Thursday, 13 December 2012 | By: Menaga Sathia

செட்டிநாடு உருளை மசாலா /Chettinad Potato Masala

செட்டிநாடு சமையல் என்றாலே தனி சுவைதான்.நன்றி ரம்யா!!

தே.பொருட்கள்

வேகவைத்த உருளை - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள்,கடுகு -தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

கரகரப்பாக அரைக்க

காய்ந்த மிளகாய் - 7
சின்ன வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

*பின் அரைத்த மசாலா+உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் துண்டுகளாகிய உருளையை சேர்த்து வதக்கவும்.

*மசாலா நன்குகலந்த பின் சிறிது நேரம் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


Monday, 10 December 2012 | By: Menaga Sathia

பாசிபருப்பு தோசை & கார சட்னி /Moong Dhal Dosa & Kara Chutney

 பாசிபருப்பு தோசை

தே.பொருட்கள்
அரிசி - 1 கப்
பாசிபருப்பு - 1 கப்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து  2 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*மாவை 6 மணிநேரம் புளிக்க வைத்து தோசைகளாக சுட்டெடுக்கவும்.

கார சட்னி
 இந்த சட்னிக்கு வரமிளகாய்த்தூளுக்கு பதில காய்ந்த மிளகாயை ஊறவைத்து அரைத்து சேர்க்கவேண்டும்.நன்றி பிரேமா!!

தே.பொருட்கள்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3
பொடியாக நறுக்கிய தக்காளி - 5
காய்ந்த மிளகாய் -10 --12
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை
 *காய்ந்த மிளகாயை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
 *கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்  போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 *வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
 *நன்றாக வதங்கியதும் உப்பு+மிளகாய் விழுது+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
 *பச்சை வாசனை அடங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
பி.கு

*மிளகாயை அவரவர் காரத்திற்கேற்ப சேர்க்கவும்.

*பாசிபருப்பு தோசைக்கு காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.

Thursday, 6 December 2012 | By: Menaga Sathia

குஸ்கா /Khuska

குஸ்கா என்பது ஒருவகை பிரியாணி.இதனை காரசாரமான க்ரேவியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.நன்றி சவிதா!!

தே.பொருட்கள்
பாஸ்மதி - 2கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -4
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கிராம்பு -3
ஏலக்காய் -2
பிரியாணி இலை -2
சோம்பு -1 டீஸ்பூன்

செய்முறை
*அரிசியை கழுவி நீரை வடிகட்டி சிறிது நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+உப்பு+பச்சை மிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் தயிர்+புதினா சேர்த்து வதக்கவும்.

*கடைசியாக தக்காளி சேர்த்து லேசாக கிளறி அரிசி+3 கப் நீர்+கொத்தமல்லிதழை+நெய் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்தெடுக்கவும்.

பி.கு
*தக்காளியை சேர்த்ததும் குழைய வதக்ககூடாது,சாதத்தின் கலர் மாறிவிடும்.

*பாதிக்கு பாதி தேங்காய்பாலும் சேர்க்கலாம்.


Monday, 3 December 2012 | By: Menaga Sathia

முட்டையில்லாத சோளமாவு ஆரஞ்ச் கேக் /Steamed Eggless Cornflour Orange Cake

தே.பொருட்கள்
ரவை - 1 கப்
மஞ்சள் சோளமாவு -1 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 1/4 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் - தலா 1/2 டீஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் -1/2 கப்
வெந்நீர்/ பால் - 1 கப்

செய்முறை
*ரவை+சோளமாவு+பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து 2 முறை சலிக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய்+சர்க்கரை+வெந்நீர் சேர்த்து கலக்கவும்.

*இதனுடன் ரவை கலவை+துருவிய ஆரஞ்ச் தோல்+ஆரஞ்ச் ஜூஸ் சேத்து மிருதுவாக கலக்கி,எண்ணெய் தடவிய கேக் பானில் கலவையை ஊற்றவும்.

*குக்கரை அடுப்பில் வைத்து 5 நிமிடம் சூடு செய்து பேக்கிங் சோடாவை தூவி குக்கர் ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை வைக்கவும்.

*மீதமான தீயில் 5 நிமிடம் வேகவைத்து பின் குறைந்த தீயில் 25-30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

*கேக் வேகவில்லை எனில் மேலும் 5-10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
Thursday, 29 November 2012 | By: Menaga Sathia

கார்த்திகைப் பொரி/Karthigai Pori

தே.பொருட்கள்

அவல்  - 2 கப்
வெல்லம் - 1/2 கப்
எள் - 1 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*அவலை வெறும் கடாயில் நிறம் மாறாமல் பொரியும் வரை வறுக்கவும்.

*எள்+தேங்காய்ப்பல்+பாசிப்பருப்பு இவற்றையும் தனித்தனியாக வெறும் கடாயில் வாசனைவறும் வரை வறுக்கவும்.


*ஒரு பவுலில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் வெல்லம் போட்டு முழ்கும் வரை நீர் விட்டு  கரையவிடவும்.

*வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் கொதிக்கவிடவும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

*வெல்லபாகினை தண்ணீரில் விட்டால் உருண்டை கையில் எடுக்கும் பதம் வந்ததும் இறக்கி கலந்து வைத்துள்ள அவல்பொரியில்  ஊற்றி நன்கு கலக்கிவிடவும்.

பி.கு

*இது உதிரியாகதான் இருக்கும்,உருண்டை பிடிக்கமுடியாது.

*நான் சாதாரண அவலில் செய்துள்ளேன்.

*நெற்பொரி/ அவல் பொரி இவை கார்த்திகைதீபத்தன்று மட்டும்தான் கடைகளில் கிடைக்கும்.
Monday, 26 November 2012 | By: Menaga Sathia

பொன்னாங்கண்ணிக் கீரை கடையல் -2/Poonakanni Keerai(Dwarf Copperleaf) Kadaiyal - 2

பொன்னாங்கண்ணி கீரையை புளி போட்டு கடைந்தால்
அண்ணாமலையாருக்கு (சிவன்) அடிநாக்கும் தித்திக்கும் என அம்மாவிடம் எங்க வீட்டு கீரைக்காரம்மா சொல்வாங்க.கார்த்திகை தீபத்தன்று  இக்கீரையை புளிபோட்டு கடைந்து படையல் செய்வது மிக நல்லது.

தே.பொருட்கள்

பொன்னாங்கண்ணி கீரை - 1 கப்
பூண்டுப்பல் - 3
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்

செய்முறை

*மேற்கூறிய பொருட்களை ஒன்றாக போட்டு 1/2 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*கீரை வெந்ததும் ,ஆறவைத்து நீரைவடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும்.

*கெட்டியாக இருந்தால் கீரை வேகவைத்த நீர் சேர்த்து ,தாளித்து சேர்க்கவும்.

Thursday, 22 November 2012 | By: Menaga Sathia

காலிபிளவர் மிளகு பொரியல்/Cauliflower Pepper Poriyal

தே.பொருட்கள்

காலிபிளவர் பூக்கள் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
நசுக்கிய பூண்டுப்பல் -4
கடுகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1கொத்து
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+சீரகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு+வெங்காயம்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*பின் காலிபிளவர் பூக்கள்+உப்பு சேர்த்து மூடி போட்டு 10-15நிமிடங்கள் வேகவிடவும்.இடையிடையே கிளறி விடவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

*காய் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
01 09 10