Friday, 6 August 2010 | By: Menaga Sathia

பதிவுலகில் என்னைப் பற்றி...

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த (மாட்டி விட்ட) கவிசிவாவுக்கு மிக்க நன்றி!!!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
மேனகா.. சத்யா கணவர் பெயர்..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இதில் என்ன சந்தேகம்....

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பாயிஜா அவர்களின் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்காக வலைப்பதிவில் வலதுகால் வைத்தேன்.அப்போல்லாம் வலைப்பூ பற்றி எதுவும் தெரியாது.பின் ஹர்ஷினி அம்மா அவர்கள் தான் சொன்னாங்க வலைப்பூவில் நமக்கு தெரிந்ததை எழதலாம் என்று.அதிலிருந்து சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன்...

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் இணைத்தேன்..அவ்வளவுதான்...

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பெரும்பாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில்லை..மேலும் நான் எழுதுவது சமையல் ப்ளாக் அதனால் கூடவும் இருக்கலாம்...

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

அடப்போங்க ...சம்பாதிக்கிற மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் கோடீஸ்வரியாகிருப்பேன்...ம்ம் பொழுது போக்கிற்காகதான் எழுதுகிறேன்.அதில் பலர் பயனடைவதில் தனி சந்தோஷம்..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ம்ம் ஒன்னுதாங்க..இதுவே சமாளிக்க முடியவில்லை.இதுல இன்னோன்னு வேறயா??

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

யார் மீதும் கோபம் வந்ததில்லை.மற்றவர்கள் மீது கோபப்பட நமக்கு என்ன உரிமை இருக்கு...கோபம் வந்ததால் தானே பொறாமைபட வாய்ப்பு வரும்..சோ யார் மீதும் எனக்கு கோபம்+ பொறாமை இல்லை.ஆரம்பத்தில் அதிகம் கோபம் வரும் இப்போல்லாம் போயே போச்சு...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன்முதலில் பின்னூட்டம் இட்டவர் பாயிஷாவும் , சகோதரர் ஜமால் அவர்களும் தான்...

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி பெருசா சொல்ல எதுவுமில்லை.நான் நானாகவே இருக்க விருப்பம்.இந்த பதிவுலகில் முகம் தெரியாத சகோதர சகோதரிகளை பெற்றுள்ளேன்.அதுவே எனக்கு பெரிய சந்தோஷம்.எல்லோரிடமும் அன்பா இருக்கனும்.பொறாமை பட கூடாது.பொறாமை வந்தால் நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது மாதிரி..முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யனும்..இன்னும் நிறைய இருக்கு.அதெல்லாம் சொன்னால் பதிவு பெருசாகிடும்...

இந்த தொடரை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.....

41 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Superb Menaka..loved to read about you..

RV said...

Loved it. Your answer to those questions were straight forward and the it made me feel that Tamil is the best and beautiful language. Idhu ellam Tamizhla elathanumnu asaithaan. Oru nalla tamil puthagam paditha feel kadaichathu. Mikka Nandri :)

Anonymous said...

மேனகா ஜி பதில்கள் எல்லாமே யதார்த்தமா இருந்தது நன்றி

'பரிவை' சே.குமார் said...

//இந்த பதிவுலகில் முகம் தெரியாத சகோதர சகோதரிகளை பெற்றுள்ளேன்.அதுவே எனக்கு பெரிய சந்தோஷம்.எல்லோரிடமும் அன்பா இருக்கனும்.பொறாமை பட கூடாது.பொறாமை வந்தால் நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது மாதிரி..முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யனும்..//
உண்மையான பேச்சு... சமையலில்தான் கலக்குவீங்க என்று நினைத்தால் பதில்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.
சமையலின் ஊடே நேரம் கிடைக்கும் போது நிறைய நல்ல விசயங்களையும் எழுதலாமே..?

பொன் மாலை பொழுது said...

I like it.

எல் கே said...

உங்களை போலவே மிக எளிமையாகவும் , நேர்மையாகவும் இருந்தது உங்கள் பதில்கள் மேனகா

ப்ரியமுடன் வசந்த் said...

பதில்கள் எல்லாம் சுவையாவே இருந்தது ..தங்கள் சமையலைப்போலவே :)

நட்புடன் ஜமால் said...

என் பெயரும் இருப்பது நெகிழ்வாய் இருந்திச்சி - நிஜமாவே

Krishnaveni said...

nice to know more about you menaka. very good answers

ஸாதிகா said...

அருமையான பதில்கள் மேனகா.

