Sunday 17 October 2010 | By: Menaga Sathia

மைசூர் ரசம் / Mysore Rasam

தே.பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1 பெரியது
புளி - எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த்துறுவல் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1/2+1/4 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1/2 டீஸ்பூன்

எண்ணெயில் வறுத்து பொடிக்க:
தனியா - 1 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.புளியை ஊறவைத்து 1 1/2 கப் அளவில் கரைக்கவும்.

*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காய் சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

*பாத்திரத்தில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு துண்டுகளாகிய தக்காளி+சிறிது கொத்தமல்லித்தழை போட்டு நன்கு வதக்கி புளித்தன்ணீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடத்திற்க்கு பின் வேகவைத்த துவரம்பருப்பை ஊற்றி நுரை வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*பின் நெய்+1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

அட,சூப்பர் ரசம்,நீங்கள் சொன்னபடி திரித்த ரசப்பொடியே இருக்கு,செய்து விடவேண்டும்.

தெய்வசுகந்தி said...

நெய்யும் தேங்காயும் சேர்த்தா நல்ல வாசனையா இருக்கும். I'll try this.

வால்பையன் said...

தலைப்பில் மட்டும் தான் மைசூர் இருக்கு, பதிவுல காணோம், ஒருவேளை இந்த ரசத்தை மைசூரில் போய் செய்யனுமோ!

என்ன கொடும சார் இது!

புவனேஸ்வரி ராமநாதன் said...

Nice.

Krishnaveni said...

such a great recipe, delicious Menaga

Kanchana Radhakrishnan said...

சூப்பர் ரசம்.

எல் கே said...

மைசூர் ரசத்தில் மைசூர் இருக்குமா # டவுட்

சசிகுமார் said...

நன்றி அக்கா

சிங்கக்குட்டி said...

வழக்கம் போலவே ரசம் சூப்பர் :-).

பகிர்வுக்கு நன்றி மேனகா.

Prema said...

Yummy rasam,Kudikalam pola irruku...

Gayathri Kumar said...

My fav rasam. I prepared it long ago. I will try your version.

மங்குனி அமைச்சர் said...

மைசூர் ரசம்ன்னு சொல்லி இருக்கீங்க , ஆனா தேவையான பொருட்களா மைசூறவே காணோம் ?

Chitra said...

வாசனை கம கமக்குது!

ஸாதிகா said...

தேங்காய்த்துருவல் எல்லாம் சேர்த்து ரசம்.!!!டிரை பண்ணிடுவோம்.

ஜீவா said...

மைசூரில் முதன்முதலில் கண்டுபிடித்ததாக இருக்கலாம்
அதனால்தான் மைசூர் ரசம் என்று பெயர் வந்திருக்கும்,
ஒரு வேலை நெய்யைவிட்டு தாலிக்கும் பொழுது சுர் என்று சத்தம் வந்திருக்கும் ,நெய்சுர் என்பது மருவி மைசூர் என்று கூட ஆகியிருக்கலாம்,
பெயர் முக்கியமல்ல, ரசம் சூப்பர்.
செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி தெய்வசுகந்தி!! நெய் விட்டு ரசம் தாளித்தால் செம வாசனையாக இருக்கும்..

நன்றி வால்!! வாலு இந்த ரசத்தை ஈரோட்லேயே செய்யலாம்...ஏன் இந்த பெயர்ன்னு தெரியாது..ஆனா டேஸ்ட் அசத்தலா இருக்கும்...

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி காஞ்சனா!!

நன்றி எல் கே!! மைசூர் ரசத்தில் மைசூர் இருக்காது ஆனா ரசம் இருக்கும்...ஏங்க எல்லோருக்கும் இந்த டவுட் திடீர்ன்னு வந்துச்சு..மைசூர் பாகுன்னு சொல்றோம் ஆனால் அதுல மைசூர் இல்லையே..அப்பாடா நானும் குட்டையை குழப்பிட்டேன்...

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி சிங்கக்குட்டி!!

நன்றி பிரேமலதா!!

நன்றி காயத்ரி!! செய்து பார்த்து சொல்லுங்க...

Akila said...

lovely rasam....

Menaga Sathia said...

நன்றி மங்குனி அமைச்சர்!! மைசூர் பாகுன்னு சொல்றோம் ஆனா அதுல மைசூர் இல்லையே அதுபோலதான் இந்த ரசமும்....

நன்றி சித்ரா!!

நன்றி ஸாதிகாக்கா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

Menaga Sathia said...

ஆஹா இந்த ரசத்தின் பெயர் காரணம் அருமை...நானும் நினைத்ததுண்டு ஏன் இதற்க்கு இந்த பெயர்ன்னு...இந்த ரசம் மற்ற ரசங்களை விட அமர்க்களமா இருக்கும்.செய்து பார்த்து சொல்லுங்கள்...நன்றி சகோ!!

Priya Suresh said...

Yummm, yennaku pidicha rasam, romba naal achu saapite..pasikuthu pakkura pothey..

Jayanthy Kumaran said...

wow...one of our family favorite...nice presentation dear.

Tasty Appetite

vanathy said...

super rasam!

Anisha Yunus said...

அழகான பவுல். எங்கேர்ந்து புடிச்சீங்க மேனகாக்கா. அந்த பவுல்லா ஊத்தி தர்றதுன்னா சும்மாவெ ரெண்டுவாட்டி ரசம் குடிக்கலாம் போல. படமும், குரிப்பும் அசத்தல். :)

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஜெய்!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி அன்னு!! ஒருமுறை அதிகமாக துணிகள் எடுக்கும் போது இந்த பவுலை கிப்ட்டாக துணிகடையில் இதேமாதிரி 3 கலர் பவுல் கொடுத்தாங்க....

01 09 10