Friday 6 August 2010 | By: Menaga Sathia

தர்பூசணி கூட்டு

தே.பொருட்கள்:
நறுக்கிய தர்பூசணி வெள்ளை பகுதி - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
 
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*குக்கரில் தர்பூசணி துண்டுகள்+கடலைப்பருப்பு+மஞ்சள்தூள்+வெங்காயம்+தக்காளி + 1 கப் நீர் சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.

*வெந்ததும் உப்பு+அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

*பின் தாளித்து கொட்டவும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

வெள்ளை பகுதின்னா ...

எல் கே said...

different one good

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

Thamiz Priyan said...

நல்லா இருக்கும் போல இருக்கே..:)

Menaga Sathia said...

சிவப்பு பகுதிக்கும் தோலுக்கும் நடுவில் உள்ள வெள்ளை பகுதிங்க...நாம வேண்டாம் என தூக்கி போடும் பகுதி..நன்றி சகோ!!

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி தமிழ்பிரியன்!! ரொம்பவே நன்றாகயிருக்கும்...

Krishnaveni said...

intereting koottu, will try sometime, thanks menaga

சாருஸ்ரீராஜ் said...

different one menaga

சசிகுமார் said...

குழம்பே தேவையில்லைன்னு நினைக்கிறேன், இந்த கூட்டியே பிசைந்து சாப்பிட்டு விடலாம் நல்லாயிருக்கு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

இது புதுசா இருக்கு ..படம் ரொம்ப அருமையா இருக்கு ..பகிர்வுக்கு நன்றி

Pavithra Srihari said...

watermelon white part ippadiyum use pannalaama ... very new to me .kootu looks awesome though never tasted this before , am sure gonna try this

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!! செய்து பாருங்கள்...

நன்றி சாரு அக்கா!!

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி சந்தியா!!

நன்றி பவித்ரா!! அதில் சாம்பார் கூட செய்யலாம்.செய்து பாருங்கள் ரொம்ப நன்றாகயிருக்கும்...

பொன் மாலை பொழுது said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் இது. மழை கால இரவுகளில் சூடான சாதத்துடன் இந்த கூட்டை சேர்த்து சிறிது நெய் விட்டுக்கொண்டு சுடச்சுட சாப்பிடவேண்டும். (அதெல்லாம் அம்மா இருந்த போது!)

Thenammai Lakshmanan said...

டிஃப்பரண்ட் ரெஸிபி டா மேனகா.. ஷிவானி கொள்ளை அழகு .. சுற்றிப் போடுடா..

'பரிவை' சே.குமார் said...

அருமையான கூட்டு.

Asiya Omar said...

மேனு சூப்பர்.

Akila said...

hey... its really very different one... want to taste it now itself.... book marked ur recipe.....

GEETHA ACHAL said...

மிகவும் வித்தியசமாக இருக்கின்றது...சூப்பர்ப் கூட்டு...

தேவன் மாயம் said...

ரொம்ப நன்றி! நல்லா சாப்பிடுங்க!

முற்றும் அறிந்த அதிரா said...

Nice recipe. Yummmmm.

Kanchana Radhakrishnan said...

இது புதுசா இருக்கு.பகிர்வுக்கு நன்றி.

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி தேனக்கா!!

நன்றி சகோ!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி கீதா!!

நன்றி மருத்துவரே!!

நன்றி அதிரா!!

நன்றி காஞ்சனா!!

vanathy said...

மேனகா, வித்யாசமா இருக்கு உங்கள் ரெசிப்பி. இனிப்பு சுவை வராதா?

Menaga Sathia said...

நன்றி வானதி!! இனிப்பு சுவை வராது,செய்து பாருங்கள்....

01 09 10