Friday 18 September 2009 | By: Menaga Sathia

பார்லி டோக்ளா

தோழி கீதா ஆச்சல் ஒட்ஸில் டோக்ளா செய்திருந்தாங்க.எனக்கும் டோக்ளா சாப்பிட ஆசை வந்துடுச்சு,விடுவோமா நாமெல்லாம் என்ன சாப்பிட ஆசைப்படுறொமோ அதை செய்து சாப்பிட்டு தான் மறுவேலை.அதனால நான் பார்லியில் இந்த டோக்ளாவை செய்துப் பார்த்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.நீங்களும் செய்துப் பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க.

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
தயிர் - 1 கப்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை -சிறிது


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*முதலில் பார்லி குருணை+தயிர்+உப்பு+மஞ்சள்தூள் கலந்து குறைந்தது 3 அல்லது 4 மணிநேரமாவது ஊறவைக்கவும்.

*பின் அதனுடன் ஒட்ஸ்+பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.

*கலவை கெட்டியாக இருக்கும் கொஞ்சம் நீர் சேர்த்து மேலும் 1/2 மணிநேரம் ஊறவிடவும்.

*ஊறியதும் கலவை கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்க்கவும்.

*அதனை இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டில் அல்லது அலுமினியம் பார்சல் டிரேயில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவும்.

*வெந்து ஆறியதும் விருப்பமான வடிவத்தில் கட் செய்து தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து அதன்மேல் கொட்டவும்.

கவனிக்க:

பார்லி கண்டிப்பாக 4 மணிநேரமாவது ஊறினால்தான் வேகும்.கடைகளில் உடைத்த பார்லி கிடைக்கிறது.அதனை வைத்துதான் இந்த டோக்ளா செய்தேன்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

சூர்யா ௧ண்ணன் said...

ஓட்டு போடலாம்னு பாத்தா! ரொம்ப நேரமா பப்ளிஷ் செய்யாமலேயே இருக்கீங்க?..

Priya Suresh said...

Puthusa irruke intha dhokla, kalakuringa Menaga, naan ippo unga veetuku varalamanu yosikuren..

GEETHA ACHAL said...

கலக்குறிங்க மேனகா..பார்லி டோக்ளா மிகவும் சூப்பராக இருக்கு மேனகா..பார்க்கும் பொழுதே ஆசையாக இருக்கு...இன்று அம்மாவுக்கு இதனை செய்து கொடுக்க வேண்டியது தான்...நன்றி.

சூப்பர் போங்க...எனக்கு இங்கு முழு பார்லி தான் கிடைக்குது...

Nithya said...

super ponga.. barley la dokla kooda pannalamnu ungalukku mattum than thonum. Kalakal :)

Chitra said...

Superb menaga , barley dhokla is absolutely new to me.. HAve heard barley helps in tummy reduction ..But never tasted it..Looks nice !!

Menaga Sathia said...

இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு.நன்றி ப்ரதர் தொடர்ந்து ஒட்டு போட்டு வருவதற்க்கு.

Menaga Sathia said...

வாங்க வாங்க,எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க எதிர்பார்க்கிறேன்.தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா.

Menaga Sathia said...

அம்மாவுக்கு செய்துகொடுங்க கீதா.நன்றாக இருந்தது.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள் சித்ரா.நன்றாக இருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

PriyaRaj said...

Entha dhokla romba puthusa erukay ...Taste epadi erukum Menaga...1 plate parcel..

தேவன் மாயம் said...

புதுசு புதுசா கலக்குறீங்க ஹூம்!!

Malini's Signature said...

பார்லி டோக்ளா சூப்பர்... என்னப்பா எல்லாம் ஒரே டயட் ஜட்டமாவே கலக்குறீங்க!!!

Malini's Signature said...

ஆமாம் சிவானி குட்டி B'Day எப்பப்பா?

Menaga Sathia said...

ப்ரியா இங்க வீட்டுக்கு வாங்க செய்து தரேன்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி மருத்துவரே!!

Menaga Sathia said...

ஆமாம்பா நான் டயட்ல இருக்கேன்.அதான் டயட் குறிப்பு.தங்கள் கருத்துக்கு நன்றி ஹர்ஷினி அம்மா!!

வரும் திங்களன்று ஷிவானிக்கு பிறந்தநாள்ப்பா.27 தேதி கொண்டாடுறோம்.

Anonymous said...

சூப்பர் மேனகா.



அன்புடன்,

அம்மு.

UmapriyaSudhakar said...

ஹாய் மேனகா, எனக்கு டோக்ளா ரொம்ப பிடிக்கும்.ஆனா செய்ய தான் தெரியாது.இனிமே செய்துவிட வேண்டியது தான்.

UmapriyaSudhakar said...

உங்க குறிப்பு நல்லா இருக்கு. நான் இங்க குஜராத்தி friend வீட்டில சாப்பிட்டு இருக்கேன். அது இனிப்பாக இருக்கும். வெள்ளை எள்ளு சேர்த்து தாளித்து இருந்தாங்க.உங்களுக்கு அந்த method தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.

Admin said...

நீங்க யாரு.... நீங்க செய்தா சுவையாத்தானே இருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

பார்லியை வச்சு எத்தனை ஐட்டம்!!. கலக்குறீங்க சகோதரி

குறை ஒன்றும் இல்லை !!! said...

சபாஸ் சரியான போட்டி

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி அம்மு!!

Menaga Sathia said...

இனி டோக்ளா செய்து சாப்பிடுங்க உமா!!

இனிப்பு டோக்ளா பத்தி எனக்குத் தெரியல.ஒரிஜினல் டோக்ளா கடலைமாவில் செய்வாங்க.பார்லி+ஒட்ஸ்க்கு பதில் கடலைமாவு போட்டு செய்ங்க.அதான் ஒரிஜினல்.கடைசியாக தாளித்து கொட்டும் போது கடுகு கூட வெள்ளை எள் சேர்த்து தாளித்து சேர்க்கலாம்.நன்றாகவும் வாசனையாகவும் இருக்கும்.
தங்கள் கருத்துக்கு நன்றி உமா!!

Menaga Sathia said...

உங்க பாராட்டுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி+நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே!!

Menaga Sathia said...

//சபாஸ் சரியான போட்டி// ஹி ஹி நன்றி ராஜ்!!

சிங்கக்குட்டி said...

அருமை மேனகா :-))

Sanjai Gandhi said...

பார்க்கும் போதே சாப்டனும் போல இருக்கே.. :)

Priya dharshini said...

nalla eruku ethu diet recipe vaaram

01 09 10