Saturday 22 August 2009 | By: Menaga Sathia

மெதுவடை /Medhu Vada

தே.பொருட்கள்:

முழு உளுந்து - 1 கப்
அரிசி - 1 டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1 சிரியது
பச்சை மிளகாய்- 2
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பில்லை கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*உளுந்து+அரிசி+ஜவ்வரிசி இவற்றை 3/4 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் தண்ணீரை வடித்து அதனுடன் பச்சை மிளகாய்+இஞ்சி+உப்பு சேர்த்து கெட்டியாக மைய அரைக்கவும்.

*அரைத்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம்+கறிவேப்பில்லை கொத்தமல்லி கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவைத்து அரைத்த மாவை வடைகளாக பொரிக்கவும்.

கவனிக்க :

மாவு தளர்த்தியாக இருந்தால் மைதாமாவு கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு வடைகளாக பொரிக்கலாம்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

R.Gopi said...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்னு போட்டுட்டு வெங்காயம் சேர்த்து இருக்கீகளே...எப்படி?

ஆனாலும், மெதுவடை என் ஃபேவரிட்தான்...

நன்றி மேனகாசத்யா....

Unknown said...

உளுந்த வடையில் இது ஒரு முறையா?//மாவு தளர்த்தியாக இருந்தால் மைதாமாவு கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு வடைகளாக பொரிக்கலாம்.// இந்த டிப்ஸ் அருமை

நட்புடன் ஜமால் said...

மெதுவா செஞ்சி சாப்பிடுவோம் :)

SUFFIX said...

படத்தை பார்த்தாலே தெரிகிறது, மெது வடை மொரு மொருன்னு இருக்கும்னு, எங்கள் வீட்டில் நோன்பு திறக்கும்போது பெரும்பாலும் மெது வடை + புதினா சட்னி செய்வாங்க.

SUFFIX said...

படத்தை பார்த்தாலே தெரிகிறது, மெது வடை மொரு மொருன்னு இருக்கும்னு, எங்கள் வீட்டில் நோன்பு திறக்கும்போது பெரும்பாலும் மெது வடை + புதினா சட்னி செய்வாங்க.

Menaga Sathia said...

ப்ராமணர்கள் தான் விரத நாட்களில் வெங்காயம்,பூண்டு சேர்க்கமாட்டாங்க.நாங்க சேர்ப்போம்.நீங்கள் பிராமணரா?

தங்கள் கருத்துக்கு நன்றி கோபி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

மெதுவா செய்து சொல்லுங்கள் ஜமால்,நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷஃபிக்ஸ்!!

Unknown said...

ஆஹா சூப்பரா மொரு மொருனு இருக்கு உங்க வடை..ஆனால் நான் செய்றது இவ்வளவு கிரிஸ்பியா இருக்காது ஏன்னா நான் அரிசி+ஜவ்வரிசி சேர்த்ததில்ல, எதுக்கு மாமி இது?கிரிஸ்பியா வரதானே?இதே போல இப்போ செய்ய போறேன்,கிரிஸ்பியா வரனும்னு விநாயகர்கிட்ட ஒரு மனுவ போட்டுட்டு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

எனக்கு பிடிச்ச வடை!! பேரு மெது வடைன்னாலும் நான் வேக வேகமா சாப்பிடுவேன்!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சூப்பர்!

Menaga Sathia said...

ஆமாம் மாமி அரிசி+ஜவ்வரிசி சேர்த்தால் மேலே பொறுபொறுப்பாகவும்,உள்ளே பஞ்சுமாதிரி மென்மையாவும் இருக்கும்பா.விநாயகர்கிட்ட மனு போட்டு செய்தீங்களே வடை எப்படி வந்தது?.தங்கள் கருத்துக்கு நன்றி மாமி!!

Menaga Sathia said...

//எனக்கு பிடிச்ச வடை!! பேரு மெது வடைன்னாலும் நான் வேக வேகமா சாப்பிடுவேன்!!!//உங்க கமெண்ட்டை படித்து சிரித்துவிட்டேன் ராஜ்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

நன்றி ஜோதிபாரதி தங்கள் கருத்துக்கு!!

UmapriyaSudhakar said...

ஹாய்,விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும், உங்க மெதுவடையும் தான் செய்தேன். வடை சூப்பரா இருந்துச்சி. ஆனா shape தான் சரியா வரல.

Menaga Sathia said...

கொழுக்கட்டையும்,வடையும் செய்துப்பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி,நன்றி உமா!!

01 09 10