Thursday, 31 December 2009 | By: Menaga Sathia

கல்கண்டு சாதம்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பால் - 1கப்
டைமண்ட் கல்கண்டு - 1 கப்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4டீஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*அரிசி+பாசிப்பருப்பை குக்கரில் 1கப் பால்+1 1/4 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*கல்கண்டை மிக்ஸியில் பொடிக்கவும்.(நீரில் கரைய நேரமாகும்).

*கல்கண்டு பவுடரை சிறிது நீர் விட்டு பாகுபதம் வரை காய்ச்சி வெந்த அரிசி பருப்பில் சேர்க்கவும்.

*நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை+ஏலக்காய்த்தூள்+மீதமிருக்கும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

*சுவையான கல்கண்டு சாதம் ரெடி.அம்மனுக்கு பிடித்த நைவேத்தியம் இது.
Tuesday, 29 December 2009 | By: Menaga Sathia

கொள்ளு - ஒட்ஸ் கொழுக்கட்டை

தே.பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
ஒட்ஸ் - 1 + 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு +எண்ணெய்= தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கொள்ளை 4 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைக்கவும்.

*1 கப் ஒட்ஸை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்துப் பொடிக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஒட்ஸில் சேர்க்கவும்.அதனுடன் அரைத்த கொள்ளு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறு உருண்டைகளாக பிடித்து மீதமிருக்கும் 1/2 கப் ஒட்ஸில் பிரட்டி எடுத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சுவையான கொழுக்கட்டை ரெடி.இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

பி.கு:

விருப்பப்பட்டால் ஒழுக்கட்டையில் தேங்காய்ப்பல் சேர்க்கலாம்.
Sunday, 27 December 2009 | By: Menaga Sathia

பார்லி - ரவை இனிப்பு பணியாரம்

தே.பொருட்கள்:

பார்லி குருணை -1/2 கப்
ரவை -1/2 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கு


செய்முறை :

* பார்லியை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.பின் அதனுடன் ரவை சேர்த்து மேலும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

*வெல்லத்தை கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டி பார்லியில் கலக்கவும்.அதனுடன் சுக்குத்தூள்+ஏலக்காய்த்தூள்+மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கவும்.
* நெய் விட்டு பணியாரகுழியில் மாவை ஊற்றி பணியாரமாக சுட்டெடுக்கவும்.

கவனிக்க:

பார்லியை 1 கப் நீர் ஊற்றி ஊறவைத்த பின் ரவை போடும் போது சிறிது நீர் விட்டு ஊறவைக்கவும்.அப்போழுது தான் கரைத்த வெல்லம் சேர்க்கும் போது மாவு கெட்டியான பதமா இருக்கும்.
Thursday, 24 December 2009 | By: Menaga Sathia

பீர்க்கங்காய்த் தோல் துவையல்

தே.பொருட்கள்:

பொடியாக வெட்டிய பீர்க்கங்காய்த் தோல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 நெல்லிக்காயளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கொள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு


செய்முறை :

*எள்+உளுத்தம்பருப்பு+கொள்ளு வெரும் கடாயில் வறுக்கவும்.

*எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய்+தேங்காய்த்துறுவல் வதக்கவும்.

*சிறிது எண்ணெய் விட்டு பீர்க்கங்காய்த்தோலை வதக்கவும்.

*ஆறியதும் புளி+உப்பு சேர்த்து அனைத்தையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும்.
Tuesday, 22 December 2009 | By: Menaga Sathia

கீரை ராய்த்தா

தே.பொருட்கள்:

ஏதாவது ஒரு கீரை - 1 கப்
வெங்காயம் - 1சிறியது
தயிர் - 150 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபில்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை :
*வெங்காயம்+கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் கீரை+உப்பு சேர்த்து மூடி வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*கீரை நன்கு வதங்கியதும் ஆறவைத்து தயிரில் கலக்கி பறிமாறவும்.

பி.கு:
கீரை விடும் நீர் வற்றும் வரை வதக்கவும்.விருப்பப்பட்டால் தயிரில் தேங்காய்+சீரகம்+பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கலாம்.நான் பசலை கீரையில் செய்துள்ளேன்.
Sunday, 20 December 2009 | By: Menaga Sathia

பிடி கொழுக்கட்டை/Pidi Kozhukattai

தே.பொருட்கள்:

அரிசிமாவு - 2 கப்
வெல்லம் - 1 1/2 கப்
வறுத்த எள் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
உப்பு- 1 சிட்டிகை


செய்முறை :

*வெல்லத்தை சிறிது நீர் விட்டுக் காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*அரிசிமாவு+உப்பு+தேங்காய்த்துறுவல்+எள்+பாசிப்பருப்பு+வடிகட்டிய வெல்லம் அனித்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*அதை உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
Thursday, 17 December 2009 | By: Menaga Sathia

உருளை சாலட்

தே.பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய கேரட்,வெங்காயம்,தக்காளி,
வெள்ளரிக்காய்,மாங்காய் கலந்த கலவை - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு
முளைக்கட்டிய கறுப்புக்கடலை - 1/4 கப்
உப்பு- தேவைக்கு


செய்முறை :

*உருளைக்கிழங்கை பொடியாக அரிந்து +நறுக்கிய காய்கறிகள்+பயிறு+உப்பு+ஆலிவ் எண்ணெய்+மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
01 09 10