Sunday 22 May 2011 | By: Menaga Sathia

ப்ளவுஸ் அளவெடுத்து தைப்பது எப்படி / How to measure & Cut Sari blouse...

ப்ளவுஸ் எப்படி அளவெடுப்பது என்று பார்க்கலாம்.

மார்பு சுற்றளவு
இடுப்பு சுற்றளவு
ஷோல்டர்
கையின் நீளம்
கை சுற்றளவு
ஆர்ம்ஹோல் பகுதி
முன் கழுத்து அளவு
பின் கழுத்து அளவு
ப்ளவுஸின் உயரம்.
                                                              

இவைகளை செ.மீ அளவில் அளவுகளைக் குறித்துக் கொண்டு பேப்பரில் வரைந்து வெட்டி அந்த அளவை துணியில் வைத்து வரைந்து வெட்டினால ரொம்ப ஈஸியாக இருக்கும்.ஆர்ம்ஹோல் பகுதியை மட்டும் வளைவுகளை கவனமாக வெட்ட வேண்டும்.


DART பகுதிகளை சரியாக தைத்தால் தான் ப்ளவுஸ் அழகாக  இருக்கும்.எப்போழுதும் துணியை வெட்டும் போது குறித்த அளவை விட 1இங்ச் கூடுதலாக வைத்து வெட்ட வேண்டும்.அப்போழுதுதான் தைக்கும் போது சரியாக இருக்கும்.


A- B = ப்ளவுஸ் உயரம்+2"

A -C =மார்பு சுற்றளவு/8 +2"

C - D = B - L = மார்பு சுற்றளவு / 4+1.5"

A- I =மார்பு சுற்றளவு /3+1/2"

A - E =  ஷோல்டர்/2+1/4"

E - M = 1/2" or 3/4"

A - F =மார்பு சுற்றளவு /12+0.5"

A - H= முன் கழுத்து அகலம் விரும்பிய அளவில்

K -I & N - J = 1" Or 1.5"


K - O = மார்பு சுற்றளவு /12

O - P = P - Q = 1.5"

R - S = R - T = 1" OR 1.5"

E - E' = A - C

E' - V = 1"

E' - W = 2"

பின் பக்க அளவு
B - U = இடுப்பு சுற்றளவு / 4 +1.5"
 
PATTI Part -

A- B = ( K - B) - 1/2"
B - C = இடுப்பு சுற்றளவு/4+1.5"
C- D = ( L - N) - 1"

C -E =0.5"
                                               

கைப்பகுதி
A- B =கையின் நீளம்+1.5"

A - L =மார்பு சுற்றளவு/12+0.5"

L-F=மார்பு சுற்றளவு/8 +2.5"( அ) 3"

B-C=கை சுற்றளவு /2 +1"

B-M=2" + மடித்து தைக்க

E-C=1/2"

G = A TOF நடுப்பகுதி

G-J = 1"

I = G TO F நடுப்பகுதி

I-K =0.5"

N-F = 1"

A-H =1"

(A-H-J-N) Back Syce - பின் பக்க வளைவு

(A-G-K-N-F) Front Syce -முன் பக்க வளைவு

அடுத்து வரும் பகுதியில் எப்படி வெட்டி தைப்பது என்று பார்க்கலாம்...

 நான் முந்தைய பதிவில் பின்னிய குல்லா படத்தின் பேட்டர்ன்..3 - 4 வயது குழ்ந்தைகளுக்கான அளவு...
+ ஊசியை வலதுபக்கமாக வைத்து பின்ன வேண்டும்.

- ஊசியை இடது பக்கமாக வைத்து பின்ன வேண்டும்.

* கடைசியாக முடிக்கும் போது ஊசியை வலதுபக்கமாக இரண்டிரண்டாக  சேர்த்து பின்ன வேண்டும்.அப்படியே இடதுபக்கமாக பின்னி சாதாரண ஊசியில் உல்லன்நூலை கோர்த்து  பெரிய ஊசியை எடுத்துவிட்டு சின்ன ஊசியில் கோர்த்து இணைக்க வேண்டும்.


16 பேர் ருசி பார்த்தவர்கள்:

Vardhini said...

