Wednesday 12 August 2009 | By: Menaga Sathia

உப்புச்சீடை /Uppu seedai

தேவையான பொருட்கள்:

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 2 கப்
வறுத்த உளுத்த மாவு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
எள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தே.அளவு


செய்முறை:

*அரிசி மாவு,உளுத்த மாவு,தேங்காய்ப்பால்,உருக்கிய நெய்,சீரகம்,உப்பு,பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

*சிறுசிறு உருண்டைகளாக உருட்டி துணியில் 5 நிமிஷம் உலர்த்தவும்.

*எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது) உருண்டைகளைப்போட்டு பொரித்தெடுக்கவும்.

*இந்த முறையில் பொரித்தால் சீடை வெடிக்காது.

மாவு பதப்படுத்தும் முறை:


பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து,கழுவி,தண்ணீரை வடிக்கட்டி துணியில் (நிழலில்) உலர்த்தவும்.உலர்ந்தபின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும்.சலித்த மாவை கடாயில் வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த மாவை மீண்டும் சலித்து ஆற வைத்து காற்று புகாதவாறு எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

எல்லா நொருக்கு அயிட்டமும் என் பேவரிட் தான் முருக்கு தான் அதிகமா செய்து இருக்கேன், தேன் குழல் மனங்கொம்பு

சீடை செய்ததில்லை, எந்த எண்ணையில் பொரித்தால் அதிக நாள் கெடாது இது ஆறு மாதத்திற்கு தாங்குமா?

வாங்க மேனகா இப்ப இதில் என் சமையல் குறிப்பு போட்டு வருகிறேன்.

www.jaleelakamal.blogspot.com

Menaga Sathia said...

எனக்கும் சீடை,முறுக்கு இதெல்லாம் பிடிக்கும்.நான் சன்ப்ளவர் எண்ணெயில் தான் பொரிப்பேன்.15 நாள் வரை தாங்கும்.நன்றி ஜலிலாக்கா!!

Unknown said...

Hi menaga...unga samayal ellaam superbaa irukkunga...unga uppuseedaiyai paarththudhaan...gokulaashtamikku seedai seythen romba nallaa vanthadhu....Thanks.

Menaga Sathia said...

உப்புச்சீடை செய்து படைத்து பின்னூட்டம் குடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கினோ!!

01 09 10