Tuesday 31 August 2010 | By: Menaga Sathia

அவல் பாகாளாபாத்


இந்த குறிப்பை அடுப்பில் வைத்து சமைக்காமலேயே செய்யலாம்.விருப்பபட்டால் தாளித்துக்கொள்ளலாம்.

தே.பொருட்கள்:
அவல் - 1 கப்
தயிர் - 2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட்,வெள்ளரிக்காய் - தலா 1/4 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*அவலைக் கழுவி 10 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.

*பின் அவலில் இருக்கும் நீரை நன்கு பிழிந்து மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

*விருப்பப்பட்டால் நறுக்கிய கறிவேப்பிலை+கொத்தமலி+மாங்காய்+மாதுளை முத்துக்கள் சேர்க்கலாம்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

சமைக்காமலேயே, அப்ப டூருக்கு ரொம்ப ஏதுவாக இருக்குமே

புவனேஸ்வரி ராமநாதன் said...

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் நல்லாயிருக்கு.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சீக்கிரம் சமையல் ரெசிபி புத்தகமாக போடுங்கள் அக்கா ..Advance wishes...

GEETHA ACHAL said...

Wow...Lovely recipe...

Asiya Omar said...

அருமை.மேனகா.

Chef.Palani Murugan, said...

Fast Food !

'பரிவை' சே.குமார் said...

Aiya... easy samaiyal.

Menaga Sathia said...

நன்றி சகோ!! உண்மைதான் டூர் செல்லும்போது ரொம்ப உபயோகமா இருக்கும்..

நன்றி புவனேஸ்வரி!!

வாழ்த்துக்கும் மிக்க நன்றி புதிய மனிதா!! அதற்கென்று சமயம் வரும்போது போட்டுடவேண்டியது...

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி செஃப்!!

நன்றி சகோ!!

சாருஸ்ரீராஜ் said...

very nice menaga

Nithu Bala said...

superb recipe..

Chitra said...

totally a new recipe. :-)

Radhika said...

Love your take on Bagalabath. Looks yumm.

ஸாதிகா said...

அவலில் கூட பகாளாபாத்..பார்க்கவே குளு குளுன்னு இருக்கு மேனகா!

Niloufer Riyaz said...

a innovative recipe!!

Thenammai Lakshmanan said...

பார்த்தாலே ஜில்லுனு இருக்கு மேனகா.. கலர்ஃபுல் டா

Mahi said...

பகாளாபாத்-னா தயிர்சாதம்னே எனக்கு சிலநாட்கள் முன்புதான் தெரியும்.:)

நல்லா இருக்கு மேனகா..இதுவரை இப்படி முயற்சித்து பார்த்ததில்லை..செஞ்சு பார்க்கிறேன்.

Krishnaveni said...

looks yummy and easy to make, thanks menaga

இமா க்றிஸ் said...

நல்ல குறிப்பு மேனகா. பாராட்டுக்கள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அட.. சூப்பர் ரெசிப்பியா இருக்கே... :-)

சிங்கக்குட்டி said...

ஆ சூப்பரு, நீங்க கலக்குங்க மேனகா :-)

Pavithra Srihari said...

naan hostelaa irukkumpothu ithae thaan saapitten ...makes me feel nostalgic

ஜீவா said...

வணக்கம் சகோதரி, காலை நேர உணவுக்கு ஒரு ஐடியா கொடுத்துவிட்டீர்கள். வலைப்பூவை பார்த்த பிறகு, நன்றாக சமைக்க தொடங்கிவிட்டேன், ஆரம்பத்தில் சாம்பார் வைக்கபோனால் அது ரசமாகும், இப்பொழுது நன்றாக வருகிறது, ஒருமுறை சாம்பரில் அதிகம் புளியை சேர்த்துவிட்டேன், நண்பன் கேட்டான் என்னடா இது புளிகொழம்பா, இல்லை சாம்பாரா என்று? நான் சொன்னேன் சாம்பாரும் புளிகொழம்பும் சேர்ந்தது, இதற்கு பெயர் சம்புளிகொழம்பு என்றேன் அதைக்கேட்டு அவன் சிரித்துவிட்டான்,
சில நேரம் அவன் என்னை கேட்பான் இன்னைக்கு என்ன சம்புளிகொழம்பா? என்று.
என்னையும் நன்றாக சமைக்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி.
அன்புடன் ஜீவா

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி நிது!!

நன்றி சித்ரா!!

நன்றி ராதிகா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி நிலோபர்!!

நன்றி தேனக்கா!!

நன்றி மகி!! எனக்கும் ஒரு டி.வியில் பாகாளாபாத் ரெசிபி ஒன்னு போடும்போதுதான் தெரிந்தது.ஏதோ ஸ்பெஷ்ல் ரெசிபின்னு ஆர்வமாய் பார்த்தேன் கடைசில நம்ம தயிர் சாதத்தை செய்து காண்பிக்கும்போதுதான் தெரிந்தது.செய்து பார்த்து சொல்லுங்கள்..

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி இமா!!

நன்றி ஆனந்தி!!

நன்றி சிங்கக்குட்டி!!

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி சகோ!! நன்றாக சமைக்க கற்று கொண்டதில் மிக்க மகிழ்ச்சி...உங்கள் சமையலின் புதிய பெயர் படித்து சிரிப்பு வந்தது...

Priya Suresh said...

Simply superb..Bagalabhaath kalakuthu Menaga..

எல் கே said...

/இந்த குறிப்பை அடுப்பில் வைத்து சமைக்காமலேயே செய்யலாம்.//

குறிப்பை அடுப்பில் வைத்தா ??

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

ஹா ஹா..எல்கே நீங்களுமா?? ஜெய்லானி கூட சேர்ந்து நீங்களும் மாறிட்டீங்க..

இமா க்றிஸ் said...

இதுக்குப் பேர் 'மாற்றம்' இல்லை, 'முன்னேற்றம்' மேனகா.. ;)))

Menaga Sathia said...

நன்றி இமா!!

01 09 10