Monday 14 September 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் பாகாளாபாத்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
பால் -1 கப்
தயிர் -125 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிது
இஞ்சி -1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் -2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கவும்.

*பாலில் ஒட்ஸை நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து,அதனுடன் இஞ்சி,பச்சைமிளகாய் போட்டு வதக்கி வெந்த ஒட்ஸில் சேர்க்கவும்.

*ஒட்ஸ் ஆறியதும் தயிர்+உப்பு+கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கி பறிமாறவும்.

பி.கு:

விருப்பப்பட்டால் இதனுடன் துருவிய வெள்ளரி,காரட் சேர்க்கலாம்.மாதுளை,உலர்ந்த திராட்சையும் சேர்க்கலாம்.சுவை தூக்கலாக இருக்கும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

சாருஸ்ரீராஜ் said...

ஓட்ஸ்ல் இன்னுமொறு வித்யாசமான ரெசிபி .... வாழ்த்துக்கள்

Unknown said...

ஓட்ஸில் நிறைய வெரைட்டி தெரிந்து வைத்திருக்கிங்க.. நல்லாயிருக்கு இந்த ரெசிப்பி..

S.A. நவாஸுதீன் said...

ஓட்ஸில் இன்னொரு புது ஐட்டம் ரெடி. தூள்

Jaleela Kamal said...

ஓட்ஸ் வைத்தே எல்லாம் செய்து பார்க்கீறீர்களா?

எத்தனை கிலோ குறைந்தீர்கள்.. ஹி ஹி, நோன்பு க‌ழித்து நானும் ஸ்டார் ப‌ண்ண‌லாம் என்று தான் கேட்கிறேன்.

SUFFIX said...

ம்ம்ம்ம்ம்ம்!!

Priya Suresh said...

Such a healthy and delicious dish, simply superb Menaga!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சாரு!!

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா!!

தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸுதீன்!!

Menaga Sathia said...

ஓஓ நீங்களும் டயட் இருக்க போகிறீங்களா.இருங்க.நல்லது.கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!


நன்றி ஷஃபிக்ஸ்!!

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!

Admin said...

பார்த்ததுமே சாப்பிடவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

Anonymous said...

மேனகா நீங்கள் வாங்கிய விருதுகளுக்கு வாழ்த்துக்கள்..எனக்கு கொடுத்த விருதிற்கு கோடி நன்றிகள்..உங்களுக்கு மென்மேலும் அதிக விருது வந்து சேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..



அன்புடன்,

அம்மு.

GEETHA ACHAL said...

மிகவும் நல்லா இருக்கு மேனகா...ஒரு கப் ப்ளிஸ்...

இதே போல பார்லியில் செய்து தான் இப்பொழுது வீட்டில் தினமும் சாப்பிடுகின்றேன்...

ஒட்ஸிலும் சுவையாக தான் இருக்கும்..

PriyaRaj said...

Soo many recipes in oats Wow ....grt

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு மேனகா...எங்க கத்துகிட்டிங்க இது எல்லாம்?

Menaga Sathia said...

நன்றாகயிருக்கும் சந்ரு,செய்து பாருங்கள்.நன்றி தங்கள் கருத்துக்கு.

Menaga Sathia said...

நன்றி அம்மு தங்கள் வாழ்த்துக்கு!!

உங்களுக்கு இல்லாததா கீதா,உங்க வாங்க செய்து தரேன்.பார்லியில் அடுத்த முறை டிரை பண்ணுகிறேன்.தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியாராஜ் தங்கள் கருத்துக்கு.

நன்றி சிங்கக்குட்டி தங்கள் கருத்துக்கு!!

அ. சாதிக் அலி said...

அருமையான ரெசிபி... நல்லா இருந்தது... வாழ்த்துக்கள்

01 09 10