Tuesday 3 August 2010 | By: Menaga Sathia

சோயா கீமா கஞ்சி

தே.பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 10
பச்சரிசி - 1 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
முளைகட்டிய வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்
அரிந்த வெங்காயம் - 1 சிறியது
அரிந்த தக்காளி - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
பொடியாக அரிந்த புதினா இலைகள்- 5
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*அரிசி+பாசிபருப்பை கழுவி வைக்கவும்.சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு குளிர்ந்த நீரில் 2 அ 3 முறை அலசி பிழிந்து மிக்சியில் ரைத்தால் சோயா கீமா ரெடி.

*குக்கரில் எண்ணெய் ஊற்றி கரம்மசாலாவை போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+புதினா+தக்காளி+மிளகாய்த்தூள்+சோயா கீமா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் முளைக்கட்டிய வெந்தயம்+அரிசி+ஸ்வீட் கார்ன்+பருப்பு+உப்பு+3 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை நன்கு குழைய வேகவைத்து இறக்கவும்.

*பருப்புத்துவையல்,மசால் வடையுடன் சாப்பிட சூப்பர்ர்ர்...
Sending this recipe to Let's Sprout by Priya & Iftar Moments Hijri 1431 by Ayeesha.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

வழக்கம் போல நல்லாயிருக்கு அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

எல் கே said...

keemana udane etho on vegnu ninachen

Akila said...

kanji paavave nalla iruku...

athira said...

சுப்பரான ஒரு கஞ்சி. கீமா என்றதும் அசைவமாக்கும் என நினைத்தேன்.... நல்ல சைவக் கஞ்சி.

http://rkguru.blogspot.com/ said...

கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டியதுதான்......நல்ல சமையல் தகவல் வாழ்த்துகள்

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி எல்கே!!

நன்றி அகிலா!!

நன்றி அதிரா!!

Shriya said...

Looks healthy and inviting. Totally delicious and am bookmarking it.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு , சீக்கிரம் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்

தெய்வசுகந்தி said...

நல்ல ஹெல்த்தியான கஞ்சி!!!

Anonymous said...

மேனகா ஜி சூப்பர் ரெசிபி ...செய்யற விதம் படிக்கச்சே வாயில் நீர் ஊருது ..பகிர்வுக்கு நன்றி

Chitra said...

பார்க்கவே நல்லா இருக்குதே.... நன்றி.

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு ..பகிர்வுக்கு நன்றி.

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி ஸ்ரியா!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி தெய்வசுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி சந்தியா!!

நன்றி சித்ரா!!

நன்றி காஞ்சனா!!

Unknown said...

ஆரோக்கியமான சைவ கீமா கஞ்சி. நோன்பு நேரத்துக்கு ஏற்ற கஞ்சி.. செய்து பார்க்கிறேன்..மேனகா

ஜெய்லானி said...

ஆஹா இதை எங்கேயே கேட்ட குரலா இருக்கே..!! ( எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்)

Sadhana Valentina said...

Migavum arumayaga ulladhu.

'பரிவை' சே.குமார் said...

நல்ல சமையல் தகவல் வாழ்த்துகள்

Mahi said...

ஹிஹி,நானும் எல்கே மாதிரியே நான்வெஜ் ரெசிப்பின்னு நினச்சேன். இப்போதான் சரியாப் பாத்தேன். கஞ்சி அருமையா இருக்கு மேனகா.

நாங்கள்லாம் காய்ச்சல் வந்தா மட்டுமே கஞ்சி பக்கம் ஒதுங்கற ஆளுங்க!:):) இது ஒருநாள் செய்துபாக்கிறேன்.

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி சாதனா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி மகி!! நீங்களும் நான் வெஜ்ன்னு நினைச்சுட்டீங்களா?? செய்து பார்த்து சொல்லுங்கள்...

Jaleela Kamal said...

சோயாவில் அதுவும் என் முறையில் அசத்தலாக செய்து இருக்கீஙக.

ரொம்ப சந்தோஷம்.

01 09 10