Thursday 14 May 2009 | By: Menaga Sathia

சுக்கு குழம்பு Dry Ginger Kuzhambu

தே.பொருட்கள்:

சுக்கு - 1 அங்குலத்துண்டு
சின்ன வெங்காயம் -15
தக்காளி - 1
கறிவேப்பில்லை -சிறிது
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுபல் - 10
செய்முறை:

*வெங்காயம்+பூண்டு+ அனைத்தையும் பொடியாக கட் செய்யவும்.சுக்கை நசுக்கிக் கொள்ளவும்.

*புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சுக்கை வறுத்து தனியாக வைக்கவும்.

*வறுத்த சுக்கு+தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.

*பின் வடகம்+கறிவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கவும்.

*வதங்கிய பின் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்த பிறகு தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:
இந்த குழம்பு மறுநாள் சாப்பிட சூப்பரா இருக்கும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

மேனகா உங்கள் குழம்பு வகைகள் எல்லாம் புதுசாக இருக்கு.. சுக்கு குழம்பு உடலுக்கும் ஆரோக்கியம் என்று நினைக்கிறேன்.. சரியா..மேனகா..?

Menaga Sathia said...

//சுக்கு குழம்பு உடலுக்கும் ஆரோக்கியம் என்று நினைக்கிறேன்.. சரியா..மேனகா..?//
நீங்கள் சொன்னது சரிதான் பாயிசா.உடம்புக்கு மிகவும் நல்லது.செரிமாணத்துக்கு ரொம்ப நல்லது.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பாயிசா!!

விஜய் said...

காலையில் இஞ்சி மதியம் சுக்கு இரவில் கடுக்காய் என்கிறார்களே அந்த அடிப்படையில் இஞ்சி - கடுக்காய் சாப்பிடக் குறிப்புகள் கிடைக்கின்றன. சுக்கினைச் சாப்பிட வேறு வேறு முறைகள் ஏதேனும் உள்ளதா..???

மேலே குறிப்பிட்டுள்ள குழம்பு போன்று மேலும் குறிப்புகள் இருந்தால் தயவு செய்து இந்த மெயிலுக்கு அனுப்புங்களேன்... vijay.mysixer@gmail.com

Thanks
Vijay from Chennai, India

விஜய் said...

க்கு வை வைத்து உணவுகளை சமைக்கத் தெரியுமா?
அல்லது சுக்கு வை மதிய வேளைகளில் எப்படி உண்பது
கொஞ்சும் சொல்லுங்களேன்

முடிந்தால்

vijay.mysixer@gmail.com

க்கு அனுப்புங்கள் நன்றி

01 09 10