Tuesday 9 February 2010 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வறுவல்

தே.பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

பொட்டுக்கடலை - 1/4 கப்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
ஒட்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 4 பல்

செய்முறை :

*கத்திரிக்காயை வட்டமாக நறுக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளில் உப்பு சேர்த்து பொடிக்கவும்.

*பொடித்த கலவையில் கத்திரிக்காயை நன்றாக இருபக்கமும் பிரட்டவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு கத்திரிக்காயினை வறுத்தெடுக்கவும்.

*அல்லது அவனில் வைத்தும் செய்யலாம்.நான் தவாவில் எண்ணெய் விட்டு வறுத்துள்ளேன்.

*கத்திரிக்காய் அதிக எண்ணெய் இழுக்கும் அதனால் நான் ஸ்டிக் பேனில் செய்வது நலம்.

பி.கு:
சாம்பார்,ரசம்,தயிர் சாதத்திற்க்கு மிகவும் நன்றாகயிருக்கும்.

39 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sanjai Gandhi said...

ஆஹா.. அவனில் செய்யலாமா? விரைவில் செஞ்சிடுவோம்.. தேங்க்ஸ்க்கா :)

kavisiva said...

கத்திரிக்காய் வறுவலில் ஓட்ஸ்! நிச்சயம் சுவையாகத்தான் இருக்கும். நாளை செய்த்து ருசிக்கப்போகிறேன்

ஸாதிகா said...

பொட்டுக்கடலை மாவு சேர்த்து ..அவனில்..வித்தியாசமாகத்தான் உள்ளது.

Jaleela Kamal said...

கத்திரிக்காய் வறுவல் சூப்பர்.

ரோஸ்விக் said...

அக்கா... உங்கள் பதிவுகளையும் பார்த்து... வீட்டில் நிறைய வகைகள் செய்யச் சொல்லி தின்று... நன்றாக தொப்பை வளர்க்கிறேன்...:-)))

suvaiyaana suvai said...

super Menaga!!

Nithu Bala said...

a very different recipe..will try definitely..nice picture Dear :-)

M.S.R. கோபிநாத் said...

Wow..yummy

டவுசர் பாண்டி said...

இது மேரி ஈஜியா , இருந்தாக்கா தான் நமபுளுக்கு சுளுவா இருக்கும் , சென்சி பாத்துட்டு சொல்றேன் !!

Shama Nagarajan said...

delicious different fry..tempting

Pavithra Elangovan said...

Mmmmmmmmmmmmmmmm i love this varuval.. parkave vaai uruthu...

அண்ணாமலையான் said...

என்னங்க இது? வஞ்சிர மீன் மாதிரி இருக்கு, கத்திரிக்கானு சொல்றீங்க? சூப்பரா இருக்கு

Menaga Sathia said...

ம்ம் அவனில் தாராளமா செய்யலாம்.பேக்கிங் டிரேயில் கத்திரிக்காயை வைத்து ஆயில் ஸ்ப்ரே செய்து அவனில் வைக்கவும்.ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு ஆயில் ஸ்ப்ரே செய்து பேக் செய்யவும்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

செய்துபார்த்து சொல்லுங்கள் கவி.சுவை சூப்பராகயிருக்கூம்.நன்றி கவி.

பொட்டுக்கடலை மாவு சேர்ப்பதால் க்ரிஸ்பியாக இருக்கும்.நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

என் பதிவுகளை செய்வதில் மிக்க சந்தோஷம்.டயட் ரெசிபியும் இருக்கு.அதனால் உங்க வெயிட்டும் ஏறாது.நன்றி ரோஸ்விக்!!

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!

நன்றி நிது!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!


சென்சி பார்த்து சொல்லுங்க,நன்றி அண்ணாத்தே!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

//என்னங்க இது? வஞ்சிர மீன் மாதிரி இருக்கு, கத்திரிக்கானு சொல்றீங்க? சூப்பரா இருக்கு//நிஜமா நம்பலையா நீங்க.இது கத்திரிக்காய் தாங்க.நன்றி அண்ணாமலையான்!!

வேலன். said...

கத்தரிக்காயா...வஞ்சிரம் மீன் வருவலா..? அருமையாக இருக்கு சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Unknown said...

யக்காவும்.. கத்திரிக்காய் பிடிக்காத மக்கள் கூட இதனை பார்த்தால் செய்து விரும்பி சாப்பிடுவாங்க.. சூப்பராக இருக்கு மேனகா

ஜெட்லி... said...

கத்திரிக்காய் இவ்ளோ பெருசுக்கு எங்கே போறது...
இந்த கத்திரிக்காய் பேரு என்ன??

malar said...