Useful info .. thx for sharing.

Vardhini
VardhinisKitchen

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு.
தனித்தனியாக காண்பித்து இருக்கலாம்.
புதுசா தைபப்வர்களுக்கு இன்னும் ஈசியாக இருக்கும்.

குல்ல்லாவை எடுத்து தனியா போடுங்கள்

Jaleela Kamal said...

நானும் நிறைய பேட்டன் போட்டு வைத்து எடிட் பண்ண நேரம் இல்லை

ஒன்லி கை மட்டும் தான் பிளாக்கில் போட்டு இருக்கேன்.

சசிகுமார் said...

பயனுள்ள தகவல்

துளசி கோபால் said...

என்ன மேனகா,

அடுப்படியை விட்டு வெளியே வந்தாச்சா:-)))))

இந்த இடுகை அப்படியே கொசுவத்தி ஏத்தி வச்சுருக்கு எனக்குள்!

பிடிச்சுருக்குப்பா!!!!!

calmmen said...

very useful

Priya Suresh said...

Superb post, useful for many of us..thanks for sharing..

Kurinji said...

Very useful post and thanks for sharing Meenga.
Kurinjikathambam

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வந்துட்டேன்...

MANO நாஞ்சில் மனோ said...

பெண்களுக்கு பயனுள்ள பதிவு...!

Unknown said...

ஆஹா நான் தேடிக்கொண்டுயிருந்த பக்கம் கிடைத்துவிட்டது.. இன்னும் கொஞ்சம் விளக்கமாகவும்.. விளக்க படம் போட்டு சொன்னால் ரொம்ப நல்ல புரியும் என்று நினைக்கிறேன்.. நான் அடுத்த மாசம் தான் க்ளாஸ் போக போறேன்..மேனகா

vanathy said...

ப்ளவுஸ் தைத்த பின்னர் அதன் படமும் போட்டிருக்கலாம். ஏதாவது பழைய துணியில் வெட்டிப் பழகணும் போல இருக்கே.

ஸாதிகா said...

அட ஸ்டிச்சிங்கிலும் அசத்தறீங்களே?சபாஷ்.

Mahi said...

தையல் கத்துக்க ரொம்ப நாளா ஆசை,ஆனா படம் எல்லாம் பார்த்தா கஷ்டமா தெரியுது மேனகா! ;)

குல்லா அழகா இருக்கு,பின்னுவதை நேரில் பார்த்தா நல்லா புரியும்னு நினைக்கீறேன்.

நல்ல பகிர்வு! நன்றி!

Mohideen said...

ஹாய் தோழிகளே , எனக்கும் தையல் கற்று கொள்ள ஆசை. ஆனால் நான் சவுதி யில் உள்ளேன். என்னால் எங்கும் போய் கற்றுக்கொள்ள முடியாது. எனக்கு 1 வயது குழந்தை இருப்பதால் சென்று கற்று கொள்ள முடிய வில்லை. வீட்டில் இருந்தே குழந்தைக்கு தைப்பது , துணி வெட்டுவது முதலியவற்றை கற்று கொள்ள முடியுமா ? தெரிந்தவர்கள் உதவுங்களேன் ப்ளீஸ் . அதுமட்டுமல்ல தையல் மிசின் வாங்கினால் எந்த மாதிரி மிசின் வாங்க வேண்டும். அதன் பெயர் மற்றும் சவுதியில் எந்த மாதிரி மிசின் கிடைக்கும் என்று தயவு செய்து கூறுங்கள். கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கள் please.
அன்புடன்,
மரியம்

Menaga Sathia said...

@மரியம்

தையல் ஒரளவுக்கு தெரிந்தால் தைப்பதற்கு ஈசியா இருக்கும்.மிக ஆசையாக இருந்தால் இனையத்தில் பார்த்து,முதலில் பேபரில் வரைந்து வெட்டி பழகிய பின் வேஸ்டான துணியில் வெட்டி தைக்க பழகலாம்.சவுதியில் என்ன கம்பெனி வாங்கலாம் என்று எனக்கு தெரியாது.உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி..முயன்றால் முடியாதது இல்லை.வாழ்த்துக்கள்!!

01 09 10