Sunday 23 January 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் கீரை கொழுக்கட்டை/ Oats Keerai Khozhukattai

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
முருங்கை கீரை - 1/2 கப்
வெங்காயம் - 1
வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய்ப்பல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கொதிக்கும் போது கீரையைப்போட்டு நன்கு சுருள கிளறி பாசிப்பருப்பு சேர்த்து இறக்கவும்.

*இதனுடன் ஒட்ஸ்+தேங்காய்ப்பல் சேர்த்து பிசையவும்.தேவையானால் மட்டும் நீர் சேர்த்து பிசையவும்.

*உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
எந்த கீரை வேணுமானாலும் சேர்த்து செய்யலாம்.பருப்பை மலர வேகவைத்து சேர்க்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

miga asathana kozhukattai.....very useful for us

Chitra said...

Thank you for the recipe. :-)

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனகா,தேங்காய்ப்பால் சேர்த்திருப்பதால் டேஸ்ட் ரிச்சாக இருக்கும்.,

GEETHA ACHAL said...

மிகவும் சத்தான கொழுக்கட்டை...எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் ஒன்று...பகிர்வுக்கு நன்றி...

சாந்தி மாரியப்பன் said...

பார்க்க ரொம்ப நல்லாருக்கே..

ஆயிஷா said...

வித்தியாசமான ஒட்ஸ் கீரை கொழுக்கட்டை.

சசிகுமார் said...

சூப்பர்

Aruna Manikandan said...

sounds healthy and delicious...
Thx. for sharing :)

'பரிவை' சே.குமார் said...

Nalla khozhukkattai mathirui irukkey...

ஜீவா said...

நல்ல சத்தான கொழுக்கட்டை பகிர்விக்கு நன்றி ,நான் நன்றாக இருக்கிறேன் சகோ.
அன்புடன் ஜீவா

Thenammai Lakshmanan said...

நல்ல மினுமினுன்னு பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு மேனகா

vanathy said...

very healthy, Menaga.

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்புக்கு நன்றி மேனகா.

தெய்வசுகந்தி said...

புதுசு புதுசா அசத்தறீங்க மேனகா!!

KrithisKitchen said...

Kozhukatti romba nalla irukku... ennaiyil porikama aaviyil vega vaikiradhu arumai...

Menaga Sathia said...

நன்றி சவிதா!!

நன்றி சித்ரா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி அமைதி அக்கா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சசி!!

நன்றி அருணா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி சகோ!!

நன்றி தேனக்கா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி கீர்த்தி!!

Priya Suresh said...

Wat a healthy kozhukattais,romba naal achu saapitu,paathathume pasikuthu..

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

01 09 10