Wednesday 11 August 2010 | By: Menaga Sathia

பாகற்காய் பொடிமாஸ்

இந்த பொடிமாஸ் கொஞ்சம் கூட கசப்பே தெரியாது..
தே.பொருட்கள்:
பாகற்காய் - 4
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் -1
பொடியாக அரிந்த தக்காளி -1
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை:
* பாகற்காயை விதை நீக்கி அரிந்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொன்முறுகலாக வறுத்துக்கொள்ளவும்.

*கடலைப்பருப்பை 1மணிநேரம் ஊறவைத்து சோம்பு+காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த பருப்பை போட்டு உதிரியாக வரும்வரை கிளறவும்.

*பாகற்காயையும்,கடலைப்பருப்பையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+மஞ்சள்தூள்+உப்பு போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் பாகற்காய் கலவையை போட்டு நன்கு கிளறி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
Sending this recipe to CWS- Fennel seeds Event by Priya.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

விக்னேஷ்வரி said...

வித்தியாசமா இருக்கே. நான் முயற்சிக்கிறேன்.

Jayanthy Kumaran said...

Looks tasty as well as yummy...

Pavithra Srihari said...

superaa irukkae ... try pannida vendiyathu thhaaan

Asiya Omar said...

நிச்சயம் செய்து பார்க்க வேண்டும்.அருமை.

Asiya Omar said...

நான் அன்பாய் தந்த விருதை இணைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

Prema said...

lovely ,very healthy recipe,tempting too...

சாருஸ்ரீராஜ் said...

looks simple and delecious , i will try it.

Menaga Sathia said...

நன்றி விக்கி!! செய்து பாருங்கள்,ரொம்ப நல்லாயிருக்கும்..

நன்றி ஜெய்!!

நன்றி பவித்ரா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி சாரு அக்கா!!

தெய்வசுகந்தி said...

looks good. i'll try this!!

athira said...

Very nice and a different dish

Mahi said...

சோம்பு,கடலைப்பருப்பு சேர்ப்பது புதிதா இருக்கு..கீதா கூட இதே ரெசிப்பி செய்திருந்தாங்கதானே மேனகா?

அடுத்த முறை பாகற்காய் வாங்கும்போது செய்துபார்க்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

எனக்கு ரொம்ப பிடிச்சது

Krishnaveni said...

looks great, bitter gourd is my fav, delicious

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

பாகற்காய் எனக்கு ரொம்ப பிடிச்ச காய்... கண்டிப்பா செய்து பார்கிறேன்..
படமும் சூப்பர்.. பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

Naan engal araiyil adikkadi pavakkaai podimaas seivathunndu. anaal kadalaipparuppu araiththu poduvathu enpathu puthidhu. seithu parkirean.

Akila said...

its really a different one.. book marked this one tooo....

vanathy said...

நல்லா இருக்கு.

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!செய்து பாருங்கள்...

நன்றி அதிரா!!

நன்றி மகி!! ஆமாம் கீதாவும் இதே குறிப்பைதான் செய்திருந்தாங்க...

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஆனந்தி!! செய்து பாருங்கள்,குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க...

நன்றி சகோ !! இம்முறையில் செய்தால் கசப்பே தெரியாது..

நன்றி அகிலா!!

நன்றி வானதி!!

gayu said...

i like pavaikka, pavaikka la ippadium seithu pakalama!...

kandippa na try pannuven

01 09 10