Thursday, 30 May 2013 | By: Menaga Sathia

முருங்கைக்கீரை பொரியல் /Drumstick Leaves Poriyal

தே.பொருட்கள்

 முருங்கைக்கீரை - 2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
நசுக்கிய பூண்டுப்பல் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு+சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதித்ததும் கீரையை சேர்த்து நீர் சுண்டும் வரை கிளறவும்.

*பின் தேங்காய்த்துறுவல்+நசுக்கிய பூண்டுப்பல் சேர்த்து கிளறி இறக்கவும்.

Sending to Priya's Vegan Thursday & Gayathri's WTML @ Nivedhanam
Monday, 27 May 2013 | By: Menaga Sathia

பட்டாணி புலாவ்/Peas Pulao

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
ப்ரோசன் பட்டாணி - 3/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

பட்டை - சிறுதுண்டு
கிராம்பு+ஏலக்காய் - தலா 3
பிரியாணி இலை -2

செய்முறை

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*குக்கரில் வெண்ணெய் போட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பட்டாணி  சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி + உப்பு+2 கப் நீர்+தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
Thursday, 23 May 2013 | By: Menaga Sathia

மசாலா வேர்க்கடலை/Masala Peanuts

 தே.பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாட்மசாலா - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க


செய்முறை


*ஒரு பவுலில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
*எண்ணெய் காயவைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Monday, 20 May 2013 | By: Menaga Sathia

சத்துமாவு கொழுக்கட்டை/ Health Mix Kozhukattai


தே.பொருட்கள்

சத்துமாவு - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பாசிபருப்பு -  2 டேபிள்ஸ்பூன்
எள் -  1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*எள் +பாசிபருப்பு+சத்துமாவு இவற்றை தனித்தனியாக வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுக்கவும்.

*இதனுடன் மேற்கூறிய பொருட்களிளை ஒன்றாக கலந்து வெந்நீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

*கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Sending to Easy to prepare in 15 mins @Aathidhyam  &Gayathri's WTML Event @Nivedhanam.
Thursday, 16 May 2013 | By: Menaga Sathia

பைனாப்பிள் லஸ்ஸி /Pineapple Lassi


தே.பொருட்கள்

பைனாப்பிள் துண்டுகள் - 1 கப்
தயிர் - 2 கப்
தேன் -  1/8 கப்
பால் - 1/4 கப்
ஐஸ் துண்டுகள் - 5

செய்முறை

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து பருகவும்.

Sending to easy to prepare in 15 minutes @Aathidhyam & Gayathri's  WTML Event @ Nivedhanam
Monday, 13 May 2013 | By: Menaga Sathia

ஆட்டுக்கால் குழம்பு/Aatukal (Goat Leg) Khuzhampu


அண்ணியிடம் கற்றுக்கொண்ட குறிப்பு...

தே.பொருட்கள்

‍சுத்தம் செய்த‌ ஆட்டுக்கால் ‍- 1 செட்
மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்த துவரம்பருப்பு  - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம்  -1
நறுக்கிய தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
தனியாதூள்- 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க

கிராம்பு -3
பிரியாணி இலை- 2
பட்டை - சிறுதுண்டு
ஏலக்காய்  - 2

அரைக்க‌
தேங்காய்த்துறுவல்  - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்



செய்முறை

*ஆட்டுக்காலை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 - 5 விசில் வரை வேகவைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சிபூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் வேகவைத்த கால்+நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்றாக கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு+அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் கொதிக்கவைத்து இறக்கவும்.

*சப்பாத்தி,பரோட்டா,சாதம் என அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.

பி.கு
*அம்மா இதனுடன் மொச்சைக்கொட்டை  சேர்த்து கறிகுழம்பு போல் செய்வாங்க.

Friday, 10 May 2013 | By: Menaga Sathia

மல்டிக்ரேயின் வெஜ் பிஸ்ஸா/Yeast Free Multigrain Veg Pizza For HBC -1


தே.பொருட்கள்

மைதா - 1/2 கப்+ 1/4 கப்
கோதுமைமாவு  - 1/2 கப்
பொடித்த ஒட்ஸ்  - 1/2 கப்
பார்லிமாவு - 1/2 கப்
ப்லாக்ஸ் ஸூட் விதை -  1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் -  1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா  -  தலா 1 டீஸ்பூன்
தயிர்  - 1/4 கப்
எலுமிச்சை சாறு -  1 டேபிள்ஸ்பூன்
உப்பு  - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் -  2 டேபிள்ஸ்பூன்


