Monday 18 July 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் வாங்கிபாத்/ Oats Vangibath

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
பொடியாக அரிந்த கத்திரிக்காய் -1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வறுத்து பொடிக்க
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கொப்பரைத்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் குறைவாக
கிராம்பு,பட்டை-தலா 1

செய்முறை
*ஒட்ஸை எலுமிச்சை சாறு+தண்ணீர் சேர்த்து லேசாக பிசிறி வைக்கவும்.சிறிது நேரத்தில் உதிரியாகிவிடும்.

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம்+கத்திரிக்காய்+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*கத்திரிக்காய் வெந்ததும் பொடித்த பொடி+ஒட்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

மாய உலகம் said...

புதுசா இருக்கு... சமைச்சு சாப்பிட்டு பாப்போம் .... நல்ல பதிவு

rajeshnedveera
http://maayaulagam-4u.blogspot.com
http://maayaulagam4u.blogspot.com

ஆமினா said...

ஓட்ஸ்ல பண்றது வித்தியாசமா இருக்கு. ஒரே மாதிரியா செய்யாம இப்டி டிப்ரண்டா ட்ரை பண்ணா போர் அடிக்காம இருக்கும்...

வாழ்த்துக்கள்

இமா க்றிஸ் said...

கேள்விப்படாத குறிப்பா இருக்கு மேனகா.

Shanavi said...

Never tried oats vaangi bhath..Try pannida vendiyadhu dhaan :)

Unknown said...

Romba puthumaiya irukku. Enna type oats use pannineenga? Porridge oats use panni intha dish pannala?

cheers,
Uma
http://umskitchenexperiments.blogspot.com

Raks said...

Nice idea! I love to experiment with oats,loved this!

ஸாதிகா said...

வித்த்யாசமாக சமைக்கறீங்க மேனகா.

Vimitha Durai said...

Sounds so different and tempting... So healthy too.

'பரிவை' சே.குமார் said...

புதுசா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

ஓட்ஸில் செய்வது புதுமை. நன்றி மேனகா.

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ஸ் உடல் இளைக்க நல்ல தொரு உணவு..

இண்ட்லில் 22 பேரு ஓட்டிங்க்,ஆனா ஒரே ஒருவர் மட்டும் கமெண்ட்டிங்க்!!!!!!!!

சசிகுமார் said...

சத்தான சமையல் நன்றி அக்க டிப்ஸ் கொடுத்ததிற்கு

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா..சூப்ப்பர்...ஹெல்தியான குறிப்பு...

Prabu Krishna said...

நான் இப்போதான் சமைக்க கற்றுக் கொள்ள ஆரம்பித்து உள்ளேன். எதாவது basic சொல்லுங்களேன். (பேச்சுலர்ங்க அதுக்கு ஏத்த மாதிரி சொல்லுங்க)

krishnaprabu2710@gmail.com

Shama Nagarajan said...

healthy dear

Priya Sreeram said...

oats in place of rice in vangi baath-- thumbs up to that !

ஜெய்லானி said...

யக்காவ்..புதுசு புதுசா கலக்குறீங்களே...!!

Menaga Sathia said...

@பலே பிரபு
என்னுடைய பழைய குறிப்புகளை பாருங்கள்,அனைத்தும் எளிதில் சமைக்க கூடியதாகதான் இருக்கும்.விரைவில் சமையலில் கலக்க வாழ்த்துக்கள்!!

01 09 10