Tuesday 11 May 2010 | By: Menaga Sathia

சின்ன வெங்காய சட்னி/Small Onion Chutneyஎங்க அம்மா செய்யும் இந்த சட்னி எனக்கு ரொம்ப பிடித்தமானது.அவரசத்துக்கு உடனே செய்துவிடலாம்.சூடான இட்லியுடன் இந்த சட்னியை தொட்டு சாப்பிட இன்னும் நிறைய சாப்பிட தோனும்.

தே.பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 15
புளி - 1 நெல்லிகாயளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
* மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்தையும் பச்சையாக மிக்ஸியில் மைய அரைக்கவும்.

*பின் நல்லெண்ணெயை நிறைய ஊற்றி கலந்து 1/2 மணிநேரம் கழித்து சாப்பிட நன்றாகயிருக்கும்.
 
பி.கு:
எண்ணெய் நிறைய ஊற்றினால்தான் காரம் தெரியாது.உடனே சாப்பிடுவதைவிட எண்ணெயில் ஊறிய பிறகு சாப்பிட நன்றாகயிருக்கும்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

பார்க்கவே அருமையாக இருக்கு.சிம்பிள்காகவும் இருக்கு.சூப்பர்.

Priya said...

எனக்கு ரொம்ப பிடிச்ச சட்னி. நீங்க சொன்ன மாதிரி சூடான இட்லிக்கூட சாப்பிட்டா நிறைய சாப்பிட சொல்லும் சட்னி இது.

Chitra said...

நான் இதை சிறிது எண்ணையில் வதக்கி, ஆறியபின் அரைத்து கொள்வேன். நீங்கள் சொல்லி இருப்பது, இன்னும் எளிய முறை. செய்து பார்க்கிறேன். பச்சை வாடை இருக்காது அல்லவா?

நாஸியா said...

adade.;. super recipe.. i am gonna try this tomorrow..

Unknown said...

I make it the same way. Super color!

ஜெய்லானி said...

//எங்க அம்மா செய்யும் இந்த சட்னி எனக்கு ரொம்ப பிடித்தமானது. அவரசத்துக்கு உடனே செய்துவிடலாம். சூடான இட்லியுடன் இந்த சட்னியை தொட்டு சாப்பிட இன்னும் நிறைய சாப்பிட தோனும்.//

உண்மைதான். நாலு இட்லி இடத்தில் ஆறு இட்லி உள்ளே போனதே தெரியாது. அவ்வளவு ருசி.

GEETHA ACHAL said...

மிகவும் சூப்பராக இருக்கின்றது...மிகவும் எளிதில் செய்யகூடியதாகவும் இருக்கின்றது...கண்டிப்பாக செய்து பார்கிறேன்...அருமை..

Jayanthy Kumaran said...

looks very colorful n delicious.

Priya Suresh said...

I think most of our moms signature dish is this chutney, even my mom's special is this chutney..makes me nostalgic..

Gita Jaishankar said...

Even my amma makes this chutney for dosas...like your said there is no count for the dosas that keep going in when we have this chutney ;)...looks good dear :)

Cool Lassi(e) said...

Athai urikka thaan porumai kidaiyaathu enakku.

Cool Lassi(e) said...

Idli, Dosai-kku poruthamana chutney sashiga!Pramatham!

Unknown said...

Chinna vengayam is always better than periya vengayam..New chutney recipe..

Nithu Bala said...

superb chutney..nanum seiven ana nalla ennai-la kaduku thalichu poduven..

வேலன். said...

எனக்கும் மிகவும பிடித்த சட்னி இது. சூடான இட்லியுடன் இந்த சட்னி என்றால் மேலும் இரண்டு இட்லியை சாப்பிட தோன்றும். எங்கள் வீட்டில் அம்மியில் தான் இந்த சட்னியை அரைப்பார்கள்.மிக்ஸியில் முயன்று பார்க்கவில்லை. வாழ்க வளமுடன்.வேலன்.

vanathy said...

