்தில் இரவே புளியை உப்பு கெட்டியாக கரைத்து கிளறி வைக்கவும்.

*மறுநாள்,பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.

*இதற்கு தொட்டுக்கொள்ள மசால்வடை இருந்தால் போதும் எனக்கு....

Tuesday, 26 April 2011 | By: Menaga Sathia

ரோஸ்டட் கடலைப்பருப்பு / Oven Roasted Channa Dal

தே.பொருட்கள்

கடலைப்பருப்பு - 1 கப்
மிளகாய்த்தூள்,எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடலைப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.அதனுடன் மேறகூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி கடலைப்பருப்பை பரப்பவும்.

*220°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையிடேயை கிளறி விடவும்.
Sunday, 24 April 2011 | By: Menaga Sathia

கானாங்கெழுத்தி மீன் புட்டு / Mackerel Fish puttu


தே.பொருட்கள்

கானாங்கெழுத்தி மீன் - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*மீனை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு முழ்குமளவு நீர்+மஞ்சள்தூள் சேர்த்து நீர்வற்றும் வரை கிளறி வேகவிடவும்.

*ஆறியதும் முள்ளில்லாமல் உதிர்க்கவும்.

*கடாயில் எணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சைமிளகாய்+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் உதிர்த்த மீனை சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளறி தேங்காய்த்துறுவல்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கட்லட் செய்யலாம்.
Thursday, 21 April 2011 | By: Menaga Sathia

குடமிளகாய் சாதம் / Capsicum Rice

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் - 2 கப்
துண்டுகளாகிய குடமிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
நெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் - தேவைக்கு

வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலையை தவிர மற்றவைகளை நைசாக பொடித்து கடைசியாக வேர்க்கடலையை சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கினால் போதும்.

*பின் பொடித்த பொடி+சாதம்+உப்பு+நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
Tuesday, 19 April 2011 | By: Menaga Sathia

ஈஸி சட்னி/ Easy Chutney

தே.பொருட்கள்:வெங்காயம் - 1
தக்காளி - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:*வெங்காயம்+தக்காளியை அரிந்து அதனுடன் புளி+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும்.

மலர் காந்தி , விமிதா அவர்கள் கொடுத்த விருது.இருவருக்கும் மிக்க நன்றி !!




இந்த விருதினை ஸாதிகா அக்கா,தேனக்கா,ப்ரியாஸ்ரீராம் ,காயத்ரி,மகி,தெய்வசுகந்தி இவர்களுக்கு கொடுக்கிறேன்.

Sunday, 17 April 2011 | By: Menaga Sathia

வாளைக்கருவாடு வறுவல்/ Dry Belt(Ribbon) Fish Varuval



தே.பொருட்கள்:
வாளைக்கருவாடு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*கருவாட்டை முள்ளில்லாமல் சுத்தம் செய்யவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் கருவாடு+1/4 கப் நீர்+உப்பு சேர்த்து நன்கு சுறுள கிளறி வறுக்கவும்.

ஜெய் ,விமிதா அவர்கள் கொடுத்த விருது.நன்றி ஜெய்,!விமிதா!!
ப்ரியா ,விமிதா மற்றும் ஸ்வர்ணவள்ளி சுரேஷ் அவர்கள் கொடுத்த விருது.மூவருக்கும் மிக்க நன்றி!!

இவ்விருதுகளை சங்கீதா விஜய்,சவீதா,ஷானவி,கல்பனா ,குறிஞ்சி, கிருஷ்ணவேணி ,ஆசியா அக்கா இவர்களுக்கு கொடுக்கிறேன்
01 09 10