Wednesday 5 November 2014 | By: Menaga Sathia

சிக்கன் கொத்து பரோட்டா / CHICKEN KOTTU PAROTTA

கொத்து பரோட்டாவை சுவைத்தவர்கள் அதன் சுவையை மறக்கமாட்டார்கள்.இதில் சிக்கன் பதிலாக முட்டை அல்லது காய்கள் சேர்த்து செய்யலாம்.

நான் எம் டி சால்னா குறிப்பில் செய்ததைப் போல் செய்து அதனுடன் சிக்கன் சேர்த்து செய்துள்ளேன்.இதில் விரும்பினால் காரம் அதிகம் தேவைப்படுவோர் வெங்காயம் வதக்கும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கலாம்.அல்லது பச்சை மிளகாயை கூடுதலாக சேர்க்கலாம்.

இதில் முக்கியமானது பரோட்டாவை நன்கு 10 நிமிடம் வரை கொத்தினால் தான் நன்றாகவும் உதிரியாகவும் வரும்.

தே.பொருட்கள்

பரோட்டா - 4
சிக்கன் சால்னா - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
முட்டை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய்+உப்பு = தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் நறுக்கிய தக்காளியில் பாதியளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

*இதனுடன் பரோட்டாவை கைகளால் பிய்த்து போட்டு லேசாக வதக்கவும்.

*பாத்திரத்தின் ஓரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

*முட்டை பாதியளவு வெந்ததும் பரோட்டவுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

*இப்போழுது சிக்கன் சால்னாவை ஊற்றவும் சிக்கன் எலும்பில்லாமல் சேர்க்கவும்,எலும்புட,ன் இருந்தால் சதைப்பகுதியை தனியாக எடுத்து சேர்க்கவும்.

*இதனை அனைத்தையும் நன்றாக கிளறி டம்ளரில் நன்கு 10 நிமிடங்கள் கொத்திவிடவும்.

*பரோட்டா நன்கு உதிரியாக வந்தவுடன் மீதமுள்ள தக்காளி+கறிவேப்பிலை சேர்த்து 1 முறை கிளறி இறக்கவும்.

*சூடாக பரிமாறவும்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சுவையான உணவு அருமையான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Priya said...

Kothu parotta arumaiya iruku pa ..Egg ellam serthu ore hotel style than

Sangeetha Priya said...

yummy kothu parotta!!!

sangeetha senthil said...

கொத்து பரோட்டா போட்டு நாவூற வைத்து விட்டீங்க .. அருமை ...

Ranjanis Kitchen said...

wonderful recipe.. looks delicious..

Unknown said...

nothing can beat these.. Looks yum!!

01 09 10