Sunday 23 May 2010 | By: Menaga Sathia

மாம்பருப்பு குழம்பு

வெயில் காலத்தில் மாங்காயை பக்கவாட்டில் மட்டும் பிளந்து உப்பில் போட்டு நன்கு காயவைத்து உபயோகப்படுத்துவோம்.அந்த மாங்காயின் சதைப்பகுதியை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் கொட்டையை மட்டும் எடுத்து சமைக்க பயன்படுத்தலாம்.இந்த மாம்பருப்பு குழம்பு வயிற்றுப்போக்கு இருக்கும் சமயத்தில் உண்டால் நல்லது.

தே.பொருட்கள்:
காயவைத்தெடுத்த மாங்கொட்டை - 2
புளிகரைசல் - 1 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*மாங்கொட்டையை சுத்தியால் தட்டி பொடிக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய் விட்டு மாங்கொட்டை+சீரகம்+மிளகு+சின்ன வெங்காயம்+பூண்டு+கறிவேப்பிலை அனைத்தையும் வதக்கி மைய அரைக்கவும்.

*புளிகரைசலில் உப்பு+மிளகாய்த்தூள்+அரைத்த விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய்விட்டு வடகத்தை போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
Sending this recipe to Shabitha's CELEBRATING MOM event

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

நன்றி மேனகா. தற்போதைய சீசனுக்கு எத்த சமையல் குறிப்பு

Asiya Omar said...

இந்த குழம்பை இப்ப தான் கேள்விபடுறேன்.சேர்க்கும் பொருட்கள் நிச்சயம் சுவையை தரும்.

vanathy said...

மேனகா, நல்ல ரெசிப்பி. அருமையா இருக்கு.

Chitra said...

நாவில் நீர் ஊறுது....

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி ஆசியாக்கா!! மிகவும் நன்றாகயிருக்கும் கொஞ்சம் துவர்ப்பு சுவையுடன்...

நன்றி வானதி!!

நன்றி சித்ரா!!

ஜெய்லானி said...

மாம்பழ அல்வா தெரியும் , இது குழம்பா!!! கல கலன்னு சும்மா கலக்குறீங்களே!!!!

Umm Mymoonah said...

Menaga, never heard of this recipe. I'll definitely try when i go back to India. Excellent recipe. Thank you for sharing, following you..

ஸாதிகா said...

மாம்பருப்பில் குழம்பு புதுமைதான்

GEETHA ACHAL said...

இதுவரை இப்படி ஒரு குழம்பினை கேள்விபட்டதே கிடையாது...சூப்பராக இருக்கின்றது...அருமை...

shriya said...

I am drooling here. Yummmyyyyyyy!!!!

நட்புடன் ஜமால் said...

எதையும் வீணாக்காமல் குழம்பு

ம்ம்ம் ... அருமை சகோதரி.

துவர்ப்பு தானே அது , உ(கு)டலுக்கு ரொம்ப நல்லது

Ms.Chitchat said...

Interesting maamparuppu kozhambu,new to me.

Anonymous said...

நல்லா இருக்கு செய்ஞ்சு பார்கிறேன் நன்றி

SathyaSridhar said...

Maamparuppu kulambu romba nalla seithurukeenga paa, nalla tips koduthurukeenga veyyil la easy ah kaijudum easy ah samaichudalaam.

விக்னேஷ்வரி said...

அட, வித்தியாசமா இருக்கே. சூப்பர்.

Shama Nagarajan said...

arumaiyana kulambu

Jayanthy Kumaran said...

Dear Menaga,
Some awards are waiting for you in my blog. Plz stop by to collect them.

Gita Jaishankar said...

It had been a long time since I had this kozumbu...I love this Menaga...looks very delicious dear :)

Mahi said...

வித்யாசமான ரெசிப்பி மேனகா!! இதுவரைக்கும் நான் மாம்பருப்பு சாப்பிட்டதே இல்லை..குழம்பு சூப்பரா இருக்கு.

Menaga Sathia said...

நன்றி Umm Mymoonah!! நிச்சயம் செய்து பாருங்கள்..

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி கீதா!!

நன்றி ஸ்ரியா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! நீங்கள் சொல்வது போல் ரொம்ப நல்லதுதான்...

நன்றி சிட்சாட்!!

நன்றி சந்தியா!! செய்து பாருங்கள்..

நன்றி சத்யா!!

Menaga Sathia said...

நன்றி விக்கி!!

நன்றி ஷாமா!!

விருதுக்கு மகிழ்ச்சி+நன்றி ஜெய்!!

நன்றி கீதா!!

நன்றி மகி!!

Priya Suresh said...

Arumaiyana kuzhambu, yenna pidichathu..

01 09 10