பிஸ்ஸா டாப்பிங் செய்ய‌

பனீர் துண்டுகள் - 1/2 கப்
துருவிய சீஸ் - தேவைக்கு
நறுக்கிய  ஆலிவ் காய்  - 6
குடமிளகாய் துண்டுகள்  - தேவைக்கு
பிஸ்ஸா/பாஸ்தா சாஸ் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயம்  - 1
நறுக்கிய காளான்  -  1/4 கப்
இத்தாலியன் மிக்ஸட் ஹெர்ப்  - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்


செய்முறை

*1/2 கப் மைதா+கோதுமைமாவு+ஒட்ஸ்+பார்லிமாவு+உப்பு+எள்+ப்லாக்ஸ் ஸூட் பவுடர்+எள்+பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா + ஆலிவ் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து தயிர் சேர்த்து கலக்கவும்.

*தேவைக்கு நீர் சேர்த்து பிசைந்து கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 5 மணிநேரம் வைக்கவும்.

*இருமடங்கு உப்பிய மாவை 1/4 கப் மைதா சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து வட்டமாக உருட்டி ஆங்கங்கே முள்கரண்டியால் குத்தி ஆலிவ் எண்ணெயை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.

*ஓரங்களை மட்டும் 1 இஞ்ச் அளவு தடிமனாக தட்டி முற்சூடு செய்த அவனில் 220°C இல் 5 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*பேக் செய்த பிஸ்ஸா அடிப்பாகத்தில் பிஸ்ஸா சாஸை பரவலாக தடவி அதன்மேல் குடமிளகாய்+வெங்காயம்+ஆலிவ் காய்+பனீர் இவற்றினை பரவலாக வைத்து அதன்மேல் துருவிய சீஸ் தூவி ஆலிவ் எண்ணெயை ஊற்றி  இத்தாலியன் மிக்ஸட் ஹெர்ப்  தூவி விடவும்.

*மீண்டும் 220°C  இல் 5‍ - 6 நிமிடங்கள் (அ )சீஸ் உருகும் வரை பேக் செய்து எடுக்கவும்.



This is the 1 st time i post the recipe in  both tamil & english languages. HBC challenge was started by priya suresh  .The 1st  month challenge is given by Divya prakash ,as she suggest  pizza recipe gave 4  choices ,This time i tried to make  homemade multigrain flour without yeast.came out very well.Thxs to Priya & Divya!!

Ingredients


Multigrain Pizza Base  (Yeast Free)  - Recipe Follows
Pizza Sauce - 1/2 cup
Bell Pepper
Olives- 6 (Chopped)
Grated Cheese - 1/2 cup
Paneer -1/2 cup
Onion - 1 Small (Sliced)
Olive Oil  - as needed
Italian Seasoning - 1 Tspn


Method


*Preheat the oven  to 220° C .Brush the Pizza Base with olive oil &place it in baking tray and bake for 3  minutes.

*Then take out the Pizza Base  from oven spread with  sauce +cheese+paneer+bell pepper+onion+olives sprinkle with some cheese or top with ur fav veggies.+Italian Seasoning

*Bake for 5-6 mins &enjoy the healthy multigrain pizza!!..


Recipe For  Yeast Free Multigrain Pizza

Wheat Flour -1/2 cup
APF - 1/2 cup + Extra for dust
Oats Powder + Barley Flour = Each 1/2 cup
Flax seeds powder+White Sesame seeds = Each 1 Tbspn
Baking Powder+Baking Soda = Each 1 Tspn
Yoghurt -1/4 cup
Lemon Juice - 1Tbspn
Olive Oil - 2 Tbspn
Salt -as needed

Method

*Sieve all dry ingredients in a bowl.To that add salt mix & then add yoghurt combine together well.

*Add water &start  to knead the dough.Make Very Soft and the dough which is very little sticky.

*Now add lemon juice,mix well.cover the dough with wet towel &cover with lid and keep in warm place for 4-5 hrs.

*After 4  hrs dough will rise & almost double in size.

*Now sprinkle some dry flour on rolling board,take a ball &stretch out from all the sides.You may also make use of rolling pin and roll like chappathi.

*Place rolled pizza base in prepared pizza stone R Baking tray .

*Preheat the Oven at 220°C &bake for  5 Minutes.

Notes:

.I suggest  to precook the pizza base (before u add the toppings) for 5 mins or so.I have done this &achieved the gr8 crispy results.

*If u wish u can add  yeast  in Pizza Base.


To join this group,click here..
01 09 10