மேனகா, நல்லா இருக்கு உங்கள் ரெசிப்பி. செய்து பார்க்க வேண்டும்.

Kanchana Radhakrishnan said...

அருமையாக இருக்கு.செய்து பார்க்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

எனக்கு ரொம்ப பிடிச்ச சட்னி மேனகா.
பிரஷண்ட் சூப்பர்

Priya dharshini said...

Ethu en kanavarukku pidithathu...

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்...

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சித்ரா!! சின்ன வேங்காயத்தில் அரைக்கும் போது பச்சை வாசனை வராது,பெரிய வெங்காயத்தில் அரைத்தால் தான் பச்சை வாசனை வரும்...

நன்றி நாஸியா!! செய்து பாருங்கள்,பிறகு அடிக்கடி இதைதான் செய்வீங்க...

Menaga Sathia said...

நன்றி திவ்யா!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி கீதா!! செய்து பாருங்கள்...

நன்றி ஜெய்!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!! இந்த சட்னி எல்லா அம்மாக்களின் ஸ்பெஷல் போல...

நன்றி கூல்!! சின்ன வெங்காயத்தை 1/2 மணிநேரம் தன்ணீரில் ஊறவைத்தபிறகு தோல் உரிக்க ஈஸியாக இருக்கும்...

நன்றி ரம்யா!!

நன்றி நிது!!தாளித்து செய்தாலும் நன்றாகயிருக்கும்,அடுத்தமுறை செய்து பார்க்கிறேன்...

Nathanjagk said...

ஹலோ? எதுவும் மறந்திட்டீங்களா?
தாளிக்க வேணாமா? அப்படியே சாப்பிடறதா??

Menaga Sathia said...

நன்றி சகோ!! எங்க வீட்டிலும் அம்மியில்தான் அரைப்பாங்க,ஆனா இங்க அம்மியில் அரைக்க முடியாதே...

நன்றி வானதி!! செய்து பாருங்கள்...

நன்றி காஞ்சனா!!செய்து பாருங்கள்...

நன்றி மலிக்கா!!

Menaga Sathia said...

வருகைக்கும்,வலைச்சரத்தில் குறிப்பிட்டதிற்க்கும் மிக்க நன்றி சேட்டை!!

நன்றி ப்ரியா!!

நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

//ஹலோ? எதுவும் மறந்திட்டீங்களா?
தாளிக்க வேணாமா? அப்படியே சாப்பிடறதா??// தாளிக்க தேவையில்லை,விருப்பட்டால் தாளித்துக்கொள்ளலாம்.நன்றி சகோ!!

Jaleela Kamal said...

ஈசியாக இருக்கு ஆனால் எண்ணை அதிகமாக சேர்க்கனும் என்றால் இட்லி மிளகாய் பொடிக்கு சேர்ப்பது போலவா?

SathyaSridhar said...

Menaga, chinna vengaya chutney en amma seivanga super ah irukkum unga chutney paartha apram enakku antha gyabagam vanthuduchu...nalla colourfullah irukku pa.

geetha said...

மேனு!
நான் புதுசா எதுவும் சொல்லப்போறதில்லை. ஏனா, என் அம்மாவும் அடிக்கடி செய்யும் சட்னி இது.
வெள்ளைபணியாரத்துக்கும் சூப்பரான ஜோடி. இட்லி, தோசைக்கும் ஈடு கொடுக்கும் சட்னி இது
நல்லதொரு குறிப்பு நன்றி!.

Menaga Sathia said...

//ஈசியாக இருக்கு ஆனால் எண்ணை அதிகமாக சேர்க்கனும் என்றால் இட்லி மிளகாய் பொடிக்கு சேர்ப்பது போலவா?// அதைவிட இன்னும் அதிகமா சேர்த்தால்தான் நன்றாகயிருக்கும்.நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சத்யா!!

நன்றி கீதா!!

01 09 10