Wednesday 2 June 2010 | By: Menaga Sathia

பூண்டு சட்னி/Garlic Chutney

தே.பொருட்கள்:

பூண்டுப்பல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 10 - 15
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*காய்ந்த மிளகாய்+உப்பு+புளி+கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைக்கவும்.

*பின் பூண்டுப்பல் சேர்த்து மைய அரைத்து நல்லெண்ணெய் கலக்கவும்.

*சுடான இட்லியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
 
பி.கு:
புளியும் எண்ணெயும் அவரவர் சுவைக்கு தகுந்தபடி சேர்க்கவும்.தண்ணீர் விட்டு அரைக்ககூடாது.அதற்க்கு பதிலாக எண்ணெய் விட்டு அரைக்கவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Umm Mymoonah said...

Poondu chutney romba nalla irukku Menaga.

எல் கே said...

enaku romba pidikum ithu thanks

Asiya Omar said...

மேனகா பூண்டை அப்படியே அரைப்பதால் பச்சை வாடை இருக்காதா?வதக்க வேண்டாமா?ஆனால் அருமையாக இருக்கு.

Nithu Bala said...

Enakku anupugha..superb recipe..

Anonymous said...

நான் இந்த பூண்டு சட்னியில் வறுத்த தேங்காய் துருவல் சேர்ப்பேன் .நீங்களும் செய்ஞ்சு பாருங்க நல்லா இருக்கும் .

Prema said...

poondu chutney luks too gud...want to try it immediately...thanks for posting.

Priya said...

mm.. looks delicious!

geetha said...

பூண்டுச்சட்னி எனக்கும்கூட ரொம்ப இஷ்டம். ஆனா, பச்சையாய் அரைப்பதால் நல்லெண்ணெய் கொஞ்சம் சூடு பண்ணி ஊற்றிடுவேன்.
அத்துடன், கடுகு கொஞ்சம், உளுத்தம்பருப்பு நிறையவும் சேர்ப்பேன்.
நன்றி மேனு!

மனோ சாமிநாதன் said...

பூண்டு சட்னி நன்றாக இருக்கிறது மேனகா! பொதுவாய் இதை ஊரில் அம்மியில் அரைப்பார்கள்.இட்லிக்கு அத்தனை ருசியாக இருக்கும்!!

vanathy said...

மேனகா, சூப்பரா இருக்கு. நான் இது வரை செய்ததில்லை.

Menaga Sathia said...

நன்றி Umm Mymoonah!!

நன்றி எல்கே!!

லேசாக பச்சை வாசனை வரும்தான்.ஆனால் சாப்பிட நன்றாக இருக்கும்.வதக்கி செய்தால் சுவை மாறுபடும்.நன்றி ஆசியாக்கா!!

நன்றி நிது!! உங்களுக்கு அனுப்பியாச்சு...

நன்றி சந்தியா!! நிச்சயம் அடுத்தமுறை செய்யும் போது தேங்காய் சேர்த்து அரைக்கிறேன்.இன்னும் நன்றாகயிருக்கும் என நினைக்கிறேன்...

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!! நிச்சயம் நீங்க சொன்னமாதிரி செய்து பார்க்கிறேன்.எண்ணெய் சூடு செய்து ஊற்றினால் பச்சை வாடை வராதுன்னு நினைக்கிறேன்...

நன்றி மனோம்மா!! ஆமாம் நீங்கள் சொல்கிற மாதிரி அம்மியில் அரைத்தால் அதன் சுவையே தனிதான்...

ஸாதிகா said...

ம்ம்...வித்தியாசமான சட்னி.அசத்தறீங்க மேனகா.

தெய்வசுகந்தி said...

Looks Yummy!!!!!!!!

ஜெய்லானி said...

எனக்கு பிடித்த ஐட்டம் ...இதை படிக்கும் போதே ஜொள் வடிந்து கீ போர்டை நனைத்து விட்டது . பழைய நினைவுகள்......

SathyaSridhar said...

Hmm,,poondu chutney nalla seithurukeenga colour ah paathalae saapdanum poela irukku,,sudaana idli kuu super ah irukkum.

Pavithra Srihari said...

poondu chutney looks yumm!!!guests at home , will come back soon and catch up with all ur recipes that i missed

GEETHA ACHAL said...

மிகவும் சூப்பராக் இருக்கின்றது..பூண்டு சட்னியுடன் இட்லியினை சாப்பிட சுவையாக இருக்கும்..இன்று உங்கள் தக்காளி பச்சைமிளகாய் சட்னி செய்தாச்சு...சூப்பர்ப்...

Trendsetters said...

very new to me..nice color

Menaga Sathia said...

நன்றி வானதி!! செய்து பாருங்கள்,உங்களுக்கு பிடிக்கும்...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சுகந்தி!!

நன்றி ஜெய்லானி!!

Menaga Sathia said...

நன்றி சத்யா!!

நன்றி பவித்ரா!!

நன்றி கீதா!! தக்காளி சட்னி செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சியும்,நன்றியும்...

நன்றி Trendsetters!!

பனித்துளி சங்கர் said...

ரென்டு இட்லி வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன் . நல்ல இருக்குங்க . பகிர்வுக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

எனக்கும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி மேனகா

Ahamed irshad said...

Different... Nice

Jaleela Kamal said...

பூண்டு சட்னி ரொம்ப நல்ல இருக்கு, எனக்கு தோசைக்கு தொட்டு கொள்ள தான் பிடிக்கும்.

Priya Suresh said...

Spicy chutney looks superb..

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

நன்றி அக்பர்!!

நன்றி அஹமது!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ப்ரியா!!

Anonymous said...

ஹி ஹி. ஆஷ் கண்டுபிடிச்ச ஒரு மெதட் நீங்க செய்றதை எல்லாம் கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டு செஞ்சிட்டு அப்புறம் கொஞ்சம் அடுப்பில கொதிக்க வைக்கிறது. வாடை வருகிறதில்லை. ஆனால் கொஞ்சம் தண்ணி போட்டு அரைப்போம். சட்னிக்கு போடறது மாதிரி.

ஒரு வாட்டி பொரிச்சு செய்தோம். பூண்டு அரைபடவே இல்லை. கொஞ்சம் முழுசாக இருந்துச்சு. எண்ணெய் போட்டு அரைக்கணுமா?

முன்ன எல்லாம் (புளொக் வர முன்னர்) சத்துக்கு பசிக்கு சாப்பிட்டோம். இப்ப நல்லா ருசிக்கு சாப்படறோம். எல்லா சமையல் புளொக்கர்சுக்கும் கண்டனங்கள். =))

Menaga Sathia said...

பூண்டு சட்னியில் தேங்காய் சேர்த்து அரைத்ததில்லை.பூண்டை பொரிச்சு செய்தா அரைபடாது.லேசாக வதக்கினால் போதும்.இப்போழுது நீங்களே சமைத்து சாப்பிடுவது சந்தோஷம்.நன்றி அனாமிகா!!

01 09 10