Monday 31 May 2010 | By: Menaga Sathia

சிக்கன் கட்லட்

தே.பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடித்த ஒட்ஸ் - தே.அளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*சிக்கனில் வரமிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+உப்பு+கரம் மசாலா+சிறிதளவு நீர் விட்டு 2 விசில் வரை வேகவைக்கவும்.

*சிக்கனில் நீர் இருந்தால் அதனை வற்றும் வரை நன்கு பிரட்டவும்.

*ஆறியதும் கையால் நன்கு உதிர்த்து வெங்காயம்+பச்சைமிளகாய்+உருளைக்கிழங்கு+புதினா கொத்தமல்லி+தேவையானளவு உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும்.

*தளர்த்தியாக இருந்தால் பொடித்த ஒட்ஸினை சிறிதளவு சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.

*தேவையானளவில் உருண்டையாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya said...

இந்த குறிப்பு ரொம்ப‌ சிம்பிளா இருக்கு....சூப்பர்ப்!

ஸாதிகா said...

யம்ம்ம்மி..கூடவே ஒரு முட்டையை அடித்து சேர்த்தால் இன்னும் சாப்ட் ஆகவும்,சுவையாகவும்,உதிர்ந்துகொள்ளாமலும் இருக்கும்.

Priya Suresh said...

Cutlet looks yummy, rendu intha pakkama anupi vidunga:p...

Prema said...

wow very tempting recipe...luks wounderfull...very simple but delicious.

எல் கே said...

voted and escape

Jayanthy Kumaran said...

yum..wat a delicious cutlet...very impresed with your recipe.

Asiya Omar said...

மேனகா சூப்பர்.

SathyaSridhar said...

Menaga,,Chicku cutlet nalla seithurukeenga paa nalla moruvala irukku.Pakum poedhe saapdanum poela irukku dear.

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி ஸாதிகாக்கா!!அடுத்தமுறை முட்டை சேர்த்து செய்து பார்க்கிறேன்..

நன்றி ப்ரியா!! நிறைய கட்லட் உங்களுக்கு அனுப்பிவிட்டாச்சு...

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

ஒட்டுக்கும்,வருகைக்கும் நன்றி எல்கே!!

நன்றி ஜெய்!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சத்யா!!

GayathriRaj said...

Hey first time to ur blog and lovely one....but sorry i dnt knw tamil....so not able to tell abt the recipe...but the pic was awesome...

ஜெய்லானி said...

இந்த நாலு பீஸ் மட்டும் போதும் எனக்கு அப்படியே எடுத்துக்கிறேன்..
:-))

பனித்துளி சங்கர் said...

அந்த 4 பீஷ்ல எனக்கு ரெண்டு ஆமா சொல்லிட்டேன் . மிகவும் அருமையாக பதிவிடுகிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

Menaga Sathia said...

முதல்வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி காயத்ரி!!

தாராளமா எடுத்துக்குங்க,நன்றி ஜெய்லானி!!

நன்கு கட்லட்டுகளுமே எடுத்துக்குங்க..நன்றி சங்கர்!!

நன்றி சசி!! உங்களுக்கு பதில் உங்க பதிவுலேயே போட்டுள்ளேன்...

shriya said...

Nice cutlet sooper. Looks soo perfect.

Menaga Sathia said...

நன்றி ஸ்ரியா!!

geetha said...

ஹாய் மேனு!
ரொம்ப நல்ல குறிப்பு. நானும்கூட இப்படித்தான் செய்வேன். ஆனா, முட்டையின் வெள்ளைக்கரு,ப்ரட்க்ரம்ஸில் புரட்டுவேன்.

Anonymous said...

Healthy One.
எங்க ஊர்ல, இறைச்சியில் கொஞ்சம் கூட தண்ணி இல்லாமல் எடுத்து, உங்க உருளைக்கிழங்கு வறுவல்ல போட்டு, உருண்டையாக்கி, முட்டையில் / ஆல் பேப்பஸ் மா கரைசலில் தோய்த்து, பிரட் தூளில் பிரட்டி பொரிப்பார்கள். பிரிஜில் வைக்கத் தேவை இல்லை. ஓட்ஸ் போடறது புதுசு. தோசைக்கல்லில் போடற நல்ல பழக்கம் எல்லாம் எங்ககிட்ட இல்லை. நல்லா எண்ணெய் ஊத்தி பொரிச்சு சாப்பிட்டுட்டு அப்புறம் மாங்கு மாங்குனு எக்சர்சைஸ் பண்ணுவோம். =((

Canned Tuna Flakes கூட போடலாம். இல்லேன்னா மீனை உதிர்த்தி கூட போடலாம். அம்மா, சில சமயம் சோயா மீற், பச்சை பட்டாணி பீன்ஸ், காரட் எல்லாம் குட்டி குட்டியா அரிந்து போடுவார்கள்.

Menaga Sathia said...

நன்றி அனாமிகா!! நீங்க சொன்னமாதிரிதான் நானும் செய்வேன்...

01 09 10