சுண்டைக்காய் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சிகள்,அழியும்.குடற்புண்களை ஆற்றும்.இந்த சூப் கொஞ்சம் கூட கசப்பே இருக்காது.தே.பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய் - 1 கப்
பாசிபருப்பு -1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
குரூட்டன்ஸ் - அலங்காரத்துக்கு
செய்முறை :
*சுண்டைக்காயை சிறிது பட்டரில் லேசாக வதக்கவும்.
*அதனுடன் வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+உப்பு+மீதமுள்ள பட்டர்+பாசிபருப்பு+2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
*ஆறியதும் அரைத்து மிளகுத்தூள்+குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.
*குரூட்டன்ஸ் என்பது பட்டரில் பொரித்த ப்ரெட் துண்டுகள்...





