Sunday 26 April 2009 | By: Menaga Sathia

பீன்ஸ் வெள்ளைக் குருமா


தே.பொருட்கள்:

பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
தேங்காய்ப்பால் - 1 சின்ன டின்
புதினா - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்

அரைக்க:

இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 6

தாளிக்க:

பட்டை - 1துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை - ௧

செய்முறை:

*பீன்ஸ்+வெங்காயம்+தக்காளி இவைகளை அரிந்துக் கொள்ளவும்.

*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது+புதினா ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் பீன்ஸ் போட்டு வதக்கி உப்பு+தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்து காய் வெந்ததும் எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

குப்பன்.யாஹூ said...

thanks useful, pls write about normal beans poriyal .

Menaga Sathia said...

நன்றி குப்பன் யாஹூ!!.பீன்ஸ் பொரியல் குறிப்பினை நிச்சயம் போடுகிறேன்.

Unknown said...

குருமா சப்பாத்திக்கி சூப்பராக இருக்கும்

Asiya Omar said...

பீன்ஸ் குருமா சூப்பர்.

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி ஆசியாக்கா!!

01 09 10