நல்லா இருக்கும் போல் தெரிகிறது.செய்து பார்க்கவேண்டும்.

செய்வதற்க்கு உத்தேசம் எவ்வளவு நேரம் ஆகும்.

malar said...

மிளகு-பெப்பரா? வத்தல் மிளகா?

Thenammai Lakshmanan said...

அட வித்யாசமா இருக்கு மேனகா

Thenammai Lakshmanan said...

//அண்ணாமலையான் said...
என்னங்க இது? வஞ்சிர மீன் மாதிரி இருக்கு, கத்திரிக்கானு சொல்றீங்க? சூப்பரா இருக்கு//

haaha its true MENAKA

Menaga Sathia said...

இது கத்திரிக்காய் தாங்க.நன்றி சகோதரரே!!

ஆமாம் இந்த முறையில் செய்ததில் ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

இதுக்கு பேரே பெரிய கத்திரிக்காய்தான்.ரிலையன்ஸ்,பழுமுதிர்சோலை மார்க்கெட்களில் இந்த விதையில்லா பெரிய கத்திரிக்காய் கிடைக்கிறது.நன்றி ஜெட்லி!!

Menaga Sathia said...

செய்வதற்க்கு 15 நிமிஷமாகும்.செய்து பாருங்கள்.மிளகு என்பது பெப்பர் தான்.நன்றி மலர்!!

Menaga Sathia said...

////அண்ணாமலையான் said...
என்னங்க இது? வஞ்சிர மீன் மாதிரி இருக்கு, கத்திரிக்கானு சொல்றீங்க? சூப்பரா இருக்கு//

haaha its true MENAKA//அக்கா நீங்களுமாஆஆஆ....நன்றி தேனக்கா!!

Nithu Bala said...

I've three awards to share with you..please drop in at my blog..Congrats Dear :-)

ப்ரியமுடன் வசந்த் said...

யக்கா சோக்கா கீதுக்கா...

உங்க போஸ்ட் படிச்சுட்டு இருக்குறதுனாலதான் சமையல் ராசாவா வெளுத்து கட்டுறேன் இங்க உங்க போஸ்ட்ஸ் என்ன மாதிரி பேச்சலர் சமையல் காரர்களுக்கு வரம்..

தொடரட்டும் உங்கள் சேவை...

geetha said...

மேனு!
அதெப்படி இப்பிடி எளிமையாய், அட்டகாசமாய் ரெஸிபி கொடுத்து அசத்தறீங்க??
வர வர உங்க ப்ளாக் பக்கம் வரவே பயமாய் இருக்கு. அதுவும் பசி நேரத்தில் உட்கார்ந்திட்டா, சாதாரண பசிகூட அகோரப்பசியாய் மாறிடுது.
போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டேதான் டைப் பண்ணவேண்டியதாய் இருக்கு!

பித்தனின் வாக்கு said...

இது வெஜிட்டேரியன் பிஸ் பிரைன்னு சொல்லலாம்.பார்த்தா அப்படித்தான் இருக்கு. பருப்பு பொடி போட்டி வதக்கினால் நல்லா இருக்கும். நன்றி. இது சூப்பர்.

Menaga Sathia said...

தங்கள் அன்பான விருதுக்கு மிக்க நன்றி நிது!!


பேச்சுலர்களுக்கு என் சமையல் உதவுவதில் சந்தோஷம்.நன்றி வசந்த்!!

Menaga Sathia said...

//போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டேதான் டைப் பண்ணவேண்டியதாய் இருக்கு!//ஹா..ஹா

//மேனு!
அதெப்படி இப்பிடி எளிமையாய், அட்டகாசமாய் ரெஸிபி கொடுத்து அசத்தறீங்க??
வர வர உங்க ப்ளாக் பக்கம் வரவே பயமாய் இருக்கு. அதுவும் பசி நேரத்தில் உட்கார்ந்திட்டா, சாதாரண பசிகூட அகோரப்பசியாய் மாறிடுது.//இது சும்மா ஒரு மாறுதலுக்காக இப்படி செய்து பார்த்ததில் ரொம்ப நல்லாயிருந்ததுப்பா.அஹுக்காக ப்ளாக் பக்கம் வராம் இருந்துடாதீங்க.நன்றி கீதா!!

Menaga Sathia said...

//இது வெஜிட்டேரியன் பிஸ் பிரைன்னு சொல்லலாம்.//அட..ஆமாம் இந்த பெயரும் நல்லாதான் இருக்கு.நன்றி சுதா அண்ணா!!

Priya Suresh said...

Wow this looks fantastic Menaga..Asathuringa ponga..

Trendsetters said...

great looking eggpant..wow that too in the oven

01 09 10