GEETHA ACHAL said...

superaka iruku pathilkal.......

Prathap Kumar S. said...

தொடர்பதிவுக்கு யாராவது கூப்பிட்டாத்தான் சமையல் அல்லாத பதிவு போடுவீங்க போலருக்கே...இதுக்காகே உங்களை அடிக்கடி மாட்டிவிடனும்..:))


கோர்ட்ல பகவத்கீதைல சத்தியம் வாங்கிட்டு உண்மையை சாட்சி சொன்னா மாதிரி இருக்கு...:))

Asiya Omar said...

பதில்கள் சிம்ப்ளி சூப்பர்.

Unknown said...

பதில்கள் எல்லாமே அருமை.. உங்கள் பதிவில் முதல் கருத்து சொன்ன என்னையும் ஞாபகம் வைத்து சேர்த்தமைக்கு நன்றி மேனகா....

ஜெய்லானி said...

//பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இதில் என்ன சந்தேகம்....//

அதானே ..இதில் என்ன சந்தேகம்

kavisiva said...

அழைப்பை ஏற்று மாட்டிக்கொண்டதற்கு நன்றி மேனு :)

யதார்த்தமான பதில்கள்.

Jayanthy Kumaran said...

Hey very interesting...Glad to know more about u dear.

vanathy said...

மேனகா, பதில்கள் அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகா சொல்லியிருக்கீங்க.

Akila said...

ungalai patri melum arinthathuku nandri

சௌந்தர் said...

உங்களை பற்றி சில தகவல்கள் தெரிந்து கொண்டேன் :)

ஜெய்லானி said...

யப்பா ...!! இன்னைக்கு ஒரு பதிவு சமையல் இல்லாம வந்திருக்கு ...

Katz said...

அருமையான பதில்கள்

சிநேகிதன் அக்பர் said...

பதில்கள் அனைத்தும் இயல்பு.

உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி மேனகா.

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

பிலஹரி:) ) அதிரா said...

மேனகா... சமையலறையில் இன்று வித்தியாசமான, நல்ல பதில்கள்..இதுவும் சுவையாகத்தான் இருக்கு.

சசிகுமார் said...

இன்னைக்கு சாப்பிட எதுவும் இல்லையாக்கா ரொம்ப பசியோட வந்தேன்

ஜெயந்தி said...

நல்லா பதில் சொல்லியிருக்கீங்க. உங்களப்போலவே பொருமையாக இருக்கிறது.

Thenammai Lakshmanan said...

அருமையான பதி்ல்கள் மேனகா..நல்லா எழுதி இருக்கேம்மா

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி ராதிகா!! ஆமாம்பா தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழிதான்....

நன்றி சந்தியா!!

நன்றி சகோ!! நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன்...

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி எல்கே!!

நன்றி வசந்த்!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி கீதா!!

நன்றி நாஞ்சிலாரே!! ரொம்பநாள் அப்புறம் இந்தபக்கம் வந்திருக்கிங்க...

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சிநேகிதி!!

நன்றி ஜெய்லானி!! சமையல் பதிவு போடலைன்னா அவ்வளவு சந்தோஷமா உங்களுக்கு??

நன்றி கவி!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி வானதி!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி அகிலா!!

Menaga Sathia said...

நன்றி சௌந்தர்!!

நன்றி வழிபோக்கன்!!

நன்றி அக்பர்!!

விருதுக்கு மிக்க நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி சசி!! பசியோட வந்தீங்களா?? இப்பவே வீட்டுக்கு வாங்க.சூடாக செய்து போடுகிறேன்....இன்னிக்கு ஒருநாள் எனக்கு ரெஸ்ட் அதான் ...

நன்றி ஜெயந்தி!!

நன்றி தேனக்கா!!

இமா க்றிஸ் said...

எளிமையாக அழகாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள். ;)

R.Gopi said...

அழகாக பதில்கள், யதார்த்தம் கலந்து இருந்தது... நல்ல தோழமைகளை பெற்றுள்ள அந்த இனிய மனது மேனகா அளித்த அனைத்து பதில்களும் நன்றாக இருந்தது...

வாழ்த்துக்கள் மேனகா....

தெய்வசுகந்தி said...

நல்ல பதில்கள் மேனகா!!!!!!!!

Menaga Sathia said...

நன்றி கடல்!!

நன்றி இமா!!

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி கோபி!!

நன்றி தெய்வசுகந்தி!!

வால்பையன் said...

சுருக்கமாகவும், நல்லாவும் இருக்கு!

01 09 10