Thursday, 21 July 2011 | By: Menaga Sathia

வெங்காய கோசு / Vengaya kosu

திருமதி.சோலை அவர்களின் குறிப்பில் பார்த்து செய்தது.இட்லி,தோசைக்கு செம காம்பினேஷன்!!
தே.பொருட்கள்
வெங்காயம் - 4 பெரியது
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 1 சிறியது
எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -6
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்(அ)முந்திரி - 6

தாளிக்க
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளி+உருளையை தோல் சீவி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+உருளை+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் தேங்காய் விழுது+3 கப் நீர் விட்டு 1 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
கடாயில் செய்வதாக இருந்தால் உருளை வெந்த பிறகுதான் தேங்காய் விழுதை சேர்க்கவேண்டும்.
Monday, 18 July 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் வாங்கிபாத்/ Oats Vangibath

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
பொடியாக அரிந்த கத்திரிக்காய் -1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வறுத்து பொடிக்க
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கொப்பரைத்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் குறைவாக
கிராம்பு,பட்டை-தலா 1

செய்முறை
*ஒட்ஸை எலுமிச்சை சாறு+தண்ணீர் சேர்த்து லேசாக பிசிறி வைக்கவும்.சிறிது நேரத்தில் உதிரியாகிவிடும்.

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம்+கத்திரிக்காய்+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*கத்திரிக்காய் வெந்ததும் பொடித்த பொடி+ஒட்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

Wednesday, 13 July 2011 | By: Menaga Sathia

வெண்பொங்கல்&பாம்பே(கடலைமாவு)சாம்பார்/ Venpongal &Bombay(Besan)Sambhar

பொங்கல் செய்ய தே.பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு  - 3/4 கப்
பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
பொடியாக நறுக்கிய இஞ்சி -1டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை
*பருப்பு+அரிசி+உப்பு+பால்+தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

கடலைமாவு சாம்பார் செய்ய தே.பொருட்கள்
கடலைமாவு - 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி -தலா 1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
புளிபேஸ்ட் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*கடலைமாவை வெறும் கடாயில் லேசாக வறுத்து ஆறவைத்து மஞ்சள்தூள்+1 1/2 கப் நீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் புளியை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி+உப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் கரைத்துவைத்த கடலைமாவை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி 5-6 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

*சிறிதளவு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பார் சப்பாத்தி,பூரிக்கும் நன்றாகயிருக்கும்.
Monday, 11 July 2011 | By: Menaga Sathia

சுர்ரோஸ் /Churrose - Spanish Fritters

தே.பொருட்கள்

மைதா - 1 கப்
ஐசிங் சுகர் - மேலே தூவ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*ஒரு பாத்திரத்தில் தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*கொதி நீரை மைதா மாவில் ஊற்றி மரக்கரண்டியால் கெட்டியாக பிசையவும்.

*முறுக்கு 1 ஸ்டார் அச்சில் மாவை கொஞ்சமா போட்டு எண்ணெயில் நேரடியாக நீளமாக பிழிந்து பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

*பின் அதன்மேல் ஐசிங் சுகர் தூவி சூடாக சாப்பிட சூப்பராகயிருக்கும்.

Sending to Priyas Flavours of Spain started by simply.food
Thursday, 7 July 2011 | By: Menaga Sathia

ஷாஹி துக்கடா / Shahi Tukda

தே.பொருட்கள்
ப்ரெட் - 5
சர்க்கரை - 1 கப்
தன்ணீர் - 1/2 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - பொரிக்க தேவையானளவு

செய்முறை
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து 2ஆக கட் செய்யவும்.

*பாலில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் சேர்த்து 1 கம்பிபதம் வரை காய்ச்சி எடுக்கவும்.

*நெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

 *பொரித்த ப்ரெட் துண்டகளை சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.
*சர்க்கரை பாகில் நனைத்த ப்ரெட் துண்டுகள்
*பரிமாறும் போது ப்ரெட் துண்டுகளை வைத்து அதன் மேல் பாலை ஊற்றி வறுத்த முந்திரி திராட்சைகளை சேர்த்து பரிமாறவும்.
Tuesday, 5 July 2011 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வறுவல்- 2 / Eggplant Fry - 2

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

*ஒரு பவுலில் சிக்கன் மசாலா+எலுமிச்சை சாறு+உப்பு+இஞ்சி பூண்டு விழுது+எண்ணெய் 2 டீஸ்பூன் என் அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் 2புறமும் வேகவைத்து எடுக்கவும்.ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

*சாம்பார்,தயிர்,ரசம் சாதமுடன் சாப்பிட நன்றாகயிருக்கும். 

Friday, 1 July 2011 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு பாயாசம் / Moong Dhal Payasam

தே.பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வாசனை வரும்வரை வறுக்கவும்.ஜவ்வரிசியையும் லேசாக வறுக்கவும்.

*பாத்திரத்தில் கடலைப்பருப்பை வேகவைக்கவும்.3/4 பதம் வெந்ததும் வறுத்த பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து வேகவைக்கவும்.

*பாசிப்பருப்பு 1/2 பதம் வெந்ததும் ஜவ்வரிசியை சேர்த்து வேகவைக்கவும்.

*வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து மண்ணில்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.கடாயில் நெய் விட்டு தேங்காய்ப்பல்+முந்திரி திராட்சையை வறுக்கவும்.

*ஜவ்வரிசி வெந்ததும் வெல்லம்+பால்+ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி வறுத்த தேங்காய்ப்பல் முந்திரிகளை சேர்க்கவும்.

01 09 10