Sunday 27 June 2010 | By: Menaga Sathia

அவகோடா அடை

தே.பொருட்கள்:

அவகோடா - 1
கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு - தலா 1/4 கப்
அரிசி - 1/4 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பருப்பு வகைகளை ஒன்றாகவும்+அரிசியை தனியாக ஊறவைக்கவும்.

*ஊறியதும் அரிசியுடன் சோம்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து 3/4 பாகம் அரைபட்டதும் உப்பு+பருப்பு வகைகள்+தோல் விதை நீக்கிய அவகோடாவையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு அரைத்து வெங்காயத்தை போட்டு லேசாக வதக்கி அரைத்த மாவில் தேங்காய்த் துறுவலுடன் சேர்த்துக் கலக்கவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை விட்டு மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் ஊற்றி இரு ப்புறமும் வேகவிட்டு எடுக்கவும்.

*தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராகயிருக்கும்.

Sending this recipe to "Veggie/Fruit A Month - Avocado" By Priya.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

அவகோடாவில் அடை.அசத்துங்கோ மேனகா.

தெய்வசுகந்தி said...

புதுசா இருக்குது மேனகா!!! Healthy!!

Jayanthy Kumaran said...

Healthy n nice....!
really delicious yaar...!

ஜெய்லானி said...

அவகோடாவில் அடையாஆஆஆஆ..கலக்கல்..!!

Niloufer Riyaz said...

avacadovil adai, migavum pudhumay.
arumayana recipe

Unknown said...

nalla idea.. parkavey nalla irukku.. parcel anuppunga..

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி ஜெய்!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி நிலோபர்!!

Chitra said...

super idea! You are very smart!

ப்ரியமுடன் வசந்த் said...

மேடம் நம்ம நாட்டுப்புறசமையல் பத்தி ஒரு போஸ்ட் ப்ளீஸ்...

shriya said...

Nice recipe, something very innovative and delicious.

நட்புடன் ஜமால் said...

சகோ அநியாயத்துக்கு காலையிலையே என்னை அழுவ உடுறீங்க

எங்க போவேன் நான் அவகோடாவுக்கு

அதற்கு பிறகுன்னா அடைக்கு யோசிக்கனும்

-----------------------

really I wanna try this ...

Kanchana Radhakrishnan said...

புதுசா இருக்குது.

Padhu Sankar said...

Yummy adai with avocoda

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நல்லா இருக்குங்க

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!! பார்சல் தானே அனுப்பிட்டா போச்சு....

நன்றி சித்ரா!!

நன்றி வசந்த்!! இந்த வாரத்தில் நாட்டுப்புற சமையல் போடுகிறேன்...அப்புறம் அந்த ப்ரொபைல் போட்டோ கிளிகள் சூப்பர்ர்..

நன்றி ஸ்ரியா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! செய்து பாருங்கள்..அவகோடா இந்தியாவில் ரிலையன்ஸ்,பழமுதிர்சோலை கடைகளில் கிடைக்கிறது...இப்போ எல்லா இடத்திலயும் கிடைக்குது அண்ணா...

நன்றி காஞ்சனா!!

நன்றி பது!!

நன்றி அக்பர்!!

athira said...

Nice Recipe.

எல் கே said...

sorry for late comment as i was out of station not able to comment :)))

Mahi said...

வழக்கம்போல புது ரெசிப்பி! நல்லா இருக்கு மேனகா!

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

பரவாயில்லைங்க, உங்களால் முடியும் போது கமெண்ட் போடுங்க.நன்றி எல்கே!!

நன்றி மகி!!

vanathy said...

மேனகா, சூப்பர். அவக்காடோ சேர்த்தால் கல்லுடன் ஒட்டாமல் வருமா???

01 09 10