Thursday, 16 July 2009 | By: Menaga Sathia

வெந்தய சாம்பார்

தே.பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புளி - 1கோலிகுண்டளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 15
தக்காளி - 2
பூண்டுப்பல் - 5
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1 டீஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து,அதனுடன் வெந்தயம்+மஞ்சள்தூள்+பூண்டு+தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.புளியை 1/4 கப் அளவில் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசல்+உப்பு+வெந்த பருப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
Monday, 13 July 2009 | By: Menaga Sathia

பேல் பூரி(Bhel poori)

தே.பொருட்கள்:

பூரி - 5
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 சிறியது
ஓமப்பொடி - 1/4 கப்
துருவிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இனிப்பு சட்னி - 2 டேபிள்ஸ்பூன்
புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன்
புதினா சட்னி :

புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெல்லம் - 1 சிறுகட்டி
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

* இவை அனைத்தும் மிக்ஸியில் அரைக்கவும்.

இனிப்பு சட்னி:

பேரிச்சை பழம் - 5
உலர் திராட்சை - 5
புளி - 1 கொட்டைபாக்களவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெல்லம் - 1 சிறு கட்டி

* இவை அனைத்தும் 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்து,அரைத்து வடிக்கட்டவும்.

செய்முறை:

*பூரியை நொறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம்+தக்காளியை விதை நீக்கி பொடியாக அரியவும்.

*அனைத்தையும் ஒன்றாக கலந்து பறிமாறவும்.

பி.கு:

இதில் 1/4 கப் பொரி சேர்க்கவும்.எனக்கு கிடைக்காததால் சேர்க்கவில்லை.விருப்பப்பட்டால் பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழையும் சேர்க்கலாம்.
Thursday, 9 July 2009 | By: Menaga Sathia

தக்காளித் தொக்கு

தே.பொருட்கள்:

தக்காளி - 6 பெரியது
உப்பு - தேவைக்கு
புளி - 1 சின்ன உருண்டை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

செய்முறை:

* தக்காளியை 4ஆக அரிந்து ஒரு பாத்திரத்தில் உப்பை கரிக்கும் அளவிற்க்கு போடவும்.

*அதனுடன் புளியை கொட்டையில்லாமல் தக்காளியின் நடுவில் அமுங்குவது போல் போடவும்.

*மறுநாள் காலையில் மூடியை திறந்தால் ஒரு வாசனை வரும்,அதனால் பரவாயில்லை.தக்காளியை மட்டும் தனியாக எடுத்து ஒரு தட்டில் போட்டு வெயிலில் காயவைக்கவும்.

*2 நாள் காய்ந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.

*வெரும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மிளகாய்த்தூளைப்போடவும்।

*உடனே அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு சுருண்டு வரும் போது வெந்தயப்பொடி போட்டு இறக்கவும்.

பி.கு:

*விருப்பப்பட்டால் சிறுதுண்டு வெல்லம் சேர்க்கலாம்.

*இட்லி,தோசை,சாதம் என அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.
Monday, 6 July 2009 | By: Menaga Sathia

பால் கொழுக்கட்டை

இந்த இனிப்பை முதன்முதலில் பல் முளையும் குழந்தைகளுக்கு செய்து குடுப்பாங்க.என் பொண்ணுக்கு முதல் பல் வந்து நான் செய்து குடுத்த பால் கொழுக்கட்டை!!

தே.பொருட்கள்:

அரிசிமாவு -3/4 கப்+2 டேபிள்ஸ்பூன்
சக்கரை - 1/4 கப் +1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முந்திரி - விருப்பத்துக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - 1/2 கப்


செய்முறை:

*3/4 கப் அரிசிமாவில் உப்பு+1டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக பிசைந்து படத்தில் உள்ளவாறு உருட்டிக் கொள்ளவும்.

*அதை 5 நிமிடம் உலர வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

*பின் 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவை 1 கப் தண்ணீரில் நன்கு நீர்க்க கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

*கட்டி விழாமல் தொடர்ந்து மாவை கலக்கி கொண்டே இருக்கனும்,மாவு வெந்துவிட்டதா என பார்க்க கையால் தொட்டுப் பார்த்தால் ஒட்டக்கூடாது.

*ஒட்டாமல் வரும் போது மீதமுள்ள சர்க்கரை+சிறிது உப்பு+வெந்த கொழுக்கட்டை சேர்த்துக் கிளறவும்.

*பின் தேங்காய்ப்பாலை உற்றி 2 நிமிடத்தில் இறக்கி,முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

பி.கு:

இந்த இனிப்பு அவ்வளவு சுவையாக இருக்கும்.
Thursday, 2 July 2009 | By: Menaga Sathia

கோஸ் இறால் பொரியல்

தே.பொருட்கள்:

கோஸ் - 1/4 கிலோ
குட்டி இறால் - 100 கிராம்
முட்டை - 2
மிளகாய்த்தூள் -3/4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1 டீஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*கோஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்,இறாலை சுத்தம் செய்யவும்.

*இறாலை கடாயில் எண்ணெய் விட்டு உப்பு+சிறிது மஞ்சல்தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

*பின் கோஸ்+உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் விட்டு வேகவிடவும்.

*வெந்ததும் வதக்கிய இறாலை போடவும்,நீர் நன்றாக சுண்டியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.
Monday, 29 June 2009 | By: Menaga Sathia

பருப்பு சாதம்


தே.பொருட்கள்:

பொன்னி அரிசி - 11/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டுப் பல் - 4
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை,கொத்தமல்லி - சிறிது

தாளிக்க:

பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்



செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பூண்டு+தக்காளி+பச்சை மிளகாயை அரியவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+தக்காளி+பூண்டு+பச்சை மிளகாய்+கறிவேப்பில்லை,கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

*பொன்னி அரிசிக்கு 1 கப்=2 கப் தண்ணீர் அளவு,ஆக 11/2 கப் அரிசிக்கு=3 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் துவரம்பருப்புக்கு 1 கப் தண்ணீர் அளவு.

*வதங்கியதும் அரிசி+துவரம்பருப்பு+உப்பு+மஞ்சள்தூள்+4 கப் தண்ணீர் வைத்து குக்கரை மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறவும்.

பி.கு:

இதற்க்கு தொட்டுக் கொள்ள அப்பளம்,ஊறுகாய் இருந்தாலே போதும்,ரொம்ப நல்லாயிருக்கும்.
Friday, 26 June 2009 | By: Menaga Sathia

ஒமப்பொடி /Oma Podi

தே.பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
ஒமம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து தண்ணீரில் 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+ஒமத்தண்ணீர்+நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஓம அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
01 09 10