Wednesday 8 September 2010 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி தேங்காய் சட்னி/Mango Ginger Coconut Chutney

சாதரணமாக சட்னி அரைக்கும் போது இஞ்சி உபயோகபடுத்துவோம்.அதற்கு பதில் மாங்காய் இஞ்சி சேர்த்து அரைத்தால் மாங்காய் வாசனையுடன் சட்னி அருமையாக இருக்கும்.அதுமட்டுமில்லாமல் அரைக்கும் போது தண்ணீருக்கு பதில் தேங்காய் உடைத்த நீரை சேர்த்து அரைத்தால் இன்னும் ருசியாக இருக்கும். (தேங்காய் உடைத்த நீரை சுவைத்து பார்த்த பின் அரைப்பது நல்லது.)தே.பொருட்கள்:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 3
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மாங்காய் இஞ்சி - 1 துண்டு
தேங்காய் உடைத்த நீர் - தேவையானளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
செய்முறை:
*முதலில் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து பின் தேங்காய்துறுவல்+மாங்காய் இஞ்சி+உப்பு+கொத்தமல்லித்தழை சேர்த்து தேங்காய் உடைத்த நீர் கெட்டியாக மைய அரைக்கவும்.

*கடைசியாக சின்ன வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்தெடுக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா இருக்கு.

culinary tours worldwide said...

nice do more recipes i like ur blogger u have good fur

சாருஸ்ரீராஜ் said...

nalla irukku menaga mangai inchi kidaikum pothu senchu parkuren

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது மேனகா...அம்மா வந்து இருக்கும் பொழுது மாங்காய் இஞ்சி சிறிது சேர்த்து செய்தாங்க...அருமையாக இருந்தது...ஆனா தேங்காய் தண்ணீர் சேர்ப்பது புதுசு...

Shama Nagarajan said...

different tasty chutney

சசிகுமார் said...

சூப்பர் அக்கா எப்பவும் போல வாழ்த்துக்கள். சோகத்துடன் திரும்பி செல்கிறேன் ஏன்னு கேட்கறிங்களா வெறும் சட்னியை எப்படிக்கா சாப்பிடுவது பசியோடு செல்கிறேன் ஹி ஹி ஹி

Mahi said...

தேங்காய்தண்ணீரை நானும் அவ்வப்பொழுது சேர்ப்பேன். நல்லா இருக்கும். மாங்கா இஞ்சி இன்னும் வாங்கியதில்லை,வாங்கிடறேன் சீக்கிரமா.:)

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி மோகன்!!

நன்றி சாரு அக்கா!! கிடைத்ததும் செய்து பாருங்கள்...

நன்றி கீதா!! தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்து பாருங்க,ரொம்ப நல்லாயிருக்கும்....

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி சசி!!பசியோடு போறீங்களா,ஏற்கனவே பஜ்ஜி குறிப்பு கொடுத்திருக்கேனே,அதோடு சேர்த்து சாப்பிடுங்க...

நன்றி மகி!! சீக்கிரம் இந்த இஞ்டி வாங்கி சமைத்து பாருங்க,அப்புறம் அடிக்கடி இதைதான் வாங்குவீங்க...

Krishnaveni said...

super chutney, looks delicious. liked your maangaa ingi kuzhambu as well yummy

Padma said...

Nice tangy and yummy chutney.

Nithu Bala said...

super idea menaka..ethu varaikum manga injiyai chutney-la use pannanumnu thoninathey illai..thanks for sharing this Dear..

eventsku entry anuppunga marakama:-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Wowww.. looking yummy.. ingae maangaai inchi kidaikkum.. seithu paarkkanum.. (saapidanum)

thankss for the recipe.. :)

'பரிவை' சே.குமார் said...

அருமையா இருக்கு.

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் வித்தியாசமான சட்னியாக இருக்கிறது மேனகா! மாங்காய் இஞ்சி கிடைக்கும்போது அவசியம் செய்து பார்க்கிறேன்!

Jaleela Kamal said...

எப்போது பொட்டு கடலை துவையலுக்கு இஞ்சி சேர்த்து தான் செய்வேன்ன்ன் அடுத்த முறை மாங்காய் இஞ்சி சேர்த்து தேங்காய் தண்ணீரில் செய்து பார்கக்னும்.

Priya Suresh said...

Sometime i do add ginger in chutney, adding mango inji and coconut water sounds very interesting, next time try pannida vendiyathu than..

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி பத்மா!!

நன்றி நிது!! செய்து பாருங்க மாங்காய் வாசனையுடன ருமையாக இருக்கும்.நிச்சயம் உங்க ஈவெண்டிற்க்கு ரெசிபி அனுப்புகிறேன்..

நன்றி ஆனந்தி!! செய்து பாருங்கள்,அப்புறம் அடிக்கடி இப்படிதான் செய்வீங்க..

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி மனோ அம்மா!! கிடைக்கும் போது செய்து பாருங்கள்...

நன்றி ஜலிலாக்கா!! செய்து பாருங்கள்..

நன்றி ப்ரியா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

vanathy said...

super recipe.

Vijiskitchencreations said...

நல்ல ரெசிப்பி. நானும் இப்ப தான் கேள்விபடுகிறேன். தேங்காய் தண்ணிரில் செய்வது. நல்ல ஐடியா.

Unknown said...

samaikka

Sujaa Sriram said...

Wow...

I really like your recipes and blog space..... wow அதுவும் தமிழ்ல பாக்கும் போது அழகா இருக்கு பா .....


Great Collections yar.... Good Learning spot for my creations dear...

please do follow my blog and post your valuable comments...

Art Blog:http://yenkaivannam.blogspot.com
Food Blog:http://preethisculinary.blogspot.com

Muruchandru said...

நல்ல சமையல் விவரங்களுக்கு நன்றி.

01 09 10